மொத்தப் பக்கக்காட்சிகள்

6/29/2012

உள்ளங்கள் அழுதாலும்! உதடுகள் சிரிக்கட்டுமே…


மனிதனை மனிதனாய் பார்ப்போம்
மதத்தை மனிதநேயத்தால் வேரறுப்போம்
வறுமையை வடு தெரியாமல் ஒழிப்போம்
வலியோர்க்கு மட்டும் வளமான வாழ்வு என்பதை மாற்றுவோம்

உள்ளங்கள் அழுதாலும்! உதடுகள் சிரிக்கட்டுமே…

செய்த தவறை மறைப்பவன் மிருகம்,
செய்த தவறுக்காக வருந்துபவனும் அந்த்,
தவறை மன்னிப்பவனும் மனிதன்,
தவறை மறப்பவன் தெய்வம்

தன் மானத்தை இழப்பவன் மனிதனல்ல
தன்மானத்தை இழப்பவன் தமிழனல்ல

எங்கே உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல்,
உரிமைகள் நசுக்கப்படுகிறதோ;
அங்கே புரட்சி வெடிக்கிறது

மனித உள்ளங்கள் அழுதாலும்,
மனித உதடுகள் சிரிக்கட்டுமே

பேசக்கூடாததை பேசாதிருப்பது தான் நாவடக்கம்,
வாய் மூடி இருப்பது அல்ல

பணமும் செருப்பும் ஒன்று சிறிதாக இருந்தால் கடிக்கும்,
பெரிதாக இருந்தால் தடுக்கி விழச் செய்யும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக