மொத்தப் பக்கக்காட்சிகள்

4/25/2016

தக்காளி சட்னி !

 
கணவன் - செல்லம் எந்திரிடா நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க...
.
மனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம்வந்து ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள வந்துட்டாங்களா..?
.
வா்றவங்க ஒரு போன் பண்ணிட்டாவது வரலாம்ல,
இனி காலையில டிபன், மதியம் சாப்பாடுன்னு மூணு நேரமும் வடிச்சி கொட்றத்துகுள்ள என் உசுரு போயிடும்...
.
கணவன் - ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ பேசுறத கேட்டு கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க...
.
மனைவி - போனா போவட்டும் அப்டியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்...(ஐந்து நிடங்கள் கழித்து )
.
கணவன் - உண்மையாலுமே அவங்க போயிட்டாங்கடி...
.
மனைவி - ஐயா, ஜாலி...
.
கணவன் - போறப்ப அத்தையையும் மாமாவையும் பாக்கவே ரோம்ப கஷ்டமா இருந்தது...
.
மனைவி - (சற்று அதிர்ச்சியுடன்)வந்தது எங்க அப்பா அம்மாவா..?
.
கணவன் - (மனசுக்குள் சிர்த்துக்கொண்டே) ஆமா.. உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா போடி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக