பணி ஓய்வு !
நாளைய பொழுது
எப்படி விடியப்போகிறதோ?
நாளைய பொழுது
நிச்சயம் சூனியமாகத்தான்
இருக்கப் போகிறது.
ஏன் என்றால்?
இன்று எனக்கு
பணியில் இருந்து
ஓய்வு.
எத்தனையோ பிரிவு
உபசார நிகழ்வுகளில்
பங்குபெற்று உள்ளேன்.
ஆனால் அப்போது
எனக்கு
தெரியவில்லை,
ஓய்வு என்பது
எத்தனை கொடுமையானது
என்று.
நாளை காலை
அவசரமாக படுக்கை
விட்டுஎழ வேண்டியதுஇல்லை
என் மனையாளை
துரிதப்படுத்த வேண்டியதுஇல்லை.
எனது இருக்கை
நாளைவேறு ஒருவருடையது.
ஏனோ இந்தஅலுவல்
ஓய்வு மட்டும்
என் இதயத்தில்
ஒருதீரா ரணத்தை
கொடுக்கிறது.
என் இருக்கை
நான் ஓய்வு
பெறுவதை உணர்ந்து
கொண்டதோ என்னவோ?
இன்றுஎன் காலை
தடுமாற செய்கிறது.
என்கணினி கண்ணீர்
விடுவதை உணர்கிறேன்.
நான்என் வாகனத்தை
நிறுத்தும் மரநிழல்இன்று
ஏனோஎனக்கு சுடுகிறது.
எனது பணிக்காலத்தை
இன்னும் ஒருஇரண்டு
ஆண்டு காலம்
நீட்டித்து இருக்கலாமே!
மனசாட்சிக்கு விரோதமில்லாமல்
பணி செய்ததுக்கு.
மரணத்தை விட
கொடுமையானது பணிஓய்வு !
பணியில் இருக்கும்போது
எத்தனை மாலைகள்,
மரியாதைகள் !
ஆனால் இன்று
மற்றவர்கள் பார்க்கும்பார்வையில்
ஏளனம் ஒளிந்து
இருப்பதை போல்உணர்கிறேன்.
எனக்கு வயதாகிவிட்டதை
நான்இன்று தான்உணர்கிறேன்.

நாளைய பொழுது
எப்படி விடியப்போகிறதோ?
நாளைய பொழுது
நிச்சயம் சூனியமாகத்தான்
இருக்கப் போகிறது.
ஏன் என்றால்?
இன்று எனக்கு
பணியில் இருந்து
ஓய்வு.
எத்தனையோ பிரிவு
உபசார நிகழ்வுகளில்
பங்குபெற்று உள்ளேன்.
ஆனால் அப்போது
எனக்கு
தெரியவில்லை,
ஓய்வு என்பது
எத்தனை கொடுமையானது
என்று.
நாளை காலை
அவசரமாக படுக்கை
விட்டுஎழ வேண்டியதுஇல்லை
என் மனையாளை
துரிதப்படுத்த வேண்டியதுஇல்லை.
எனது இருக்கை
நாளைவேறு ஒருவருடையது.
ஏனோ இந்தஅலுவல்
ஓய்வு மட்டும்
என் இதயத்தில்
ஒருதீரா ரணத்தை
கொடுக்கிறது.
என் இருக்கை
நான் ஓய்வு
பெறுவதை உணர்ந்து
கொண்டதோ என்னவோ?
இன்றுஎன் காலை
தடுமாற செய்கிறது.
என்கணினி கண்ணீர்
விடுவதை உணர்கிறேன்.
நான்என் வாகனத்தை
நிறுத்தும் மரநிழல்இன்று
ஏனோஎனக்கு சுடுகிறது.
எனது பணிக்காலத்தை
இன்னும் ஒருஇரண்டு
ஆண்டு காலம்
நீட்டித்து இருக்கலாமே!
மனசாட்சிக்கு விரோதமில்லாமல்
பணி செய்ததுக்கு.
மரணத்தை விட
கொடுமையானது பணிஓய்வு !
பணியில் இருக்கும்போது
எத்தனை மாலைகள்,
மரியாதைகள் !
ஆனால் இன்று
மற்றவர்கள் பார்க்கும்பார்வையில்
ஏளனம் ஒளிந்து
இருப்பதை போல்உணர்கிறேன்.
எனக்கு வயதாகிவிட்டதை
நான்இன்று தான்உணர்கிறேன்.

ஐயய்யோ, வயதாகி விட்டதை மனத்தால் உணர்ந்து விட்டீர்களா? அது கூடாது நண்பரே! உடனே மனத்தை உலுக்குங்கள். 'நான் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறேன்' என்று அதனிடம் அடித்துச் சொல்லுங்கள். வீட்டில் அதிக நேரம் உட்கார வேண்டாம். நடந்துகொண்டே இருங்கள். அடுத்தா ஆண்டு ஒய்வு பெறவுள்ளவர்களை அடிக்கடி சந்தியுங்கள். ஏற்கெனவே ஒய்வு பெற்றுவிட்டவர்கள் துக்கம் விசாரிப்பதுபோல் பேசுவார்கள். அவர்களை avoid பண்ணுங்கள். மனைவியோடு அதிக நேரம் செலவு செய்யுங்கள். (சும்மா ஒரு இதுக்கு தான்!)...நிறைய எழுதுங்கள்...
பதிலளிநீக்கு-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து