மொத்தப் பக்கக்காட்சிகள்

Digital Clock + Date

11/16/2011

முறையான கல்வி

கல்வி என்பது இரண்டுவகைப் படும்
 
1. முறையான கல்வி (Formal Education)
 
வரையறையுடன் கற்றுக் கொடுப்பது....
முறையான கல்வி என்பது பாடத்திட்டம் சார்ந்தது. பள்ளிகளில் கல்லுரிகளில் படிக்கும் கல்வி இவ்வகையைச் சார்ந்தது. அதில் பெரும்பாலனவை தேர்வுவரைக்கும் தான் பயன்படும். வாழ்க்கைக்கு தேவையான செய்திகள் மிகக் குறைந்ததாகவே இருக்கும். தொழில் சார்ந்த கல்வியை கற்பவற்களுக்கு அது தொழில் அடிப்படையில் மட்டுமே உதவியாக இருக்கும். இதை தேர்வு செய்வதில் மிகுந்த கவணம் செழுத்துகிறோம் காரணம் எதிர்காலம் நல்லா இருக்கனும், கைநிறைய சம்பாதிக்கனும் என்ற ஆசை.பெரும்பாளான குற்றங்கள் இன்று படித்தவர்களால்தான் நிகழ்த்தப்படுகிறது. படித்த இளைஞர்களால் தான் இன்று சமுதாய சீரழிவுகள் நடந்து வருவது கண்கூடாக நாம் பார்த்து வருகிறோம். அவர்கள் படித்த படிப்பு அவர்களுக்கு ஒழுக்கத்தை, நாணயத்தை, கண்ணியத்தை கற்றுத் தந்ததாக சிலரின் நடவடிக்கைகளில் தெறியாது. ஆனால் பொதுவாக மக்கள் மத்தியில் படித்தவன் என்றால் அவன் நல்லவனாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதைப் பார்க்கலாம்.
 
2. முறையற்ற கல்வி (Informal Education)
 
வரையறையில்லாமல் கற்றுக் கொள்வது....
 
இந்த முறையற்ற கல்வி முறை மிகவும் ஆபத்தானது. இது விசயத்தில் ஒருவன் சரியாக நடந்து கொண்டால் அவனது எதிர்காலம் நன்றாக இருக்கும். அப்படி என்ன இதற்க்கு முக்கியத்துவம் என்று கேட்கிறீர்களா?
முறையற்ற கல்வி முறை என்பது ஒருவன் தம் குழந்தை பருவத்தில் இருந்து தம் வீடு, தாய், தந்தை, உறவினர் மற்றும் நண்பர்கள் மூலமும் தம் சார்ந்துள்ள மத, நாடு மற்றும் கலாச்சாரத்தில் இருந்து தாமாக கற்றுக்கொள்வது. இதற்க்கு எவ்வித வரம்புகளும் இல்லை (இணையதளத்தைப் பயன்படுத்துவது போல) இத்த இடத்தில் தான் ஒரு மனிதன் நல்லவனாகவோ, தீயவனாகவோ மாற்றப்படுகிறான்.
ஒருவன் தம் தாய், தந்தையரிடமிருந்துதான் பொய்செல்ல கற்றுக்கொள்கிறான் என்றால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை. பெரும்பாலான தாய் தந்தையர் தம் பிள்ளை இதை கற்றுக் கொண்டால் என்ன செய்வது என்று நினைப்பதே இல்லை. அதே போல் மகனிடம் சிகரெட் வாங்க கடைக்கு அனுப்புவது, நினைவு தெறிந்த பிள்ளை இருக்கும் போது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது போன்றவை மிக முக்கியமானவை.
 
நண்பர்களை பொருத்தவரை ஒருவன் கெடுவதற்க்கும் நண்பர்கள்தான் காரணமாக இருக்கிறார்கள் ஒருவன் நல்லவனாவதற்க்கும் நண்பர்கள்தான் காரணமாக இருப்பதைப் பார்க்கிறோம். நட்பு முத்திப் போன கதையா இல்லாமல் மற்ற விசயங்களை எப்படி நம் வாழ்க்கைக்கு நன்மை பயக்குமா என்று பார்த்து தேர்வு செய்கிறோமோ அதே போல் நண்பர்களையும் தேர்வு செய்வது நம் கடமையாகும். நல்ல நட்பு கொள்ளளே சிறந்த நட்பு.
 
நாடு மற்றும் கலாச்சாரம் பற்றி சொன்னால் மேலை நாட்டு கலாச்சரமும் இந்திய கலாச்சாரத்திற்கும் உள்ள வேறுபாட்டையும் சல விசயங்களை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உள்ளதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
 
இறை நம்பிக்கைகள் - இந்த இடத்தில் தான் நாம் சற்று சிந்திக்க வேண்டும். இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல வாழ்க்கை நெறி. மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற வழிகாட்டும் சித்தாந்தமே இஸ்லாம். இதில் இறைவன் நம் தவறுகளுக்காக நம்மை தண்டிப்பான் என்ற என்னமும் மறுமையில் நரகம் என்ற கொடும் தீயினை தவறிழைத்தவர்களுக்கு பரிசாக கொடுக்கப்படும் என்ற நம்பிக்கைதான் முஸ்லிமகளுக்கு இருக்க வேண்டிய தலையாய நம்பிக்கை. இதில் குறைவு ஏற்படும் போது நம்மையார் பார்க்கப் பொறா, நம்மை எவன் என்ன செய்யமுடியும் என்பது போன்ற என்னப் போக்குகள் மட்டுப்படுத்தப்படும். நம்மை இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் நம்மை அவன் தண்டிப்பான் என்ற நம்பிக்கை ஒரு மனிதனை தவறில் இருந்து தடுக்கும் கேடையமாகும்.
 
இந்த நம்பிக்கை சரியாக இருந்தால் தான் வணக்கவழிபாடுகள் செய்ய ஒருவன் முன்வருவான். ஆகவே 1அறிந்து கொள்வதில் பிள்ளைகளுக்கு ஆர்வம் காட்ட வேண்டும். ஒருவன் காலையில் விடிந்ததில் இருந்து அவன் இரவு படுக்கைக்கு செல்லும் வரை செய்யும் காரியங்களை  வழிகாட்டுதலின் படி செய்து விட்டால் அவன்  வாழ்ந்து விட முடியும்.
 
ஆனால் என்ன வென்றே தெறியாத நிலையில் இருக்கும் அவலம் நம்மை மிகுந்த வேதனைப்படுத்துவதாகவே இருக்கிறது. நமது மதரஸாக்களின் நிலையோ சொல்ல முடியாத நிலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக