மொத்தப் பக்கக்காட்சிகள்

4/27/2013

அரசியல் கலாட்டா! யாரும் சீரியசா எடுத்துக்காதீங்க!




குனிந்து நின்னு கும்பிடுபவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தா அது அம்மா




குஷ்புவிற்கு மேடையிலும் உண்மையான தொண்டனுக்கு இதயத்திலும் இடம் கொடுத்தால் அது  தலிவர்

 



தொண்டர்களுக்கு தர்ம அடி கொடுத்து நாயே! நாயே! என திட்டினால் அது கேப்டன்




டாஸ்மார்க் வாசலில் பூட்டுடன் நின்றுகொண்டு வருவோர் போவோரிடம் சாதி சான்றிதழ் கேட்டால் அது மருத்துவர் ஐயா!



தன் பிறந்த நாளுக்காக தொண்டர்களிடம் தங்கக் காசு கேட்டு நச்சரித்தால் அவர் திருமா





வயிற்று வலி வந்தவனையும் வாந்தி,பேதியில் கிடப்பவனையும் வாக்கிங் கூட்டிக்கொண்டு போனால் அது வைகோ





பாம்புக்கும் நோகாமல் குச்சிக்கும் வலிக்காமல் அரசியல் செய்வதுபோல் நடித்தால் அது தா.பாண்டியன்





இவர் ஜெயித்தாரா? தோத்தாரா? என தெரியும் முன்பே கப்பை தூக்கிக்கொண்டு ஓடினால் அது ப.சிதம்பரம்





 

MLA ஆனதை மறந்துவிட்டு ஈமு கோழி விளம்பரத்திலும், பனியன்,ஜட்டி விளம்பரத்திலும் நடித்துக் கொண்டிருந்தால் அது சரத்குமார்



கோயில் மணியை அடிப்பதுபோல் போகிறவன்,வருகிறவன் எல்லாம் அடித்திவிட்டு போனால் அது மதுரை ஆதீனம்





# அரசியல் கலாட்டா! யாரும் சீரியசா எடுத்துக்காதீங்க!

ஃபிரீயா விடுங்க.

- Thanks to Nambikai Raj.

சம்பள உயர்வு பெறுவது எப்படி?



ஒரு சிலர் கடுமையா வேலை செய்வாங்க, சரியான நேரத்துக்கு அலுவலகம் வருவாங்க, எந்த வேலை கொடுத்தாலும் பக்காவா முடிப்பாங்க ஆனால் அவர்களில் ஒரு சிலருக்கு பதவி உயர்வு, பணி உயர்வு சம்பள உயர்வு என்று எதுவுமே கிடைக்காது. காலம் எல்லாம் இதையே புலம்பிட்டு இருப்பாங்க ஆனால் ஒன்றும் நடக்காது.

ஒரு சிலர் வேலைக்கு சேரும்போது என்ன சம்பளம் வாங்கினார்களோ அதே அளவிலேயே கடைசி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பார்கள். ஒரு சிலர் வேலைக்கு சேர்ந்த அடுத்த மாதமே நன்றாக வேலை செய்கிறார் என்ற பெயரோடு கூடுதல் சம்பளத்தையும் பெறுவார்கள்.

சம்பள உயர்வை எதிர்பார்க்கும் முன் உங்களை நீங்களே ஒரு கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள், 'என் வேலைத்திறனில் எவ்வளவு உயர்வு ஏற்பட்டிருக்கிறது?'

அடுத்து எதற்காக சம்பளம் வழங்கப் படுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதற்கு, எல்லோரும் சம்பளம் செய்யும் வேலைக்காக வழங்கப்படுகிறது என்று சொல்வார்கள். உண்மையில் சம்பளம் செய்யும் வேலைக்காக மட்டுமல்ல காட்டும் விசுவாசத்திற்காகவும் வழங்கப்படுகிறது.

உங்கள் வளர்ச்சியை மட்டும் யோசிக்காமல் நிறுவன வளர்ச்சியையும் யோசியுங்கள். அப்படி யோசித்து செயல்பட்டால் மட்டுமே அது உங்கள் விசுவாசத்தின் வளர்ச்சியாக இருக்கும்.

இப்படியெல்லாம் செயல்பட்டால் உங்கள் சம்பள உயர்வுக்கு உங்கள் நிறுவனத்தில் இருக்கும் அத்தனை பேரும் பேசுவார்கள்.

உங்களின் சம்பள உயர்விற்காக மற்றவர்கள் பேசும் அளவிற்கு நீங்கள் உழைத்திருந்தால் உங்களுக்கு அதிக சம்பளம் உறுதி.

சம்பள உயர்வை கையில் வாங்கியவுடன் சந்தோஷப்படுபவர்கள் அடுத்த நிமிடம் யாருடனாவது ஒப்பிட்டுப்பார்த்து கவலைப்பட ஆரம்பித்து விடுவார்கள். அதனால்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் சம்பளத்தை முழுவதும் ரகசியமாக்கிவிட்டது.

உங்களுக்கு அதிக சம்பளம் வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் எப்போதும் மற்றவர்களின் திறமையோடு ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். சம்பளத்தோடு ஒப்பிட்டு போட்டி போடாதீர்கள். உங்கள் திறமை வளர வளர உங்கள் சம்பளமும் உயரும்.

நிறுவனத்தில் வேலை செய்யும் நேரத்தினை கணக்கு பார்த்து வேலை செய்யாதீர்கள் அப்படி செய்தால் நிறுவனமும் உங்கள் சம்பளத்தில் கணக்கு பார்க்கும்.

மற்றவர்களோடு ஒப்பிடும்போது உங்களுக்கு குறைவாக இருந்தால் சம்பள உயர்விற்காக பேசும் போது ஒருபோதும் கோபமாக அல்லது ஆதங்கமாக பேசாதீர்கள். மற்றவர்களை ஒப்பிட்டும் கேட்காதீர்கள்.

"இருபதாயிரம் சம்பளம் வாங்குமளவிற்கு நான் உழைத்து உயர வேண்டும் என்று நினைக்கிறேன். இன்னும் நான் கூடுதல் பணிகள் செய்யத்தயாராக இருக்கிறேன். இன்னும் என்னை என்ன மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது போல கேளுங்கள்.

இப்படி கேட்டால், தன்மையாக நீங்கள் நடந்து கொண்ட விதத்திலேயே நீங்கள் கேட்டது கிடைக்கும்.

நிறுவனம் எதிர்பார்க்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டு சம்பள உயர்விற்குத் தயாராகுங்கள். உங்கள் சம்பளம் இரண்டு மடங்காக உயர வாழ்த்துக்கள்..


நகைச்சுவைக்காக

இந்த பதிவில் எப்படியெல்லாம் காக்கா பிடித்தால் சுலபமாக எப்படி சம்பள உயர்வு கிடைக்கும் என்று பார்க்கலாம்.

1. தினமும் அலுவலகத்தில் மேனேஜரிடம் காலையில் குட்மார்னிங், மாலையில் குட்நைட் கண்டிப்பாக சொல்லவும்

2. நிர்வாகமும் மேலாளரும் என்ன  சொன்னாலும் ஓகே சார்,  சரி சார்  என சொல்லவேண்டும்.  

3. மேனேஜர் அலுவலகத்திற்கு வருவதற்கு முன்னரே நாம் அலுவலகத்திற்கு வரவேண்டும். அதேபோல் மேனேஜர் அலுவலகத்திலிருந்து கிளம்பிய பின்னரே கிளம்பவும்

4. மேனேஜர் எப்பொழுதெல்லாம் நம்முடைய இருக்கையை கடந்து செல்கிறாரோ அப்பொழுதெல்லாம் எழுந்து நின்று வணக்கம் வைக்கவும்.

5. மாலையிலோ அல்லது   இரவிலோ மேனேஜர் வீட்டுக்கு கிளம்பும் போது அவருக்கு மறக்காமல் கார் கதவை திறந்து விடவும்.

6. நீங்கள் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்ப்பவர் என்றால் இரவு 11 or 12 மணிக்கு ஆட்டோமேட்டிக்காக ஈமெயில் அனுப்புவது மாதிரி உங்கள் outlook-ஐ செட் செய்து கொள்ளுங்கள். அப்பொழுது தான் நீங்கள் ஹார்டு வொர்கர் (hard worker) என்று தெரியும்.

7. தினமுமோ அல்லது வாரத்தில் ஒருமுறையோ மேனேஜரின் மேஜைக்கு அடியில் கால்களுக்கு நடுவில் அமர்ந்து மேனேஜரின் ஷூ-க்கு பாலிஷ் போடவும்.

8. மேனேஜர் போட்டோவை பர்சில் வைத்துகொண்டு அவரை கடவுளுக்கு நிகரானவர் என் மேனேஜருக்கு தெரியும்படி அதை அடிக்கடி திறந்து பார்க்கவும்.

9. மேனேஜருக்கு வாக்கிங் போகும் பழக்கம் இருந்தால் நீங்களும் தினமும் அவருடன் வாக்கிங் செல்லவும். அவரிடம் உங்களைப்போல் நல்லவர், உத்தமர், உலகில் எவரும் இல்லை எனச்சொல்ல வேண்டும்.  அவர் செய்யும் அனைத்தையும்  புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

10. தினமுமோ அல்லது வார இறுதியில் மேனேஜர் வீட்டிற்கு சென்று தேவையான வீட்டு வேலை செய்யவும்.

11. அவர் வீட்டில் இருக்கும் நாயை கொஞ்சவும்.

12. மேனேஜருக்கு டீன்ஏஜ் வயதில் பெண் இருந்தால் அவளை சிஸ்டர் என்று அழைக்கவும்.

13. குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று வர புதுப்படத்திற்கு டிக்கெட் எடுத்து தரவும்

14. மறக்காமல் அடுத்தவனை பற்றி போட்டு குடுக்கவும்.

15.  மேனேஜர் சொல்லும் எந்த வேலையையும் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

Thanks to lolluguru.blogspot.in

4/08/2013

சாதி, மதமெதற்கு உனக்கு?

 

மதமெதற்கு உனக்கு?

சிகரம் தொடு
அகரம் எடு
ஆயுளுள்ளவரை
ஆணவம் போக்கு

சாதிக்காக
மோதிச் செத்தவர்களின்
சரித்திரங்களை விட்டுவிடு
மீதியுள்ளவர்களைப்
பாதிக்கவிடாமல்
சாதிக்கவிடு

முற்றிய முதுகெலும்பு
முன்னும் பின்னும் வளையாது - நீ
இளமையிலே தூக்கி எறி
இனியெதற்குச் சாதி

மனிதனைப்
பதம் பார்க்கும்
மதமெதற்கு உனக்கு? - அதை
அடியோடு ஒதுக்கு

வஞ்சகரின்
நெஞ்சமெரிய - நம்
வண்ணத்தமிழின் பெருமையை
வான்மீது முழங்கச் செய்


சுசி. ஜெயசிலன்

எதுவும் சில காலம் தான்.



வாழ்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்:-

1. எதுவும் சில காலம் தான்.

2. சிந்தனை செய், கோபப்படாதே.

3. கடவுளையும், உன்னையும் மட்டுமே வாழ்வில் முழுமையாக நம்பு.

4. எதிர்பார்ப்பை குறைத்து கொண்டால், ஏமாற்றம் ஒன்றும் பெரிதாக தெரியாது.

5. வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை, அதை அர்த்தமுள்ளதாக வாழ்ந்து விட்டு செ
ல்.



எதிர் காலத்தை பற்றி நீ சிந்திக்காவிட்டால்,

உனக்கு எதிர் காலம் என்ற ஒன்றே இருக்காது...

************************
விடலைப்பருவம்

நல்ல விஷயங்களை கேட்க மாட்டோம்...

நல்ல விஷயங்களை பார்க்க மாட்டோம்...

நல்ல விஷயங்களை பேச மாட்டோம்....

**********************************

நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும்

மரணம் உன்னை விட்டு விலகி நிற்கும்..


***********************

பிறர் குற்றம் காண்பதும்

தன் குற்றம் மறுப்பதுமே,

மடமையின் முழுமையான அடையாளம்..


***********************************************

"பணத்தை சம்பாதித்தால்

மகிழ்ச்சியாக வாழலாம்" என்று எண்ணி,

நாம் போட்டி பொறாமையை

மனதில் வளர்த்துக் கொள்கிறோம்....

ஆனால்,

பணக்காரர்கள் பெரும்பாலும்,

மனநிம்மதி இழந்தவர்களாகவே வாழ்கிறார்கள்..

**********************************************

விடியும் வரை தெரியாது

நடந்தது கனவு என்று....

நட்பு
ம்,  அன்பும் அப்படித்தான்,

பிரியும் வரை தெரியாது,

எவ்வளவு ஆழமானது என்று...

*****************************************************

கண்ணில் கண்டவர்களிடம் எல்லாம்

நம் மனக்குறையைச் சொல்லி வருந்துவது

நல்ல குணமல்ல.....

கருணைக்கடலான, இறைவனிடம்

உங்கள் குறைகளை முறையிட்டு வாருங்கள்.

நிச்சயம் மனஅமைதி கிடைக்கும்.....

*********************************************

3/29/2013

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்!



1. உங்கள் தேவைகளைக் குறைத்துக் கொண்டு ராஜாவைப் போல வாழுங்கள்.

2.அனைத்துவித தூண்டுதல்களிலிருந்தும் விலகி இருங்கள். தூண்டுதல்களை உண்டாக்கும் இடங்களுக்கு செல்லாதீர்கள். பிறகு தூண்டுதல்களை தவிர்க்க போராட வேண்டியிருக்கும். அது உங்கள் இச்சா சக்தியை வீணடிக்கும். தூண்டுதலை தடுப்பதில் நீங்கள் வெற்றி பெற்றாலும், அது உங்கள்மனதில் ஒரு ஆசையை விட்டுச் செல்லும். ஆசை அல்லது விருப்பமே மன சஞ்சலத்தைத் தூண்டுகிறது.

3.உங்கள் பொதுவான புறவேலைகளுக்கேற்ப தேவையானவற்றை மிகமிகக் குறைத்துக் கொள்ளுங்கள். ஆசைகளும் தேவைகளும் மிக மிகக் குறையும்போது மன அமைதி மிகவும் அதிகரிக்கும். உடைமைகள் துன்பத்தைத் தருகின்றன.

4. ஒரு சில நம்பகமான நண்பர்களிடம் மட்டுமே பழகுங்கள். பழக்கத்தை பெருக்க வேண்டாம். எவருடனும் அதிகமாக நெருங்கிப் பழகவேண்டாம். அதிக நெருக்கம் அலட்சியத்தை உருவாக்கி உணர்ச்சிகளை உருக்குலைத்து மன அமைதியைக் கெடுக்கிறது.

5.காரணத்துடன் மட்டும் பேசுங்கள். அனைத்துவிதமான தேவையற்ற பேச்சையும் தவிருங்கள். அளந்தே பேசுங்கள், களங்கமற்ற, நல்நோக்கம் கொண்ட வார்த்தைகள் சில நேரங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு பிரிவை உண்டாக்குகிறது. எதிலும், எவருக்கும் புத்திமதி கூறாதீர்கள். உங்களிடம் கேட்காத வரையில், நமது வேலையைப் பார்ப்போம்.

6. விவாதம் செய்யாதீர்கள். ஒரு பொழுதும் தர்க்கத்தில் ஈடுபடாதீர்கள். அது உங்களுக்கு எந்தவிதமான உருப்படியான விளைவுகளையும் தராது. அது உங்கள் ஆணவத்தைப் பெருக்கும் மற்றவரைப் புண்படுத்தும், நண்பர்களுக்குஇடையே பிளவை உண்டாக்கும்.

7. மன அமைதியும், பொருள்களின் மீதான பேராசையும் ஒன்றுக்கொன்று முரணானவை. அவை இரண்டும் ஒத்துப்போகாது. உங்களுக்கு எதுதேவையோ அதை தேர்ந்தெடுங்கள்.

8. நீங்கள் மக்களுக்கு நன்மை செய்தாலும், அவர்கள் அதற்கு ஒரு சுயநல நோக்கத்தைக் கற்பித்து உங்களைக் குறை கூறுவார்கள். இருந்தாலும் நல்லதையே செய்யுங்கள்!

9. மக்கள் உண்மையாகவே உதவியை எதிர்பார்த்து நிற்கிறார்கள். ஆனால், உதவி செய்தால் உங்களையே தாக்கக்கூடும். இருந்தாலும் உதவியையே செய்யுங்கள்.

10.உங்களிடமுள்ள மிகச் சிறந்தவற்றை உலகுக்கு அளியுங்கள். ஆனால்,இவ்வுலகம் உங்களைக் காலால் மிதித்து தள்ளிவிடும். இருந்தாலும் உலகுக்கு உங்களிடமுள்ள சிறந்தவற்றையே வழங்குங்கள்.

11. நீங்கள் இன்று செய்யும் நன்மை நாளைக்கே மறுக்கப்பட்டுவிடும். இருந்தாலும் நல்லதைச் செய்யுங்கள்.

12. உங்கள் முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெற்றால், விரோதிகள் தோன்றுவது இயற்கை, இருந்தாலும் வெற்றிப்பாதையில் செல்லுங்கள்!

13. வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் இந்த உலகத்தினர் குறை சொல்லத்தான் செய்வார்கள். நீங்கள் மக்களுக்கு நன்மை செய்தாலும் அவர்கள் அதற்கு ஒரு சுயநல நோக்கத்தைக் கற்பித்து உங்களைக் குறைகூறுவார்கள். இருந்தாலும் நல்லதையே செய்யுங்கள்.

14. நியாயத்திற்கு விரோதமாக, தர்க்கத்திற்குப் பொருந்தாதவர்களாக, தன்னலம் மிகுந்தவர்களாக மக்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களிடம் அன்பாக இருங்கள்.

15. பிரார்த்தனையைப் போன்று பரிசுத்தப்படுவது வேறு ஒன்றும் கிடையாது. ஒழுங்காக நாள்தோறும் பிரார்த்தனை செய்து வந்தால் உங்களது வாழ்க்கை நன் முறையே உருவாக்கப்படும்.

16.  நீங்கள் நல்லநிலை பெற வேண்டுமென விரும்பினால் முதலில் உங்களிடமிருக்கும் கீழான ஆசைகளை துறந்துவிடுங்கள்.

-சிவானந்தர்

Thanks to Dinamalar