மொத்தப் பக்கக்காட்சிகள்

9/22/2012

தத்துவங்கள் 100



1.அமைதியாய் இரு  -  ஊமையாய் இராதே!

2. விட்டுக்கொடு -  ஏமாளியாகாதே !

3. உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல். - ஜெரேமி டெய்லர்.

4. துயரம் தலையை நரைக்கச் செய்யும். அதே சமயம் இதயத்தை வலிமையாக்கும்.- ஜார்ஜ் பெய்ஷி.

5. அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல; விடாமுயற்சியினால்தான். - ஓவிட். 

6. அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். - சாலமன். 

7. தோல்வி குற்றம் காது. உயர்வற்ற லட்சியமே ஒரு குற்றமாகும். - ஜேம்ஸ்ரசல்


8. உங்களிடம் யாரவது உழைப்பை எதிர்பார்த்து ஒரு நிமிஷம் என்றால் என்ன என்பதை அறியாமல் சரி     சொல்லாதீர்கள்.-அலெக் மெக்கன்ஸி.

9. உன் நேரத்தைப் பாதுகாத்து கொள். அவை தீட்டப்படாத வைரங்கள்.-ரால்ஃப் வல்டோ எமர்சன்.

10 .வெற்றிபெறும் நேரத்தைவிட நாம் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி.

11.ஆயிரம் நண்பர்கள் இருப்பார்கள் .சமயத்திற்கு ஒருவரும் அகப்படமாட்டார்கள். ஒரே ஒரு எதிரி இருப்பான்.எங்கேயும் எப்போதும் அவன் எதிர்ப்பட்டுக் கொண்டே இருப்பான்.

12.தேக்கம் என்பது மரணம், நீரோட்டம் என்பது வாழ்வு.

13.அறிவு என்பது கொல்லன் பட்டறை ஈட்டியைப்போல், அவ்வப்போது தீட்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

14.அச்சம் என்பது அடைகாக்கப்படும் அழுக்காகும்.

15.ஆசிரியர் கதவைத் திறக்கிறார், நீ உன் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கிறாய்.

16.நீங்கள் சூரியனின் ஒளியில் பிரவேசிக்கும்போது, அதன் நிழல் உங்களை பிரதிபலிக்கின்றது.

17. .நீங்கள் உண்மையைச் செலுத்தும்போது அதுவே திரும்பக் கிடைக்கிறது.

18.கடினமான செயல்களைக் சிறியதாகவும், புகழ்பெற்ற செயல்களை எளிமையாகவும் கையாழப் பழகவேண்டும். இதுவே உண்மையான வெற்றிக்கு அறிகுறி. 
19.நாம் வாழ்வில் ஒரு வழியைத்தேடி கொண்டிருக்கும்போதே இன்னொரு வழி எளிதாக அமைகிறது
20.எந்த முயற்சியில் நீங்கள் தீவிரமாக ஈடுபடுகிறீர்களோ, ஒரு கட்டத்தில் அதை நீங்கள் அடைகிறீர்கள். 
21.மற்றவர்கள் உங்களுக்குத் தடைக்கல்லாய் இருக்கும்போதுதான், உங்களுக்கு நிரந்தரப் பாதை வெளிச்சமிடப்படுகிறது. 
22.பழக்க வழக்ககங்களே ஒருவனை நல்லவனாகவும், தீயவனாகவும் மாற்றுகின்றன. 
23.மழைத்துளி சொன்னது, முத்துக்கான வித்து எப்பொழுதும் விழலாம். விழித்திரு, மனிதா விழித்திரு. 
24.உண்மை ஒரு நாள் வெண்றே தீரும். 
25.தன்னுடைய தவறு எது என்பதைக் கண்டுபிடிப்பவன், அறிவுடன் வாழ முதல் படிக்கட்டில் கால் வைத்துவிட்டவன் ஆகிறான். 
26.உலகின் மிகவும் தெய்வீகமானது, சக மனிதரிடம் நீங்கள் காட்டும் அன்பும், பரிவும்தான். 
27.செல்வம் குடியிருக்கும் வீட்டில் மனித பண்பு சீரழிகிறது. 
28.அழகே உண்மை, உண்மையே அழகு. 
29.அறிஞர்கள் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் இசைந்து கொடுப்பதில்லை. 
30. தன்னம்பிக்கை, துணிவு, பயம் இந்த மூன்றில் முதல் இரண்டும் அழகான உயர்வான வாழ்க்கையை அமைத்து தருகின்றன. 

தன்னம்பிக்கை இருந்தால் துணிந்து காரியத்தில் இறங்கி செயல்பட முடியும். தன்னம்பிக்கை இல்லை என்றால் அது பயத்தை நமக்கு பரிசாகத் தருகிறது. பயந்தவர்கள் எதிலும் துணிச்சலுடன் காரியத்தில் ஈடுபட மாட்டார்கள். துணிச்சலுடன் காரியத்தில் ஈடுபட்டு இருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கவேண்டும்.

31.நல்ல சிந்தனைத் திறன் மட்டும் இருந்தால் போதாது, அதை எப்போதும் செயல்படுத்திக்கொண்டே கடைசிவரை வாழ்வதில்தான் வெற்றியையும், மகிழ்ச்சியையும் நாம் உணர முடியும்.

32.மயக்கம், தேவை இல்லாத பயம், அளவுக்கு மிஞ்சிய தூக்கம்,ஆத்திரம்,சோம்பல்,எதையும் தாமதமாக செய்தல், இந்த ஆறு குனங்களும் முன்னேற்றப் பாதையின் முட்டுக் கட்டைகள்.4.நான்கு வேண்டும்.

i )ஒழுக்கம் உள்ள நடத்தைக்கு நல்ல நண்பர்கள் தேவை.

ii) அறிவு வளர நல்ல விஷயம் அறிந்த ஆசான் வேண்டும்.

iii) சுவையான உணவுக்கு அன்புள்ள தாய் வேண்டும்.

iv) தூய்மையான சிந்தனை ஏற்பட தெய்வபக்தி வேண்டும்.

மகிழ்ச்சியின் சாவி பொறுமை. - துருக்கி

*சிந்தனையின் வெளியீடு இலக்கியம். - வேனா

*அன்புள்ள மனம் சலனமற்று ஓடும் நதி. - ரிக்டர்

*இந்த உலகில் மதம் ஒரு நல்ல கவசம், ஆனால் மோசமான மேலங்கி.- புல்லர்

*இதயங்கள் சேர்ந்திருக்கட்டும், ஆனால் கூடாரங்களை தனித்தனியாக அமையுங்கள். -

*மனம், வாக்கு, உடம்பு மூன்றையும் அடக்கத்தில் வைத்திரு. - கம்பர்.

*அடக்கமே உன்னை அமரனாகச் செய்யும். அதுவும் இளமையில் அந்த அடக்கம் வருவது பொன்மலர் நாற்றமுடைத்து போன்ற சிறப்பைத் தரும். - வாரியார்.

நாம அடுத்தவங்களுக்கு என்ன நினைக்கிறோமோ செய்கிறோமோ அதைத்தான் ஆண்டவன் நமக்கு நினைப்பாரு, செய்வாரு.

32.நல்ல சொற்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. நல்ல செயல்கள் நம்மை மெளனமாக்குகின்றன.- பிரான்ஸ்

33. பிரார்த்தனையின் முதல் திறவுகோல் சுத்தமாக இருத்தல்.

34 உலகில் இருவகை குடும்பத்தினரே இருக்கின்றனர். அவர்கள் இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்கள். - போலந்து.

35.மனிதனை மாற்றி அமைக்கும் விதி, அவனது ஒழுக்கமே! - கிரீஸ்

36நியாயம், நேர்மை உங்கள் செயல்பாடுகளில் வெளிப்பட மரணத்தின் நினைவோடு வாழ்ந்து வாருங்கள். - லத்தீன்

37."நீரை சல்லடையில் கூட அள்ளிவிடலாம் அது பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருக்க வேண்டும்

38.அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான் - காந்தியடிகள்
39.அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.- ஓர் அனுபவசாலி

40.இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும். - அரவிந்தர்

41.கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பொ¢தும் நாசப்படுத்தி விடும் - கிளெண்டல்

42.என்றாவது நான் ஆசிரியரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல, கல்வி கற்பதற்காகவும் இருக்கும் - டொரோதி தெலூஸி

43.நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை - எமர்சன்

44.மனிதனின் வாழ்க்கை பிறருக்கும் நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் - வா¡¢யார் சுவாமிகள்

45.உண்மையிடம் அடைக்கலம் தேடியவன் பலத்தோடும் சுகத்தோடும் இருக்கிறாள் - ஜேம்ஸ் ஆலன்.

46.இறைவனின் தரிசனத்திற்காக முயற்சிக்கும் ஒருவனுக்கு தெய்வீக நாமமே புகலிடம் ஆகும். - சுவாமி ராமதாஸ்.

47.நம்பிக்கை உள்ளவர்கள் எந்த சூழலையும் சாதகமாக்கிக் கொண்டு முன்னேறுகிறார்கள் - ஓர் அறிஞர்

48.மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக்கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும் - மு.வ.

49.நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது. - ஜான்ஸன்

50.ஒரு நல்ல நூல் ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும். - வில்லியம் ஹாஸ்விட்

51.ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையெனில் அவன் வாழ்வு சிறக்காது. - ஷாம்பர்ட்

52.நீ பேசும் வார்த்தைகளின் மீது உனக்குள் கட்டுப்பாடு இருக்க வேண்டும் - அரவிந்தர்

53.உலகம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள் - சுவாமி விவேகானந்தர்

54.உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது - எமர்சன்

55.கட்டாயப்படுத்திப் புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது - பிளேட்டோ

56.காலத்தில் செய்வதைத் தள்ளிப்போட வேண்டாம். தாமதத்தால் தீய முடிவுகள் ஏற்படும். - ஷேக்ஸ்பியர்

57.நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம் - காந்திஜி

58.அசுத்தங்களுள் மோசமான அசுத்தம் கோபம்தான் - யாரோ

59.வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் முழுக்க முழுக்க பயன் உள்ளதாக ஆக்கிவிட வேண்டும் - மாயோ போஜியோ

60.துயரத்திற்கு ஒரே மாற்றுமருந்து சாதனைதான் - ஹென்றி லீவ்ஸ்

61.கல்வியின் பயன் எதையும் கோபப்படாமலும், தன்னம்பிக்கையை இழக்காமலும் செவிசாய்க்கும் திறன் - ராபர்ட் பிராஸ்ட்

62.நம்மை நாம் அறியாததன் காரணமாகவே நமக்கு ஆசையும் பயமும் உண்டாகின்றன (சுவாமி ராமகிருஷ்ணானந்தர்)

63.ஒருவர் இருந்தால் ஆனந்தம்;  இருவர் என்றால் சுகம்;    மூவர் இருந்தால் அபிப்பிராய பேதம், வம்பு;         நால்வர் என்றால் சண்டை தவத்திற்கு ஒருவர்; தமிழுக்கு-உரையாடலுக்கு இருவர்; வம்புக்கு மூவர், சண்டைக்கு நால்வர்.

64.'ஏக் நிரஞ்சன், தோ சுகீ, தீன் கட்பட், சார் லட்பட்' என்று இந்தியில் ஒரு பொன்மொழி இருக்கிறது. ஏகாந்தமாய் இருப்பதே இன்பத்தை அடைய வழி.- (ஸ்ரீ ஞானனானந்தகி¡¢ சுவாமிகள்)

65.உழைக்கவும், அதன் பின்விளைவிற்காகக் காத்திருக்கவும் கற்றுக் கொள்- (லாங்·பெல்லோ)

66.பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது (அ¡¢ஸ்டாட்டில்)

67.அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே (அனுபவ வாக்கு)

68.மனிதன் சுதந்திரமாகச் செயல்படு
வதைக் காட்டிலும், மற்றவர்களைக் சார்ந்தே வாழ்கிறான். (ஜார்ஜ் பெர்னார்டு ஷா)

69.எல்லோரும் ஒரே மாதி¡¢யாகச் சிந்திக்கும்போது, ஒருவரும் நன்றாகச் சிந்திப்பதில்லை (விட்மன்)

70.சமுதாயத்தின் எதிர்காலம் தாய்மார்கள் கையில்தான் உள்ளது. (டிபியன் போர்ட்)

71.உலகின் மிகச் சிறந்த மக்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள் (ஷில்லாவகில்)

72.தீமைகளைக் குறை; நன்மைகளை அதிகப்படுத்து; அதற்காக பாடுபடு (ஓர் அறிஞர்)

73.காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது; காற்றுடன் அல்ல (வின்ஸ்ட்டன் சர்ச்சில்)

74.நண்பரின் சட்டைப்பையில் துவாரம் இருக்கும்போது அதில் நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு உதவி செய்ய முடியாது- டக்ளஸ் ஹட்

75.*மோசமான விமரிசனங்கள் எவ்வித அர்த்தத்தையும் கொண்டிருப்பதில்லை. அவற்றின் நோக்கம் அறிவுரை வழங்குவதோ அல்லது உதவி செய்வதோ அல்ல, அன்றி இழிவுபடுத்துவதே. - பார்பரா ஷெர்

76.*வாழ்வின் ஒவ்வொரு கணமும் அதிசயமும் மர்மமும் நிறைந்தது என்பதை கடிகாரமும் நாட்காட்டியும் எமது கண்ணில் இருந்து மறைத்துவிட நாம் அனுமதிக்கக்கூடாது. - எச். ஜி. வெல்ஸ்

77.மனதைத் திறந்து வைத்திரு. நீ அறிந்ததைவிட பெரிய விடயம் ஒன்று இங்கு நடந்துகொண்டிருக்கிறது. - இயன்லா வன்சான்ற்.

78.வெறும் கடமையுணர்வின் மூலமோ குறிக்கோளின் மூலமோ பெறுமதியான எதுவும் நிகழ்ந்துவிடுவதில்லை. மாறாக மனிதர்களிலும் கொண்ட இலட்சியத்திலும் உள்ள விசுவாசத்தினாலும் அர்ப்பணிப்பினாலுமேயாகும். - அல்பேட் ஐன்ஸ்டீன்.

79.நெருக்கடி மிக்க வேளைதான் அதிகூடிய அனுபவத்தையும் அறிவையும் பெற்றுக்கொள்ளும் காலம். - தலாய் லாமா.

80.மிகவும் இருண்டிருந்தால் உன்னால் நட்சத்திரங்களின் ஒளிக்கீற்றைப் பார்க்க முடியும். - சாள்ஸ் பேட்

81.பள்ளியில் பாடத்தை கற்றுக்கொண்டபின் பரீட்சை எழுதுகிறோம். ஆனால் வாழ்க்கையிலோ பரீட்சையின் பின்தான் பாடம் படிக்கிறோம்.- யாரோ

82.மனமகிழ்வுடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்யப்படும் வேலை ஒரு அழகான அனுபவம். - பேர்ள் எஸ். பக்

83.புறச்சூழல் எம்மை துன்பத்துக்குள்ளாக்குவதாக புலம்புகிறோம். உண்மையில் அது எமது தீர்மானம் மட்டுமே. அதிலிருந்து விடுபடக்கூடிய சக்தி எம்மிடம் உண்டு. - மார்கஸ் அரேலியஸ்

84.சோம்பேறிகள் என்று எவருமில்லை. சோம்பேறிகள் போல் தோன்றுபவர்கள் தங்களுக்கு மிகவும் பொருத்தமான வேலையைப் பெற்றுக்கொள்ளாத துரதிஸ்டசாலிகள்.- நெப்போலியன் ஹில்

85.கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருந்தால் ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடத்தைப் புகட்டும். ஒவ்வொரு பின்னடைவும் மாறு வேடத்திலுள்ள ஆசீர்வாதங்களே. பின்னடைவுகளும் தற்காலிகத் தோல்விகளும் இல்லாமல் நாம் எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஒரு போதும் அறிய முடியாது.- நெப்போலியன் ஹில்

86ஒரு சிறிய செயலின் மூலம் ஒரு எளிய மனதை மகிழ்ச்சிப்படுத்துவது ஆயிரம் பேர் கூடும் ஒரு பிரார்த்தனையிலும் விட மேலானது.- ஸாடி

87.எமது எல்லைகளை தெரிந்துகொண்டவுடன் எம்மில் ஆர்வம் காட்டுவதை குறைத்துக் கொள்கிறார்கள்.- எமர்சன்

88.மகிழ்ச்சியினை எம்மில் காண்பது சுலபமானதல்ல. அத்துடன் அதனை வேறெங்காவது காண்பதும் சாத்தியமில்லை.- அக்னஸ் றெப்லையர்
89.புதியனவற்றைப் பற்றிய பயம் மாற்றங்கள் ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது.- பிலிப் குறொஸ்பி

90.உன்னுடைய அனுமதி இன்றி எவரும் உன்னை இழிவு படுத்த முடியாது.- எலனொர் றூஸ்வெல்ற்

91.ஒருவன் தவறுகளைச் செய்ததனால் தயங்கித் தயங்கி தாழ்ந்து போகிறான். மற்றவனோ தவறுகளையே படிக்கட்டுகளாக்கி உயர்கிறான்.- கென்றி சி. லிங்க்

92.எவ்வாறு எமது உள்ளத்தீயை அணையாமல் வைத்திருப்பது? இதற்கு குறைந்தது இரண்டு விடயங்கள் தேவைப்படும். ஒன்று: எம்மிடமுள்ள நல்ல குணங்கள், நாம் செய்த நல்ல விடயங்களை மெச்சிக்கொள்ளுதல். மற்றது: செயல்களை நிறைவேற்றி முடிக்கும் மனத்திடம்.

93.என்னுடைய வாழ்க்கையில் என்ன நல்ல விடயங்கள் உள்ளன? நான் என்ன செய்ய வேண்டும்? இவை ஒவ்வொரு நாளும் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகளாகும். - நதானியல் பிராண்டன்

94.வெற்றி என்பதன் அர்த்தம் தோல்வியின்மை அல்ல. வெற்றி என்பது இறுதி இலக்கை அடைந்து கொள்வதாகும். அதாவது போரை வெல்வது, ஒவ்வொரு சமர்களையுமல்ல. - எட்வின் சி. ப்ளிஸ்

95.சிக்கனத்தைக் கடைப் பிடிக்காத எவருமே செல்வந்தனாக முடியாது. சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் எவரும் ஏழையாகவும் இருக்க முடியாது. -ஜான்சன்

96.எதிலும் சிக்கனம் பிடிப்பவர் மன்னிக்க முடியாத கருமி. சிக்கனம் செய்யாதவன் பைத்தியக்காரன். - ஜார்ஜ் நேவில்

97.சில்லறைக் காசை நீ காத்துக் கொள்ள. பெரிய காசு உன்னைத் தானாக காத்துக் கொள்ளும். - பெஞ்சமின்

98.சிறிய செலவுகள் பற்றிக் கவனமாயிருங்கள். சிறிய ஓட்டை பெரிய கப்பல்களையும் கவிழ்க்கும். - ஜார்ஜ் பெர்னாட்ஷா

99.சிக்கனம் சிறியதொரு வருமானம். - லிஸ்ரோ

100 தடவை நீ தோற்றாலும், நீ வெற்றியே பெற்றுருக்கிறாய். 100 தடவைகளிலும் எந்த தவறுகளைச் செய்யக்கூடாது  என்பதை கண்டுபிடிப்பதில் வெற்றி அடைந்திருக்கிறாயே

9/18/2012

விநாயகர் தோற்றம் குறித்த புராணக்கதைகள்


ஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு சிறுவனை உருவாக்கி உயிர்கொடுத்து காவலுக்கு நிக்கச்சொன்னார். யாரையும் உள்ளே விடவேண்டாம் எனவும் கட்டளையிட்டார். அப்போது அங்கே வந்த சிவபெருமானை தடுத்தான் அந்தச் சிறுவன். கோபமுற்ற சிவபெருமான் அவன் தலையை துண்டித்தார். பின்னர் பார்வதியின் மைந்தன் என்பதை அறிந்த சிவபெருமான் அச்சமுற்று, தன் பூதகணங்களை அழைத்து அவர்கள் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து எடுத்துவருமாறு கூறினார். அவர்கள் முதலில் பார்த்ததோ ஒரு யானையை. சிவபெருமானின் கட்டளைப்படி அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்துவந்தனர். அதனை சிவபெருமான் அந்த சிறுவனின் உடம்பில் ஒட்டவைத்து மீண்டும் உயிர் கொடுத்தார். அப்போது வெளியே வந்த பார்வதி பிள்ளை யாரு? எனக் கேட்டார். அதுவே அச்சிறுவனுக்கு பெயராகிவிட்டது. அச்சிறுவன் தான் பிள்ளையார்.

Thanks to wikepedia

9/05/2012

மதுரை சிவக்குமாரின் வலைச்சரம்




http://mdusskadl.blogspot.com// ·                             விழிப்புணர்வு.

http://madurai-pcl-sivakumar.blogspot.in/        படித்ததில் பிடித்தது.

http://wwwsithancom-sivakumar.blogspot.com/      . பொது அறிவுச்செய்திகள்

 http://maduraisskadl.blogspot.com//         சிறுகதை:

 http://www.mdusskadlsk.blogspot.in/        நகைச்சுவை.காம்.

http://www.sskganesh.blogspot.in/   பார்த்ததில் பிடித்தது

https://ssktamilquotes.blogspot.in/     தமிழ் பொன் மொழிகள்

http://mduadlssk.blogspot.com//            TAMIL CLASSICAL SONGS

http://sivaadvisor.blogspot.com//          முதலீடு மற்றும் காப்பீடு 

வாழ்க்கையில் கஷ்டம் ஏன் ? ரஜினிகாந்த் பேச்சு

வாழ்க்கை..   மகிழ்ச்சி இருப்பவருக்கு மட்டுமே வாழ்க்கை சுகமானது ....
வாழ்கையில் கஷ்டங்கள் மட்டுமே எதிர் பார்க்கும் நபருக்கு கஷ்டம் மட்டும் சுகமானது .....

ஒரே மண்ணில் பிறந்த ஒரே மாதிரி மனிதர்கள் ஏன் பலவிதமாக வாழவேண்டும்? எதற்கு பலர் கஷ்டப்பட வேண்டும்? சிலர் மட்டும் வசதி வாய்ப்போடு களிப்புபோடு வாழ வேண்டும்? அவர்களில் சிலரால் மட்டும் எப்படி மற்றவரை துன்புறுத்த முடிகிறது? போன்ற கேள்விகள் என்னைத் துளைத்தெடுக்கும். நம்மால் என்ன செய்யமுடியும் என்ற இயலாமையும் அதன் பங்குக்கு சுட்டெரிக்கும்.

 வாழ்க்கையில்  கஷ்டம்  ஏன் ? ரஜினிகாந்த் பேச்சு

1)  நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்; ஆனா கைவிடமாட்டான்.

2)  கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. அப்படி கிடைக்கிறது என்னிக்குமே நிலைக்காது.

3) ஆண்டவன் எல்லாருக்கு எல்லாம் கொடுக்குறதில்லை. ஏதாவது ஒரு குறை வைக்கிறான். ஏன்னா, குறையே இல்லைன்னா, நாம ஆண்டவனையே மறந்துடுவோம்.

4) உலகினில் எதுவும் நிரந்தரமில்லை. உறங்கிடும் வரையில் சுதந்திரமில்லை.

5) உன் வாழ்க்கை உன் கையில் !

6) என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களே

“மக்கள் மனதில் இறைவன் இருக்கிறார்” - ரஜினிகாந்த்

“கஷ்டப்படுகிறவர்களுக்கு, துன்பம் அனுபவித்தவர்களுக்கு ஆண்டவன் ஒரு நாள் உதவாமற்போக மாட்டான். எப்பொழுதுமே கஷ்டப்படட்டும் என்று யாரையும் ஆண்டவன் கை விட்டுவிட மட்டான். ஆரம்பதிலிருந்து கடைசி வரை கஷ்டப்பட்டே வாழ்ந்து செத்தவர்கள் இந்த உலகத்தில் யாரும் கிடையாது. அதே போல, பிறந்த தேதியிலிருந்து இறுதிவரை சந்தோஷத்துடனே வாழ்ந்து மடிந்தவர்களும் கிடையாது.

அது தன் இயற்கை என்று சொல்லும்பொது, அதில் பல அம்சங்களும் அடங்கி இருக்கும். கஷ்டம் - சுகம்; பாவம் - புண்ணியம்; நல்லவர்கள் - கெட்டவர்கள்…. என்று பல வகையான அனுபவங்களும் கொண்டதுதான் இயற்கையின் போக்கு. வாழ்க்கையில் கஷ்டதையும் ஒரளவாவது அனுபவித்தால்தான் சுகத்தின் பலன் நமக்கு முழுமையாகக் கிட்டும். நீங்கள் ஓர் ஏர் கண்டிஷ்ண்ட் ரூமிலேயே தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால், அதனுடைய அருமை அவ்வளவாகத் தெரியாது. ஆனால் சிறிது நேரம் வெயிலில் இருந்துவிட்டு, அதன் பிறது ஏ.சி.ரூமுக்குப் போனால், அப்பொழுது அதன் அருமை நன்றாகவே தெரியும்.

ஆகையால்தான், மனிதர்களின் இந்த இயல்பை அறிந்த ஆண்டவன், கஷ்டம், சுகம் இரண்டையுமே வாழ்க்கையில் சேர்த்தே வைத்திருக்கிறான். நமக்கு சுகமான அனுபவங்கள் வரும்போது நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கஷ்டமான அனுபவங்கள் நேரிட்டால், மிகவும் வெறுத்துப்போய் விடுகிறோம்.

இப்படிப்பட்டவர்களை ஆண்டவனுக்குப் பிடிக்காது என்று நான் நினைக்கிறேன். இதனால் தான் சில பேருக்கு சில நேரங்களில் ஆண்டவனின் அருள் கிட்டுவதில்லையோ என்றுகூட எனக்கு தோன்றுகிறது. சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.

வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமான விஷயமல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு இன்பம் கிட்டும் பொழுது அது நிலையானது அல்ல என்ற உணர்வு நம்முள் இருந்தால், நாம் அடக்கத்துடன் அந்த இன்பத்தை அனுபவிப்போம். அதே போல், கஷ்டம் வரும்பொழுது அதுவும் நிலையானதல்ல என்று நாம் உணர்ந்து கொண்டால் அந்த கஷ்டத்தின் சுமை தாங்க முடியாமல் அப்படியே நொந்து போய் நொறுங்கிவிட மாட்டோம். வாழ்க்கையில் இரண்டும் கலந்துதால் இருக்கும். அதுதான் நல்லதும் கூட.

ஒரு விஷயத்தை நாம் அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டும். மற்ற கஷ்டங்களோடு ஒப்பிடும்போது பண கஷ்டம் - அதாவது பணம் இல்லை என்கிற கஷ்டம் பெரிய கஷ்டமே இல்லை. சின்ன வயதிலேயே நமக்கு மிகவும் வேண்டியவர்கள் இறந்து போவது, சரியான நேரத்தில் நல்ல இடத்தில் கல்யாணம் செய்து நன்றாக வாழ முடியவில்லை என்கிற நிலை; நமது குழந்தைகள் முறையாக வளரவில்லை என்ற குறை, நமக்கு மிகவும் வேண்டியவர்களிடமே ஏற்பட்டுவிடுகிற மனஸ்தாபங்கள்; நமக்கு மிகவும் பிடித்தவர்களே நம்மை ஏமாற்றி விடுகிற நிலைமை… போன்ற கஷ்டங்கள் நம்மை மிகவும் பாதிக்ககூடியவை. நான்கூட முன்பெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தது உண்டு. பணம் இருந்தால் என்ன துன்பம் வந்தாலும் தாங்கி கொண்டுவிட முடியும் என்று. ஆனால், அப்படி இல்லவே இல்லை என்பதை நாம் உணர்ந்துவிட்டேன். பணம் இல்லையே என்ற கஷ்டம் கொஞ்சம் தான் வேதனையைத் தரும். ஆனால், நான் மேலே குறிப்பிட்ட மாதிரி நிலைமைகள் தான் நமக்கு அதிக வேதனையை கொடுக்ககூடிய கஷ்டங்கள்.

பிரச்சனைகள் வரும்போது - அது பணப் பிரச்சனையோ, அல்லது மன நிலையைப் பாதிக்கக்கூடிய வேறு ஏதாவது பிரச்சினையோ - என்ன சம்பவங்கள் நடந்தாலும், அதனால் உடனே மனம் உடைந்து அந்தக் கஷ்டத்தின் சுமையைத் தாங்க முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டு வாழ்வதில் அர்த்தமில்லை. அந்த கஷ்டத்தை தீர்க்க, உடனடியாக முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். எப்படி தீர்வு காண முடியும் என்று யோசிக்க வேண்டும். அந்த பிரச்சினை எப்படி தீர்வு காண முடியும் என்று யோசிக்க வேண்டும். அந்த பிரச்சினை எப்படி யோசிக்க வேண்டும். அந்த பிரச்சினை எப்படி உருவானது? ஏன் உருவானது? யாரால் உருவானது? அதில் நம் தவறு என்ன? என்றெல்லாம் தீர ஆராய்ந்தால், பிரச்சினை உருவானதற்கான காரணம் தானாகப் புரிந்துவிடும். தவறு நம்முடையதாக இருந்தால், மன்னிப்புக் கேட்க வேண்டும். மற்றவர்களுடைய்தாக இருந்தால், அதை அவர்களுக்கு புறிய வைக்க வேண்டும். ஒரு பொய் சொன்னால் அதை மறைப்பதற்கு நூறு பொய்கள் சொல்ல வேண்டி வருவது போல - ஒரு கஷ்டத்தை நிவர்த்தி செய்வதில் உடனே கவனம் செலுத்தாவிட்டல், அதைத் தொடர்ந்து மேலும் மேலும் பல கஷ்டங்கள் உருவாகிவிடும்.

ஒன்றை மட்டும் திட்டவட்டமாகச் சொல்கிறேன். ஆண்டவன் எங்கேயும் இல்லை. மக்களுடைய இதயத்தில் தான் - மனதில் தான் இருக்கிறார். நான் எத்தனையோ வெளி நாடுகளைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். உலகத்தின் பல பாகங்களையும் சுற்றி வந்திருக்கிறேன். தமிழக மக்களுக்கு இருக்கிற மனித நேயம், கருணை, அந்த மனித இயல்பு வேறு யாருக்கும் எங்கேயும் கிடையாது. அதனால் தான் நம்முடைய தமிழ் நாட்டை ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்’ என்று சொல்கிறார்கள்.

ஒருவனிடம் திறமை இருந்து, நல்ல எண்ணம், நல்ல மனிதத்தன்மையும் இருந்தது என்று சொன்னால், அவனுடைய மொழி பற்றியோ, ஜாதி பற்றியோ, எதைப் பற்றியும் தமிழக மக்கள் கவலைப்பட மாட்டார்கள். ஆகவே இந்த மாதிரி உயர்ந்த குணம் உள்ள மக்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வரைமுறை இருக்க வேண்டும் இல்லையா? இவர்களுக்கு ஏதாவது கெடுதல் செஞ்சா, துரோகம் செஞ்சா - அவர்களை ஆண்டவன் தண்டிக்காமல் விடவே மாட்டன். வினை விதைத்தவன் வினை அறுப்பான். இது உறுதி.”

- நன்றி : துக்ளக்

8/31/2012

எம்எஸ்வி பற்றி ரஜினி!


வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்... ஜெயலலிதா.. எம்எஸ்வி!- அதிர வைத்த ரஜினி!


இது எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி அவர்களுக்கு பாராட்டு விழா. இங்கே உள்ள எல்லாரை விடவும் நான்தான் ஜூனியர்னு நினைக்கிறேன்
Add caption

சினிமாவில். எம்எஸ்வி அவர்களைப் பாராட்ட இளையராஜா சார், கமல் போன்றவர்களே வார்த்தையில்லாமல் தயங்கும்போது, நான் மட்டும் என்ன சொல்லிடப் போறேன்.
Add caption

அவருடன் நான் நிறைய படங்கள் கூட செய்யவில்லை. ஆனால் நான் பெங்களூரில் இருக்கும்போது, தமிழே தெரியாத கன்னடாக்காரங்க கூட, அர்த்தம் தெரியாமலே பாடும் பாட்டு போனால் போகட்டும் போடா... நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்...



எனக்கு அப்போ மொழி தெரியலேன்னாலும் தமிழ்ப் படங்களுக்கு அதிகமா போவேன். அப்படி ஒருமுறை சர்வர் சுந்தரம் படத்துக்குப் போனேன். ஒரு சாதாரண சர்வர் சினிமா நடிகனாக எப்படி ஆகிறான் என்பது கதை. நானும் கண்டக்டரா இருந்து, சினிமா நடிகனாகணும்னு நினைச்சிக்கிட்டிருந்த காலம் அது.

அந்தப் படத்துல ஒரு பாட்டு, 'அவளுக்கென்ன அழகிய மனம்..'. அதுல ஒரு சீன்ல மட்டும் எல்லோரும் கைத் தட்டறாங்க. எம்.ஜி.ஆர். ஒரு சிவாஜி இவங்களோட படங்கள்ல அறிமுகக்காட்சிக்கு எப்படி கைத்தட்டல், விசில் கிடைக்குமோ.. அப்படி ஒரு ரெஸ்பான்ஸ். எனக்கு புரியவேயில்லை. எதுக்கு எல்லாரும் இதுக்கு இப்படி கைத்தட்டுறீங்கன்னு பக்கத்துல இருந்தவரைக் கேட்டேன்.
Add caption

'அங்க கோட் போட்டுக்கிட்டு மியூசிக் கம்போஸ் பண்ற மாதிரி ஒருத்தரைக் காட்டறாங்களே... அவர்தான் இந்தப் படத்தோட மியூசிக் டைரக்டர் எம்எஸ் விஸ்வநாதன். அவருக்காகத்தான் இந்தக் கைத்தட்டல்,' என்றார்.
ஒரு இசையமைப்பாளருக்கு இவ்வளவு வரவேற்பா.. ரசிகர்களா... இத்தனை மதிப்பான்னு ஆச்சர்யமா இருந்தது.

நான் இங்கே வந்த பிறகு, அபூர்வ ராகங்கள் சமயத்துலதான் நேர்ல பார்த்தேன். நான் சினிமாவுல பார்த்ததுக்கும் நேர்ல பார்க்குறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லே. நான் பார்க்கும்போது... என்ன அவர் காவி உடை போடல... மத்தபடி நெத்தியில நீறு, குங்குமம் வெச்சிக்கிட்டு சாதாரணமா இருந்தார்.

மூன்று முடிச்சு படத்துல நான் பாடற மாதிரி ஒரு பாட்டு, அந்த போட் ஸாங். 'மண வினைகள் யாருடனோ..' எனக்கு தனித்துவமான முகம்.. அதுக்கேத்தமாதிரி Peculier வாய்ஸ் வேணும்னு கேட்டபோது, எம்.எஸ்.வி.சார்தான் எனக்காக குரல் கொடுத்தார்.

சினிமாவில் எனக்கு முதன் முதலா பாடினது எம்.எஸ்.வி சார்தான். அதுக்கப்புறம் நினைத்தாலே இனிக்கும் படத்துல 'சம்போ சிவ சம்போ...' பாட்டு பத்தி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க.

எம்.எஸ்.வி. - ராமமூர்த்தி மாதிரி சாதனையாளர்களைப் பத்தி பேசும்போது, எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது.

இந்த மரணம் என்பது இயற்கையானது. எல்லாருக்கும் வரக் கூடியது. இந்த மரணம் ஒரு தடவைதான் என்றில்லை... ரெண்டு முறை நிகழும். நிறைய பேருக்கு அதாவது தொன்னூறு சதவீத மக்களுக்கு மரணம் ஒரு தடவைதான். அதாவது உயிர் உடலைவிட்டு போனா முடிஞ்சது... பினிஷ்.. அவ்வளவுதான்.
இன்னொரு வகை... மிகப் பெரிய பேரும் புகழும் பெற்றவர்கள். அந்த பேரையும் புகழையும் தோல்வியாலேயோ இல்லே வேற சில காரணங்களாலேயோ இழந்துட்டா, அப்போ அவங்களுக்கு முதல் மரணம் வருது. அதற்கடுத்து இயற்கையாக உயிர் பிரியும்போது ரெண்டாவது முறையாக மரணம் நிகழும்.
ஆனா மரணமே இல்லாத சில பேர் இருக்காங்க. அவங்க ஒரு பர்சன்ட்தான். அவங்க வாழும்போதும் சரி, இறந்து போன பிறகும் சரி, அவங்க பேரும் புகழும் எப்பவுமே நிலைச்சிருக்கும். அவங்கள்லாம் சாகாவரம் பெற்றவர்கள். தனிப்பிறவி.

என் ஆருயிர் நண்பர் டாக்டர் கலைஞர்...

வடக்கில் பார்த்தீங்கன்னா... சினிமாவில வி.சாந்தாராம், தாதா சாகேப் பால்கே, எஸ்.டி.பரமன், நம்ம தமிழ்நாட்டுல பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி சார், கண்ணதாசன்... இவங்க எல்லாரும் மறைந்தாலும் அவர்கள் பெயரும் புகழும் மறையவில்லை. இன்னும் அவர்கள் நம்மோடு வாழ்ந்துக்கிட்டிருக்காங்க

இன்று அரசியலில் என்னுடைய ஆருயிர் நண்பர் மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் அவர்கள், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள், விஸ்வநாதன் ராமமூர்த்தி... இவங்களுக்கெல்லாம் வெற்றி தோல்வி போன்றவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இவங்களைப் பொறுத்தவரை வெற்றியடைஞ்சா சந்தோஷம் இருக்கும். தோல்வியடைஞ்சா மனசு கொஞ்சம் வருத்தப்படும். ஆனா அவங்க பேருக்கும் புகழுக்கும் எந்த பாதிப்பும் வராது.

Add caption
ஏன்னா... அதையெல்லாம் தாண்டிய நிலையில் இருப்பவர்கள் இவர்கள். வெற்றி, தோல்விகளை தாங்கிக்கொள்ளும் சமமான மனநிலையில இருப்பாங்க.


அவங்க வாழ்ந்த காலத்துல நானும் வாழ்ந்திருக்கேன். அவங்க கூட பழகியிருக்கேங்கிற சந்தோஷத்தோட,இந்த விழாவுல எனக்கு பேச வாய்ப்பளித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொண்டு, முதல்வர் புரட்சித் தலைவி அவர்கள் இன்னும் மக்களுக்கு நிறைய சேவை செய்து, இந்தியா மட்டுமில்லே உலக அளவில் அவர் பேரும் புகழும் பெறவேண்டும், அதற்கு தேவையான நல்ல ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் இறைவன் அவருக்கு வழங்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு வணங்கி விடைபெறுகிறேன்."

-இவ்வாறு பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.