மொத்தப் பக்கக்காட்சிகள்

6/16/2012

வெற்றி


  • கடவுளே....
    போலி நண்பர்களிடமிருந்து
    என்னைக் காப்பாற்று..!
    என் எதிரிகளை
    நான் பார்த்துக் கொள்கிறேன்.
  • கதவை தட்டாத
    காரணத்தினால்
    எத்தனையோ வாய்ப்புகளை
    நீ இழந்து நிற்கின்றாய்...!
  • கண்டிக்கும் ஆசிரியர்
    கரையேற்றிவிடுவார்
    கவலைப்படாதே!
  • சிறுகடன் ஒரு கடங்காரனை உருவாக்கும்.
    பெருங்கடன் ஒரு பகைவனை உருவாக்கும்
  • சோம்பல் - எல்லாவற்றையும் கடினமாக்குகிறது
    சுறுசுறுப்பு - எல்லாவற்றையும் சுலபமாக்குகிறது
தானாக வருவதில்லை வெற்றி
அது....

  • வியர்வையின் விளைச்சல்
  • நீ முன்னேறினால் உழைப்பு!
    உன் எதிரி முன்னேறினால் அதிர்ஷ்டமா?
  • பத்து விரல்களால் - பாடுபட்டால்தான்
    ஐந்து விரல்களால் அள்ளி உண்ண முடியும்
  • முயற்சியை நிறுத்துவதும்,
    மூச்சை நிறுத்துவதும் ஒன்றே
  • முதுகுகள் இனணந்தால் முரண்பாடு
    முகங்கள் இணைந்தால் உடன்பாடு
  • தொண்டு செய்து வாழ்ந்தால் நீங்கள் கோயிலுக்கே போகவேண்டாம்.
  • பிறரை இழிவாக பார்ப்பதைவிட ஒரே ஒரு முறை உண்ணையே உற்றுப் பார்த்துக் கொள்.
  • கடன் வாங்கியவர்களை விட கடன் கொடுத்தவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி உண்டு.
  • தேவையற்ற பொருட்களை வாங்குபவன் ஒரு நாள் தேவையான பொருட்களை விற்க நேரிடும்.
  • சுறுசுறுப்பாயிரு; சுதந்திரமாயிரு; சிக்கனமாயிரு;
  • நீங்கள் என்றைக்கு கடன் வாங்குகின்றீர்களோ, அன்றைக்கே உங்களது நிம்மதி, தன்மானம், புகழ் இவைகளை அடகு வைத்துவிட்டீர்கள்.
  • பொழுது போதவில்லை என்று சொல்கின்றவர்கள் சாதனையாளர்கள்.
    பொழுது போகவில்லையே என்று சொல்கின்றவர்கள் சோம்பேறிகள்.
  • கைநீட்டிப் பெறுவதைவிடக், கொடுத்துப் பழக கற்றுக்கொள், உனக்கு அது புண்ணியத்தைச் சேர்க்கும்.
  • சின்னஞ்சிறு செலவுகளைக் கூட எழுதி பாருங்கள் சிக்கனம் தானாக வந்துவிடும்.
  • நீ செய்த நன்மைக்கு விலைவாக உனக்கு தீமை வந்தால் சுகமாக ஏற்றுக்கொள்.
  • நீ பிறர் மேல் காட்டுகின்ற அன்பு, அவனிடத்திலே உள்ள குறையை மறைக்க உதவிட கூடாது.
Thanks to Antony Raj

உயர்ந்தோர் மரணம் - கவிஞர் கண்ணதாசன்

 மரணமோ, சரித்திரத்தில் மகத்த்தான மணி மண்டபமாக்க் கருதப்படுகிறது
 கவிஞர் கண்ணதாசன்


உயர்ந்தோர், நல்லோர், பெரியோர்கள்.ஞானிகள்-


இந்த வார்த்தைகளில் பாரத்த்தன் முழு வரலாறுகளும் அடங்கிக்கிடக்கின்றன.
அந்த விளக்குகள் ஒளியைத் தந்தன; நாம் வாழ்க்கைக் கண்டு கொண்டோம்.

அந்தக் கைகாட்டிகள் பாதையைக் காட்டின; நாம் போக வேண்டிய ஊருக்குப் போய்ச் சேர்ந்தோம்.

அந்த மேகங்கள் மழை பொழிந்தன; நாம் நமது நிலங்களைச் செழுமையாக்கிக்கொண்டோம்.

பிறக்கும்போது ஊமையாகவும், பருவகாலத்தில் குருடனாகவும், பற்றும் பாசமும் சூழ்ந்த பிறகு திருடனாகவும், முதுமைக் காலத்தில் பொறுமை இழந்தவனாகவம் வாழ்ந்து மடிகிற சாதாரண மனிதனுக்கு, அவர்கள்தான் செம்மையான சுகமான வாழ்க்கை நிம்மதியைக்காட்டினார்கள்.

அவன் கண்கள் காணத் தொடங்கும்போதே, நல்லவற்றைக் காணும்படி அறிவுறுத்தினார்கள்.

அவன் வாய் பேசத் தொடங்கும்போதே, உணைமையைப் பேசும்படி வலியுறுத்தினார்கள்.

காதலிக்கும்போது பெண்களுக்குப் பண்புள்ள இலக்கணம் சொன்னார்கள்.

எப்படி வாழ்ந்தால் நிம்மதி என்பதற்கும் இலக்கணம் தந்தார்கள்.
நீதிக் கதைகளும் குட்டிக் கதைகளும் சொல்லி, நீதியை மனதில் பதிய வைத்தார்கள்.
ராஜ தண்டனையைவிடத் தெய்வத் தண்டனை உறதியானது என்பதை நம்பிக்கையோடு பதிய வைத்தார்கள்.

பிறரை ஏமாற்றாமல் வாணிபத்தில் லாபம் சம்பாதிக முடியும் என்பதையும், அடுத்தவன் சொத்தை அபகரிக்காமல் சுயமாகச் சம்பாதித்தே சேர்க்க முடியும் என்பதையும், நமக்குக் கிடைக்கின்ற எல்லைக்குள்ளேயே நமது மகிழ்ச்சியை அதிகப்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் அவர்க்தான் விளக்கிச்சன்னார்கள்ழ.

மரணத்தின்பின், சொர்க்கமோ நரகமோ கிட்டுது, மரணத்திற்குமின்னால் நீ வாழ்ந்து வாழ்க்கையைப் பொறுத்தது என்பதை அவர்கள்தான் தெளிவு படுத்தினார்க்.

“பேராசை பெரு நஷ்டம்’ என்றார்கள்ழ ‘விநாசகாலே விபரீதபுத்தி’ என்றார்களக். ‘தன்வினை தன்னைச் சுடும்’ என்றார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்றார்கள். ‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்றார்கள்.

தவறான பாதைக்கு இலக்கியங்களாக ராவணையும் துரியோதன்னையும் காட்டினார்கள்.

நமது வாழ்க்கை எத்தனை நாள் ஓடுகிறதோ, அத்தனை நாளுக்கும் நாட்குறிப்பு எழுதி வைத்ததுபோல் நன்மை, தீமைக் குறிப்பு எழுதி வைத்தார்கள்.

அப்படிச சிலரைப் பாரத பூமி பெற்றதனால் தான் பயங்கர இருளுக்கிடையேயும் வெளிச்சம் நமக்குத் தெரிகிறது.

அயோக்கியர்களிடையே யோக்கியர்களையும், துரோகிகளுக்கிடையே நன்றியுள்ளவர்களையும் நம்மால் கண்டுபிடிக்க முடிகிறது.

பற்று பாசத்தால் பரிதவித்து, சுற்றச்சூழல்களால் துடிதுடித்து, ‘கற்றதும் பயனில்லையே’ என்று கதறும் போதும், நம்மைக் கையமர்த்தி, அந்தச்சிக்கல்களிலிருந்து விடுபடுவது எப்படி என்பதை, அவர்களேதான் நமக்குக்காட்டினார்கள்.

சிலந்தி வலைபோல் பின்னப்பட்ட லௌகிக வாழ்க்கையில் துன்பங்களை எப்படிச் சமாளிப்பது என்பதையும், அவர்கள்தான் சொல்லித் தந்தார்கள். அவர்களது வாழ்நாளில் அவர்களைப் பற்றி உணரமுடியாத்தை,அவர்கள் இறந்த பிறகு நாம் உணர்ந்து கொள்கிறோம்.

நலவர்களை நாம் அடையாளம் கண்டு கொள்வதற்காகவே அவர்களுக்குமரணம் சம்பவிக்கிறது.

வாழ்ந்த நாளில் அவர்களை வசை பாடியவர்கள் கூட, அவர்கள் இறந்த நாளில் அவர்களுடைய நற்பண்பு களை எண்ணிப் பார்க்கிறார்கள். அன்றாட இகழ்ச்சிகளின் மீது ஆத்திரமுற்று அவர்களைத் தொக்கியவர்களூட அவர்களது மொத்தப் பண்புகளை எண்ணிவிய்கிறார்கள்.

‘அவர்கள் உலகுக்காகவ வாழ்ந்தவர்கள’ என்பதை எண்ணும்பது ‘நாமும் அதுபோல் வாழ வேண்டும்’ என்ற சிலராவது எண்ணுகிறார்கள்.

“குருடனுக்குக் கிடைக்கின்ற கைக்கோல் ஒரு ஞானியைப் போன்றது, அது அவனுக்கு வழி காட்டுவதால், எத்தனையோ குருடர்களுக்கு ஒரே கைக்கோல் வழி காட்டுகிறதென்றால், அது ஞானிக்கு ஞானியாகும்.”

வசிஷ்டர், வியாசர், வாமீகி போன்றவர்கள் இந்து மத்த்தின் பாரம்பரியங்கள்.

அந்தப் பாரம்பரியத்தில், நமுத தலைமுறை கண்ட ஒரு ஞானி, ராஜாஜி.

தசரதன் இற்தபோது, கதாபாத்திரத்தின் வடிவில் கம்பன் இப்படிப் புலம்புகிறான்;

“நந்தா விளக்கனைய
நாயகனே நானிலத்தோர்
தந்தய் தனி அறத்தின்
தாயே தயாநிதியே
ஏந்தாய் இகழ்வேந்தர்
ஏறே இறந்தனையோ
அந்தோ இனிவாய்மைக்
காருளரே மற்றுலகின்?”

-ஆம்; இது தசரதனுக்கு மட்டுமல்ல, காந்திக்கும் பொருந்தும்; நேருவுக்கும் பொருந்தும்; ராஜாஜிக்கும் பொருந்தும்.

உயர்ந்தவர்கள் அனைவரும் ஒரு வரிசை

அவர்களில் ஒருவருக்குச் சூட்டப்படும் புகழ்மாலை அனைவருக்கும் பொருந்தும்.

வார்த்தைகளை மாற்றாமல் பெயர்களை மட்டும் மாற்றினால் போதும்.

அவர்கள் அனைவமு ஒரே சீராக வாழ்ந்தார்கள். அவர்கள் மடியும்போது ‘நாம் அழவேண்டியதில்லை.

அவர்களது தலைமுறையில் நாம் வாழ்ந்ததற்காக மகிழ்ச்சியடைய வேண்டும்.

அவர்கள், நமக்காக ஏராளமான நூல்களை வைத்துவிட்டுப்போயிருக்கிறார்கள் என்பதற்காக, நாம் பெருமைப்பட வேண்டும்.

இந்துமத வேதங்கள் இப்படிச் சொல்கின்றன.

இறந்து போனவர்களுக்காக அழுது கொண்டிருப்பவர் கண்ணீரைத் துடையுங்கள்.

இதற்கு நீங்களும் தப்பமுடியாது என்பதை நினைவு கொள்ளுங்கள்.

எழுந்து ஸ்நானம் செய்யுங்கள்.

உங்களது லௌகிக் கடமைகளைச்செய்யத் தொடங்குங்கள்.

உங்களது இரண்டாவது வாழ்க்கை ஈசுவரனிடத்துத்தொடங்கப்படுகிறது.

அந்த நம்பிக்கையோடு உங்கள் முதல் வாழ்க்கையை ஒழுங்காக நடத்துங்கள்.

ஆம். தெய்வ நம்பிக்கையின் மீது உங்கள் கண்ணீரைத் துடையுங்கள்.

புனிதன் ராஜாஜியின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தியுங்கள்.

‘அவரது காலடிச் சுவடுகளில் இருந்து இன்னும் சில ஞானிகள் முளைத்தெழுவார்கள்’ என்ற நம்பிக்கையோடு உங்கள் லௌகிக வாழ்க்கையைத்தொடங்குகள்.

கிருஷ்ணார்ப்பணம்

5/02/2012

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்


திருப்பதி செல்கிறோம்திருவேங்கடமுடையான் ஏழுமலை வாசனை வணங்கி மகிழ்கின்றோம்ஆனால் திருப்பதியில் நம்மில் சிலருக்குத் தெரியாத அதிசயங்கள்உண்மைகள்நடைமுறைகள் எவ்வளவோ உள்ளனஅவற்றில் சிலவற்றை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன அவைகளில் சில.........

1. திருப்பதி ஆலயத்திலிருந்து கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்என்ற அபூர்வ பாறைகள் உள்ளன.உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின்  திருமேனியும்இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள்இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம்.அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம்இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும்ஆனால்சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை.ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள்ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை .

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பிகளின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச்சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும்ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லைஎந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும்ஆனால்ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன.ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டிகாதணிகள்புருவங்கள் நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறதுதிருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம் அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர்பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள்ஆனால்அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது .பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள்வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாகநகைகளைக் கழற்றும் போதுஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.திருப்பதி ஆலயம்அதன் வழிபாடுஉண்டியல் வசூல்பூஜை முறைகள்சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன .

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிகவும்  பெரியதாகும். பொங்கல்தயிர்சாதம், புளிச்சாதம், சித்ரான்னம், வடை,முறுக்குஜிலேபிஅதிரசம்போளிஅப்பம்மெளகாரம், லட்டுபாயசம்தோசைரவாகேசரி, பாதாம் கேசரிமுந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள்இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாதுவைரம்வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாதுஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும் ,தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும் .

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும்இந்த ஆடையை கடையில் வாங்க முடியாதுதிருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500  ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள்இது மேல் சாத்து வஸ்திரம்பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும் .ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும்பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.



5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூநேபாளத்திலிருந்து கஸ்தூரிசைனாவிலிருந்து புனுகுபாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும்பிறகு கஸ்தூரி சாத்திபுனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறதுஅபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம்அகில்சந்தனம் , அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம் , தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருடைய நகைகளை வைத்துக்கொள்ள இடமும் இல்லைசாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள் .

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடைஇதை சாத்துவதற்கு மூன்று  அர்ச்சகர்கள் தேவைசூரிய கடாரி 5 கிலோ எடைபாதக்கவசம் 375 கிலோகோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ .100கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர்அச்சதராயர் போன்றோர் . ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டதுஇந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்துபூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார்.முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார் .

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது . மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது .

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது . அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை  சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறதுதாளப்பாக்கம் அன்னமய்யாஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும்சக்தி ஸ்வரூபமாகவும் பாடிஅந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர் , நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார்ஏழுமயைான்மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார் .

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம் .

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாதுஅவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால் , வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார் . அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார் .

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோகர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

4/26/2012

8. திருநாகேஸ்வரம் - ராகு பகவான்




ஸ்தல வரலாறு:

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது திருநாகேஸ்வரம். இங்கு நவக்கிரகங்களில் ஒருவரான ராகு, சிவபெருமானை பூசித்த நாகநாதர் கோவில் உள்ளது. நாக அரசராகிய ராகு பூசித்த காரணத்தால், இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் ஏற்பட்டது.

திருநாகேஸ்வரம் நவக்கிரகத் தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேஷ தலம் என்ற பெருமையும் உடையதாகும். பாதாள லோகத்திலிருந்து நாகராஜன் வந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால் இக் கோயிலின் மூலவர் நாகநாதசுவாமி என்றழைக்கப்படுகின்றார். இத்தலமும் திருநாகேஸ்வரம் என்று அழைக்கப்படுகின்றது. சிறந்த சிவபக்த கிரகமாகிய இராகு சில இடங்களில் மேனமை பெற்று விளங்கிய போதிலும் நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென் மேற்கு மூலையில் நாகவல்லி, நாக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன் தான் காட்சி தருவார். ஆனால் இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். 


இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். இவருக்கு உகந்த மலர் மந்தாரை. 1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்க் அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. அதை எடுத்து பத்திரப் படுத்திக் கண்ணாடிப் பேழைக்குள் வைத்திருக்கின்றனர். இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக வைக்கப் பட்டிருக்கின்றது.

ராகு கேது தோஷம் இத்தலத்தில் வழிபட்டால் நீங்கும். திருமணம் தாமதமாதல், இல்லறத்தில் நிம்மதியினமை, ஜாதகத்தில் பித்திர தோஷம், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்க இராகு தசை, இராகு புக்திகளில் இராகு பகவானுக்க் பாலாபிஷேகம், அர்ச்சனை, ஹோமம் செய்து வழிபட்டுப் பேறு பெறலாம்.

ராகுவின் பிறப்பு வரலாறும் கிரகச்சிறப்பும் சுவை நிரம்பியவை. ராஜவம்சத்து மன்னன் ஒருவனுக்கும் அசுரகுலப் பெண்ணொருத்திக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மஹாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான். உண்மை அறிந்த மஹாவிஷ்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க தலை வேறு உடல் வேறாகி விழுந்தான். ஆனாலும் அமிர்தம் உண்ட மஹிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க. இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார்.

கோவில் அமைப்பு: ஒரு காலத்தில் இத்தலம் செண்பக வனமாக காட்சி அளித்தது. செண்பக மரத்து நிழலில் சிவபெருமான் லிங்க வடிவில் எழுந்தருளியிருந்தார். இதனால் இறைவனுக்கு சண்பகாரண்யேஸ்வரர் என்பு பெயர் ஏறபட்டது. ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி இத்தலம் அமைந்துள்ளது. மற்ற 3 திசைகளிலும் கோபுரங்களையும் மூன்று பிரகாரங்களையும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே வந்ததும் நிருத்த கணபதி, நந்திதேவர், விநாயகர் காட்சி தருகின்றனர். இடது பக்கம் சூரியபுஷ்கரணியும், வலது பக்கம் நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன. புஷ்கரணி சமீபம் எழுந்தருளியுள்ள மழுவாயுதம் தரித்த விநாயகரைப் போற்றித் துதித்து உள்ளே செல்ல வேண்டும். கருவறையில் மூலவர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள், நடராஜர் சந்நிதி, நால்வர் சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன. சேக்கிழார்,அவரது தம்பி பாலறாவாயர், அவர் தாயார் அழகாம்பிகை மூவருக்கும் இத்திருக்கோவிலில் தனி தனிச் சந்நிதி உள்ளது.

அம்பாளுக்கு இத்தலத்தில் இரண்டு சந்நிதிகள் உள்ளன. சுவாமி சந்நிதிக்கு அருகில் பிறையணிவாள் நுதல் அம்மை தரிசனம் தருகிறாள். பிறை என்றால் சந்திரன். அம்பாளின் பெயருக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி அன்று மாலை வேளையில் சந்திரனின் ஒளி அம்பாள் மேல் விழுகின்றது. கார்த்திகை மாதத்து கெளர்ணமி நாளில் அன்னையை தரிசிக்க பெரும் திரளாக பக்தர்கள் கூடுவர்.

இது தவிரத் தனிக்கோயிலில் மற்றொரு இறைவியாக "கிரி குசாம்பிகை" சந்நிதியும் உள்ளது. இங்கு அன்னை தவக்கோலத்தில் காட்சி அளிக்கின்றாள். இவள் உருவம் சுதையால் ஆனதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்துகிறார்கள். கிரி குசாம்பிகைக்கு இருபுறமும் லட்சுமியும், சரஸ்வதியும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். வலதுபுறம் வீணையைக் கையில் தாங்கி சரஸ்வதியும், இடதுபுறம் கரங்களில் தாமரை மலரைத் தாங்கி லட்சுமிதேவியும் இருக்கின்றனர்.

கிரி குசாம்பிகை இங்கு கோவில் கொண்டதற்கு காரணமானவர் பிருங்கி முனிவர். இந்த முனிவர் சிவனை மட்டுமே வணங்குபவர். அருகிலுள்ள தன்னையும் சேர்த்து வணங்காமல் சிவனை மட்டும் வணங்கிச் செல்லும் பிருங்கி முனிவர் மேல் கோபம் கொண்ட சக்தி அர்த்தநாரீஸவரர் ஆக இறைவனின் இடது பாகத்தைப் பெற்றாள். அப்போதும் ஒரு வண்டு உருவம் எடுத்து அர்த்தநாரீஸவரர் வடிவத்தில் ஈசனை மட்டும் துளைத்துக் கொண்டு வலம் வந்தார். அதைக் கண்டு வெகுண்ட அம்மை தன் அம்சமான சக்தியை, அதாவது முனிவரின் சதையையும், இரத்தத்தையும் எடுத்துக் கொண்டாள். எலும்புக் கூடாக மாறி மெள்ள மெள்ள நடமாடினாலும் சிவனை மட்டும் வணங்கும் தன் செயலை பிருங்கி முனிவர் மாற்றிக் கொள்ளவில்லை. தன் பக்தனின் வேதனைக்குக் காரணமான அம்பிகை மேல் கோபம் கொண்ட இறைவன் அவளை பூவுலகம் சென்று சிலகாலம் தன்னை விட்டுப் பிரிந்து வழிபட்டு வரும்படியும் மதுரையில் பினபு அன்னையை திருமணம் செய்து கொள்தாகவும் கூறிவிட்டார். சாபம் பெற்ற அன்னைக்கு ஆறுதலாக அலைமகளும், கலைமகளும் அவளுக்கு துணை இருப்பார்கள் என்றும் இறைவன் கூறினார். தேவியான பார்வதி பூலோகத்தில் செணபகவனமான இத்தலத்திற்கு தவம் செய்ய வந்த போது அவளுக்குத் துணையாக லட்சுமியும், சரஸ்வதியும் எழுந்தருளினர். இந்தக் கோலத்தையே திருநாகேஸவரம் கோவிலில் கிரிகுசாம்பிகை சந்நிதியில் நாம் தரிசிக்கிறோம்.

பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான் திருநாகேஸ்வரரின் மேல் கொண்ட அபரிமிதமான ஈடுபாட்டின் காரணமாக கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இக்கோவிலுக்கு திருப்பணி செய்து இரண்டாம் பிரகாரத்தில் ஒரு மண்டபத்தையும நிர்மாணித்துள்ளார். தம்முடைய சொந்த ஊரான குன்றத்தூரில் (சென்னைக்கு அருகில் உள்ளது) தாம் கட்டிய கோயிலுக்கும் திருநாகேஸ்வரம் என்றே பெயரிட்டுள்ளார். இவருக்குத் திருவடிஞானம் கிடைத்ததும் இத்தலத்திலேதான் என்பது இன்னுமொரு சிறப்பாகும். ஆலயத்தில் சேக்கிழார் அவர் தாயார், தம்பி உருவங்கள் உள்ளன

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் நின்ற கோலத்தில் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அருகே மயில் உள்ளது. கிரி குசாம்பிகை சந்நிதி உள்ள தனிக் கோவிலில் பாலசுப்பிரமணியர் காட்சி தருகிறார்.

இத்தலத்தில் ஒரு காலத்தில் பன்னிரண்டு தீர்த்தங்கள் இருந்கதாகக் குறிப்புக்கள் உள்ளன. இன்று கோயிலின் உள்ளேயே சூரிய புஷ்கரிணி என்ற ஒரு தீர்த்தம் காணப்படுகின்றது. இத்தீர்த்தத்தின் வலப் பக்கத்தில் நூற்றுக்கால் மண்டபம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுவதோடு ஒரு தேரின் மீது இம்மண்டபம் அமைந்திருப்பதுபோல மண்டபத்தின் கீழே கற்களாலான சக்கரங்களுடன் சுற்றிலும் நாட்டியமாடுவதுபோன்ற பாவங்களில் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இங்கே வழிபட்டு கௌதமர் அகலிகையோடு மீண்டும் இணைந்தார். நளன் தன் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றான். பாண்டவர்கள் தாங்கள் இழந்த நாட்டை மீண்டும் பெற்றனர். இத்தலத்திலுள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி நாகேசுவரரை வழிபட்டு சந்திரவர்மன் நாய் வடிவு நீங்கினான். இந்திரன் சாபம் நீங்கப் பெற்றான். சேக்கிழாரின் ஈடுபாடு கண்டு இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசிப் பூச நன்னாளில் சேக்கிழார் திருவிழா நடைபெறுகின்றது. கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோத்சவம் நடைபெறும். பிரதோஷம் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும். பிரதி ஞாயிறுதோறும் மாலை ராகு கால நேரத்தில் ராகுவுக்குப் பாலாபிஷேகம் நடைபெறுவது மிகச் சிறப்புடையது. ராகுவைப் போலக் கொடுப்பாரும் இல்லை; கேதுவைப்போல் கெடுப்பாரும் இல்லை என்பது பழமொழி.

காலையில் குடந்தைக் கீழ்கோட்டத்து இறைவனையும், நண்பகலில் திருநாகேஸ்வரம் இறைவனையும், மாலையில் திருப்பாம்பரம் இறைவனையும் ஒரே நாளில் தரிசிப்பது மிகவும் விசேஷமாகும்.
திரைப்படம் திரைப்படம்

 இருப்பிடம் :
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கிழக்கே 6 கி.மீ.தூரத்தில் திருநாகேஸ்வரம் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து பஸ் உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம் :  
திருச்சி