- கேள்வி: எவன் சுகமாக வாழ்கிறான்?
- பதில்: செல்வம் உடையவன்.
- கேள்வி: செல்வம் என்பது யாது?
- பதில்: எது நமக்குப் பிரியமானதோ, அதுவே நமக்குச் செல்வம்.
- கேள்வி: உலகில் எல்லா இன்ப, சுகங்களுக்கும் காரணம் எது?
- பதில்: புண்ணியச் செயல்கள்
- .
- கேள்வி: துன்பத்துக்குக் காரணம் எது?
- பதில்: பாவச் செயல்கள்.
- கேள்வி: எல்லாவிதச் செல்வங்களும் யாருக்குக் கிடைக்கும்?
- பதில்: பக்தியுடன் பகவான் சங்கரனை பூஜிப்பவருக்கு.
- கேள்வி: எவன் மேன்மேலும் வளர்ச்சியுறுகிறான்?
- பதில்: அடக்கம் உடையவன்.
- கேள்வி: எவன் வளர்ச்சி குன்றி வருந்துகிறான்?
- பதில்: திமிர் அல்லது அகங்காரம் கொண்டவன்.
- கேள்வி: எவன் நம்பத் தகாதவன்?
- பதில்: அடிக்கடி பொய் பேசுகிறவன்.
- கேள்வி: எந்த சூழ்நிலையில் பொய் பேசுவது பாவச் செயல் ஆகாது?
- பதில்: தர்மத்தைக் காக்கச் சொல்லப்படும் பொய்.
- கேள்வி: எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட தர்மம் எது?
- பதில்: அவரவர் குலத்தில் தோன்றிய முன்னோர்களும் ஆசார சீலர்களும் கடைப்பிடித்த தர்மமே.
- கேள்வி: சாதுக்களுக்கு பலம் எது?
- பதில்: தெய்வம்.
- கேள்வி: சாது என்பவன் யார்?
- பதில்: எதிலும் எப்போதும் திருப்தியோடு உள்ளவன்.
- கேள்வி: தெய்வம் என்பது யாது?
- பதில்: ஒருவனால் செய்யப்பட்ட நல்ல செயல்கள்.
- கேள்வி: ஸுக்ருதி என்பவன் யார்?
- பதில்: நல்லவர்களால் போற்றப்படுபவன்.
- கேள்வி: இல்லறத்தில் உள்ளவனுக்கு உண்மை நண்பன் யார்?
- பதில்: அவனுடைய மனைவி.
- கேள்வி: இல்லறத்தான் யார்?
- பதில்: யாகங்கள் செய்கிறவன்.
- கேள்வி: யாகங்கள் யாவை?
- பதில்: வேதங்களில் சொல்லப்பட்டவையும் மனித சமூகத்துக்கு நன்மை அளிப்பவையுமான செயல்கள்.
- கேள்வி: யாருடைய செயல்கள் பயனுள்ளவை?
- பதில்: நல்ல அனுஷ்டானங்களை உடையவனும், வேதத்தில் கூறப்பட்டபடி நடப்பவனும்.
- கேள்வி: அவனுக்கு பிரமாணம், வழிகாட்டி எது?
- பதில்: வேதமே ஆகும்.
- கேள்வி: அனைவராலும் தாழ்த்தப்படுபவன் யார்?
- பதில்: வேதநெறிப்படி செயல் ஆற்றாதவன்.
- கேள்வி: எவன் உண்மையிலேயே பாக்யசாலி?
- பதில்: முற்றும் துறந்தவன்.
- கேள்வி: எவன் மதிக்கத்தக்கவன்?
- பதில்: புலமையும் சாதுத் தன்மையும் ஒருங்கே கொண்டவன்.
- கேள்வி: எவனுக்கு நாம் பணிவிடை செய்யலாம்?
- பதில்: தானம் கொடுக்கும் தாராளமனம் படைத்தவனுக்கு.
- கேள்வி: கொடைக்குணம் படைத்தவன் என்பவன் யார்?
- பதில்: உதவி நாடி வருபவனை திருப்திபடுத்துகிறவன்.
- கேள்வி: உடலைப் பெற்றவர்களுக்குச் சிறந்த பாக்கியம் எது?
- பதில்: உடல் நலம்.
- கேள்வி: உழைப்பின் பலனை முழுமையாகப் பெறுபவன் யார்?
- பதில்: பயிர்த் தொழில் செய்பவன்.
- கேள்வி: யாரை பாவங்கள் அணுகுவதில்லை?
- பதில்: ஜபம் செய்கிறவனை.
- கேள்வி: முழுமையான மனிதன் என்று யாரைச் சொல்லலாம்?
- பதில்: மக்கட் பேறு பெற்றவனை.
- கேள்வி: செயற்கரிய செயல் எது?
- பதில்: மனத்தை அடக்கி நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது.
- கேள்வி: பிரும்மசரியம் உடையவன் என்று யாரைக் கூறமுடியும்?
- பதில்: தன்னுடைய வீரியத்தை வீணாக்காமல் கட்டுப்படுத்தி தியானத்தின் மூலம் அதை நல்ல முறையில் பயன்படுத்துபவனை.
- கேள்வி: உலகுக்குத் தலைவன் யார்?
- பதில்: சூரியன்.
- கேள்வி: அனைவருக்கும் வாழ்வைக் கொடுப்பது எது?
- பதில்: மழை.
- கேள்வி: சூரன் என்று யாரைக் கூறலாம்?
- பதில்: பயந்தவனைக் காப்பவனை அல்லது பயத்திலிருந்து மற்றவர்களைக் காப்பவனை.
- கேள்வி: நம்மைக் காப்பவர் யார்?
- பதில்: நம்முடைய குரு.
- கேள்வி: ஜகத்குரு என்று யாரைக் கூறலாம்?
- பதில்: பரமசிவனை.
- கேள்வி: ஞானம் யாரிடமிருந்து கிடைக்கும்?
- பதில்: பரமசிவனிடமிருந்து.
- கேள்வி: எவ்வாறு நாம் மோட்சத்தைப் பெறலாம்?
- பதில்: முகுந்தனிடம் பக்தி செய்வதன் மூலம்.
- கேள்வி: முகுந்தன் என்பவன் யார்?
- பதில்: உலக மாயை அல்லது அவித்யையில் இருந்து நம்மை விடுவிக்கிறவன்.
- கேள்வி: அவித்யை என்பது யாது?
- பதில்: ஆத்மாவைப் பற்றிய அறிவு அல்லது நினைப்பு இல்லாமை.
- கேள்வி: யாருக்குத் துயரம் வராது?
- பதில்: கோபம் கொள்ளாதவனுக்கு.
- கேள்வி: சுகம் என்பது எது?
- பதில்: மன நிறைவு.
- கேள்வி: அரசன் என்பவன் யார்?
- பதில்: மக்களை மகிழ்விப்பவன்.
- கேள்வி: யாரை நாய்க்கு ஒப்பிடலாம்?
- பதில்: நீசர்களை அண்டி, அவர்களுக்குச் சேவகம் செய்பவனை
- .
- கேள்வி: மாயாவி என்பவன் யார்?
- பதில்: பரமேஸ்வரன்.
- கேள்வி: இந்திரஜாலம் போல் தோற்றம் அளிப்பது எது?
- பதில்: இந்தப் பிரபஞ்சம்.
- கேள்வி: கனவுத் தோற்றத்துக்கு நிகரானது எது?
- பதில்: விழித்திருக்கும்போது நடைபெறும் நிகழ்ச்சிகள்.
- கேள்வி: ஸத்யமானது, உண்மையானது எது?
- பதில்: பிரும்மம்.
- கேள்வி: பொய்யான தோற்றம் எது?
- பதில்: உண்மை அறிவால் போக்கக் கூடிய தவறான எண்ணம்.
- கேள்வி: பயனற்றது எது?
- பதில்: முயலுக்குக் கொம்பு உண்டா என்பது போன்ற வீண் சர்ச்சைகள்.
- கேள்வி: விவரித்துச் சொல்ல முடியாதது எது?
- பதில்: மாயை (பொய்த் தோற்றம்).
- கேள்வி: நாமாக நினைத்துக் கொண்டிருப்பது எது?
- பதில்: ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு என்ற எண்ணம்.
- கேள்வி: பாரமார்த்திகம் அல்லது முற்றும் உண்மையானது எது?
- பதில்: அத்வைதம், ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற அறிவு.
- கேள்வி: அறியாமை எப்போது உண்டாயிற்று?
- பதில்: அது அனாதியாய் உள்ளது; தோன்றிய காலம் தெரியாது.
- கேள்வி: உடலைக் காப்பது எது?
- பதில்: அவரவர் செய்த நல்வினை, தீவினைகள். நாம் ஜென்ம ஜென்மாந்திரத்தில் செய்த பாவச் செயல்தான் அன்னத்தையும் கொடுத்துஆயுளையும் வளர்க்கச் செய்கிறது.
- கேள்வி: வழிபாட்டுக்கு உரியவர் யார்?
- பதில்: காயத்ரி மந்திரம், சூரியன், அக்னி மூன்றிலும் அடங்கியுள்ள பரமேச்வரனே.
- கேள்வி: காயத்ரி, சூரியன், அக்னி ஆகியவற்றில் அடங்கி நிற்பது எது?
- பதில்: பெற்ற தாய்.
- கேள்வி: நம் பூஜைக்குரியவர் யார்?
- பதில்: தந்தை.
- கேள்வி: எல்லா தெய்வங்களையும் உள்ளடக்கி இருப்பவன் யார்?
- பதில்: கல்வியும் கர்மானுஷ்டானங்களும் நிறைந்தவர்கள்.
- கேள்வி: குல நாசத்துக்குக் காரணம் யாது?
- பதில்: சாதுக்கள் மனம் வருந்தும்படி செய்யும் செயல்.
- கேள்வி: யாருடைய சொற்கள் பொய்க்காதவை?
- பதில்: சத்யம், மௌனவிரதம், சாந்தி ஆகியவற்றை விரதமாக மேற்கொண்டவர்களின் சொற்கள்.
- கேள்வி: பிறவிக்குக் காரணம் யாது?
- பதில்: சிற்றின்பத்தில் ஏற்படும் பற்று.
- கேள்வி: நமது மேல் பிறப்பு என்பது எது?
- பதில்: பிள்ளையாகப் பிறத்தல்.
- கேள்வி: தவிர்க்க முடியாதது எது?
- பதில்: மரணம்.
- கேள்வி: எப்படிக் காலடி எடுத்து வைக்க வேண்டும்?
- பதில்: நன்றாகப் பார்த்து, கவனித்து, சுத்தமான இடமென்று தெரிந்து கொண்டு.
- கேள்வி: அன்னதானம் பெறத் தகுந்தவன் யார்?
- பதில்: நல்ல பசியோடு இருப்பவன்.
- கேள்வி: உலகில் யாரை நாம் பூஜிக்க வேண்டும்?
- பதில்: பகவானின் அவதாரங்களை; அவதார வடிவங்களில் உள்ள மூர்த்தங்களை.
- கேள்வி: பகவான் யார்?
- பதில்: சங்கரனாகவும், நாராயணனாகவும் உள்ள பரம்பொருள்.
- கேள்வி: பகவானிடத்தில் செலுத்தும் பக்திக்குப் பயன் என்ன?
- பதில்: மாறாத, கலப்பற்ற ஆனந்தம்.
- கேள்வி: மோட்சம் என்பது என்ன?
- பதில்: அவித்யை நீங்குதல்.
- கேள்வி: எல்லா வேதங்களுக்கும் உற்பத்தி இடம் எது?
- பதில்: ஓம் என்னும் பிரணவம்.
மொத்தப் பக்கக்காட்சிகள்
3/14/2012
இன்ப, துன்பத்துக்குக் காரணம் எது?
மரணத்தைக் காட்டிலும் துயரம் தருவது
கேள்வி: செய்யத்தகாத காரியம் எது?
பதில்: பலராலும் நிந்திக்கத் தக்க செயல்.
கேள்வி: குரு என்பவர் யார்?
பதில்: தத்துவத்தை அறிந்து, சீடனின் நன்மையிலேயே எப்போதும் நாட்டம் கொண்டவரே குரு ஆவார்.
கேள்வி: உலகில் ஆத்மாவுக்கு மிகவும் நல்லது எது?
பதில்: தர்மம்.
கேள்வி: இவ்வுலகில் புனிதமானவன் யார்?
பதில்: மனம் தூய்மையாக உள்ளவன்.
கேள்வி: எவன் உண்மையான (புலவன்) பண்டிதன்?
பதில்: நல்லது, கெட்டது என்று பிரித்தறியும் விவேகம் உடையவன்.
கேள்வி: எது விஷம் போன்றது?
பதில்: தனது குருவினிடத்தில் காட்டும் அவமரியாதை.
கேள்வி: இவ்வுலகில் சாரமானது எது? மனிதர் அனைவராலும் விரும்பத்தக்கது எது?
பதில்: தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்வதில் நாட்டம் கொண்ட பிறவியே.
கேள்வி: கள்ளைப்போல் மனத்துக்கு ஆசையை உண்டாக்குவது எது?
பதில்: நட்பு.
கேள்வி: திருடர்கள் யார்?
பதில்: சிற்றின்ப சுகங்கள்.
கேள்வி: சம்சாரத்தில் நம்மை சிக்க வைக்கும் கொடி எது?
பதில்: ஆசை.
கேள்வி: நம்முடைய உண்மையான பகைவன் யார்?
பதில்: முயற்சியின்மை.
கேள்வி: நமக்கு பயத்தை அளிக்கக் கூடியது எது?
பதில்: மரணம்.
கேள்வி: குருடனுக்குச் சமமானவன் யார்?
பதில்: ஆசை அதிகம் கொண்டவன்.
கேள்வி: எவன் உண்மை வீரன்?
பதில்: பெண்களின் கடைக்கண் பார்வைகளால் தாக்கப்படாதவன்.
கேள்வி: அமுதம்போல், காதுகளால் விரும்பிப் பருகக் கூடியது எது?
பதில்: சாதுக்களுடைய உபதேசம்.
கேள்வி: கௌரவம் பெற வழி எது?
பதில்: பிறரிடம் சென்று உதவி கோராமல் இருத்தலே.
கேள்வி: புரிந்துகொள்ள முடியாதது எது?
பதில்: பெண் மனம்.
கேள்வி: எவன் புத்திசாலி?
பதில்: பெண்களின் நடத்தையினால் பாதிக்கப்படாதவன்.
கேள்வி: எது மிக்க துயரத்தைத் தரும்?
பதில்: போதுமென்ற மனம் இல்லாமை.
கேள்வி: எது அற்பமான செயல்?
பதில்: கீழ்குணமுடையவனிடம் உதவி கோருதல்.
கேள்வி: எது உண்மையான வாழ்வு?
தில்: குற்றமற்ற வாழ்க்கை.
கேள்வி: ஜடப்பொருளின் தன்மை எது?
பதில்: படித்துவிட்டு, அதைப் பயிற்சி செய்யாமல் இருத்தல்.
கேள்வி: விழிப்புடன் இருப்பவன் யார்?
பதில்: விவேகம் உடையவன்.
கேள்வி: மனிதர்களுக்குத் தூக்கம் என்பது எது?
பதில்: மடமை, மூடத்தனம்.
கேள்வி: தாமரை இலைமேல் நீர்போல் நிலையற்றது எது?
பதில்: இளமை, செல்வம், ஆயுள் ஆகிய மூன்றும்.
கேள்வி: நரகம் என்பது எது?
பதில்: அடிமைத்தனம்.
கேள்வி: எது உண்மையான சுகத்தைத் தரவல்லது?
பதில்: எல்லாவிதமான தொடர்புகளையும் துண்டித்துக் கொள்ளுதல்.
கேள்வி: எது சத்யம், உண்மை?
பதில்: உயிர்களிடத்து அன்பு.
கேள்வி: உலகில் உயிரினங்களுக்கு மிகப் பிரியமானது எது?
பதில்: அவ்வவற்றின் உயிரே.
கேள்வி: துன்பத்தை விளைவிக்கக் கூடியது எது?
பதில்: சினம் (கோபம்).
கேள்வி: இன்பத்தைத் தரவல்லது எது?
பதில்: சான்றோர் நட்பு.
கேள்வி: எல்லா துன்பங்களையும் போக்க வல்லவன் யார்?
தில்: அனைத்தையும் துறந்தவன்.
கேள்வி: விலைமதிக்க முடியாதது எது?
பதில்: காலத்தாற் செய்த உதவி.
கேள்வி: இறக்கும்வரை ஓயாமல் துன்பம் தரவல்லது எது?
பதில்: நாம் செய்துவிட்டு மறைத்து வைத்திருக்கும் பாவச் செயல்.
கேள்வி: எந்தச் செயல்களில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்?
பதில்: கல்வி கற்பதிலும், மருந்து உண்பதிலும், தானம் கொடுப்பதிலும்.
கேள்வி: எவற்றில் நாம் கவனம் செலுத்தாமல் இருக்க வேண்டும்?
பதில்: தீயவர், அயல் பெண்கள், பிறர் சொத்து ஆகியவற்றில்.
கேள்வி: இரவும் பகலும் நாம் சிந்திக்க வேண்டியது எதை?
பதில்: உலகின் நிலையற்ற தன்மையை.
கேள்வி: நாம் அன்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டியவை எவை?
பதில்: ஏழை எளியவர்களிடம் கருணை, சாதுக்களின் நட்பு.
கேள்வி: யார் யாருடைய ஆத்மாக்களை இறக்குந் தருணத்திலும் தூய்மைப்படுத்த முடியாது?
பதில்: மூடன், சந்தேகப் பிராணி, நிம்மதியற்றவன், செய்நன்றி கொன்றவன் ஆகியோருடைய ஆத்மாக்களை.
கேள்வி: சாது என்பவன் யார்?
பதில்: நன்னடத்தை உடையவன்.
கேள்வி: எவனைத் தாழ்ந்தவன் என்கிறோம்?
பதில்: கெட்ட நடத்தை கொண்டவனை.
கேள்வி: இவ்வுலகை வென்றவன் யார்?
பதில்: சத்யமும் பொறுமையும் கொண்டவன்.
கேள்வி: தேவர்களும் வணங்கும் தகுதி பெற்றவன் யார்?
பதில்: கருணை உள்ளம் படைத்தவன்.
கேள்வி: உயிரினங்களை எவன் எளிதாகத் தன் வசப்படுத்த முடியும்?
பதில்: உண்மை பேசுபவனாகவும், அன்பும், நல்லடக்கமும் உடையவனாகவும் இருப்பவன்
.
கேள்வி: எவ்வழியை நாம் பின்பற்ற வேண்டும்?
பதில்: இம்மை_மறுமை இரண்டிலும் நீடித்த சுகத்தை அளிக்கும் நேர்மை வழியை.
கேள்வி: குருடன் யார்?
பதில்: தகாத செயல்களில் ஈடுபடுபவன்.
கேள்வி: செவிடன் யார்?
பதில்: நல்லவற்றைக் கேளாதவன்.
கேள்வி: ஊமை யார்?
பதில்: தக்க தருணத்தில் இனிமையாகப் பேசத் தெரியாதவன்.
கேள்வி: தானம் என்பது எது?
பதில்: பெற்றுக்கொள்பவன் கேளாமலும், பிரதிபலன் எதிர்பாராமலும் கொடுப்பது.
கேள்வி: உண்மையான நண்பன் யார்?
பதில்: பாவச் செயல்களிலிருந்து நம்மை விலக்குபவன்.
கேள்வி: மனிதனுக்கு அணிகலன் யாது?
பதில்: அவனுடைய குணம்.
கேள்வி: சொல்லுக்கு அணி செய்வது எது?
பதில்: வாய்மை.
கேள்வி: மின்னல் ஒளிபோல் தோன்றி கணத்தில் மறைவது எது?
பதில்: தீயோர் நட்பு.
கேள்வி: குலத்தையும் குணத்தையும் காப்பவர் யார்?
பதில்: சாதுக்களே.
கேள்வி: இவ்வுலகில் சிந்தாமணியைப்போல் கிடைத்தற்கரியது எது?
பதில்: ஞானிகள் நான்கு பொருட்களைச் சிந்தாமணி போன்றவை என்பர்.
கேள்வி: அவை யாவை?
பதில்: அன்புடன் அளிக்கப்பட்ட தானம், ஆணவம் இல்லாத அறிவு, அமைதி பொருந்திய வீரம், தியாக உள்ளம் படைத்தோர் செல்வம்.
கேள்வி: வருந்தத்தக்க குணம் எது?
பதில்: செல்வம் இருந்தும் கொடுக்க மனம் இல்லாமை.
கேள்வி: சிறந்த குணம் எது?
பதில்: வள்ளல் தன்மை.
கேள்வி: நல்ல புலவர்களால் எவன் மதிக்கப்படுவான்?
பதில்: இயற்கையாகவே தன்னடக்கம் உடையவன்.
கேள்வி: குலத்தின் பெருமையை உயர்த்துபவன் யார்?
பதில்: எல்லா நற்குணங்களும் நிறைந்திருந்தும், தன்னடக்கத்துடன் திகழ்பவன்.
கேள்வி: இவ்வுலகம் யாருக்கு வயப்படுகிறது?
பதில்: இனிய, நன்மை பயக்கக்கூடிய சொற்களை உடையவனாய், எப்போதும் அறவழியில் செல்பவனுக்கு.
கேள்வி: நல்ல புலவரின் மனத்தைக் கவர்பவை எவை?
பதில்: நல்ல கவிதையும், அறிவு நிரம்பிய பெண்ணும்.
கேள்வி: விபத்துகள் யாரை நெருங்குவதில்லை?
பதில்: முதியோர் சொற்படி நடக்கும் அறிவாளியை.
கேள்வி: செல்வத்தின் கடவுளான லட்சுமி யாரை விரும்புகிறாள்?
பதில்: சோம்பலின்றி உழைப்பவனையும், நேர்மையான நெறியில் நடப்பவனையும்.
கேள்வி: லட்சுமி யாரை விட்டு திடீரென்று விலகுகிறாள்?
தில்: குரு, தேவர்கள் ஆகியோரை நிந்திப்பவனையும், சோம்பல் குணம் உள்ளவனையும்.
கேள்வி: எந்த இடங்களை நாம் விலக்க வேண்டும்?
பதில்: கஞ்சர்கள் வாழும் இடத்தையும், பேராசை கொண்ட அரசனின் நாட்டையும்.
கேள்வி: துன்பத்திலிருந்து ஒருவனைக் காப்பாற்றக் கூடியவை எவை?
பதில்: கடமையுணர்ச்சி கொண்ட மனைவியும், தைரியமும்.
கேள்வி: பரிதாபத்துக்கு உரியவன் யார்?
பதில்: வசதி இருந்தும் பிறருக்குக் கொடுக்க மனம் இல்லாதவன்.
கேள்வி: ஒருவன் அற்பனாக ஆவதற்குக் காரணம் என்ன?
பதில்: தகுதி அற்றவர்களிடம் யாசிப்பதுதான்.
கேள்வி: ராமபிரானைவிட சூரன் யார்?
பதில்: காமனுடைய அம்புக்கு இலக்கு ஆகாதவன்.
கேள்வி: இரவும் பகலும் நம் சிந்தனைக்கு உரியது எது?
பதில்: இறைவனின் திருவடி.
கேள்வி: கண்கள் இருந்தும் குருடர்கள் யார்?
பதில்: நாஸ்திகர்கள்.
கேள்வி: எவனை நாம் முடவன் என்று கூறலாம்?
பதில்: முதுமையில் தீர்த்த யாத்திரை செல்பவனை.
கேள்வி: எந்தத் தீர்த்தத்தை முக்கியமானதாகக் கருதலாம்?
பதில்: மனத்து அழுக்கை நீக்கி அதைத் தூய்மைப்படுத்துவதே சிறந்த தீர்த்தம்.
கேள்வி: மக்கள் எப்போதும் நினைக்க வேண்டியது எதை?
பதில்: விஷ்ணுவின் நாமாவை.
கேள்வி: புத்திசாலியான ஒருவன் எவற்றைச் சொல்லக்கூடாது?
பதில்: பிறர் குற்றங்களையும் பொய்யையும்.
கேள்வி: மனிதர்கள் தேடிப் பெறவேண்டியவை யாவை?
பதில்: கல்வி, பணம், வலிமை, புகழ், புண்ணியம்.
கேள்வி: மனிதனின் நல்ல குணங்கள் யாவற்றையும் அழிக்க வல்லது து?
பதில்: பேராசை.
கேள்வி: நமது பலமான பகை எது?
பதில்: காமம், ஆசை.
கேள்வி: எந்த அரச சபையை நாம் விலக்க வேண்டும்?
பதில்: அனுபவமும் முதிர்ந்த வயதுமுடைய அமைச்சர்கள் இல்லாத சபையை.
கேள்வி: இவ்வுலகில் மனிதன் எந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்?
பதில்: அரசாங்க ஊழியத்தில்.
கேள்வி: உயிரைக்காட்டிலும் அதிகமாக விரும்பத்தக்கவை எவை?
பதில்: குலதர்மமும், சாதுக்களின் சகவாசமும்.
கேள்வி: கவனமாக காப்பாற்றப்பட வேண்டியவை யாவை?
பதில்: புகழ், பதிவிரதையான மனைவி, சுய புத்தி.
கேள்வி: கற்பகத் தரு போன்றது எது?
பதில்: நல்ல மாணவனுக்குக் கற்பிக்கப்படுகிற கல்வி.
கேள்வி: அழியாத ஆலமரம் போன்றது எது?
பதில்: முறைப்படி, பாத்திரம் அறிந்து, அளிக்கப்பட்ட உதவி.
கேள்வி: அனைவருக்கும் ஆயுதம் போன்றது எது?
பதில்: யுக்தி, சமயோசித புத்தி.
கேள்வி: தாய் எனக் கருதத்தக்கது எது?
பதில்: பசு.
கேள்வி: மனிதனுக்கு வலிமை எது?
பதில்: தைரியம்.
கேள்வி: மரணம் என்பது எது?
பதில்: கவனக்குறைவு.
கேள்வி: விஷம் எங்கு உள்ளது?
பதில்: தீயவர்களிடத்தில்.
கேள்வி: தீண்டத்தகாதது அல்லது தவிர்க்க வேண்டியது எது?
பதில்: கடன்.
கேள்வி: மனிதன் எப்பாடுபட்டேனும் பெற வேண்டியது எது?
பதில்: ஹரிபக்தி.
கேள்வி: மகாபாதகச் செயல் எது?
பதில்: மற்றவர்களைத் துன்புறுத்துதல்.
கேள்வி: எவன் கடவுளுக்குப் பிரியமானவன்?
பதில்: தானும் கோபப்படாமல், பிறருக்கும் கோபம் ஊட்டாமல் இருப்பவன்.
கேள்வி: காரிய சித்தி எதனால் உண்டாகும்?
தில்: தவத்தினால்.
கேள்வி: புத்தி எவரிடத்தில் உள்ளது?
பதில்: அறவோர் இடத்தில்.
கேள்வி: புத்தி எப்படிக் கிடைக்கும்?
பதில்: முதியோர்களை உபசரித்துப் பணிவிடை செய்வதால்.
கேள்வி: முதியவர் யார்?
பதில்: தர்மத்தின் தத்துவத்தை முற்றிலும் உணர்ந்தவர்கள்.
கேள்வி: மரணத்தைக் காட்டிலும் துயரம் தருவது எது?
பதில்: கெட்ட பெயர்.
3/09/2012
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு
ஒருவர் தனக்கு நடந்த
நல்லவற்றை கூறினால்,
நமது மனது அதை ஏனோதானோ என்றுதான் பார்க்கிறது. பல நேரம் பொறாமைப் படுகிறது.
அதே சமயம் அவருக்கு ஒரு துன்பம் நேர்ந்தால் அதை நமது மனது கொண்டாடுகிறது. உள்ளூர
மகிழ்ச்சியடைகிறோம்.
அடுத்தவர் துன்பத்தில் இன்புறும் குரங்குப் புத்தி நமது மனது. ஒரு சிலரே /லட்சத்தில் ஒருவரே, அடுத்தவர் துன்பத்தில் தானும் துன்புறுவர். இதிலிருந்து நாம் கற்பது என்ன? மனித மனம் ஒரு குரங்கு..மனம் சொன்னபடி நாம் கேட்கக் கூடாது. அது உங்களது சுய லாபத்திற்கே பார்க்கும். அடுத்தவர் துன்பத்திலும் இன்பம் கானும் உங்களது மனம், உங்களுக்கு நல்லது செய்யப் போகிறதா? சற்று யோசியுங்கள். எனவே சற்று மாத்தி யோசி.. மனம் ஒன்று சொன்னால் நீங்கள் ஒன்று செய்ய வேண்டும். இதில் நீங்கள் என்பது யாது? உடலா அல்லது உயிரா? அது தான் ஆழ்மனம். அதாவது [SOLE] என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதுதான். இரண்டு மனம் வேண்டும் என்று பாடினார் அன்று. ஆனால் நீங்கள் உங்களது வெளிப்படையான சிந்தனை செய்யும் வெளி மனசைக் கேட்காதீர்கள். உங்களது ஆழ்மனத்தைக் கேளுங்கள். அதற்குத்தான் எது நல்லது, எது கெட்டது, எது உங்கள் பலம், எது உங்கள் பலவீனம், நீங்கள் இதுவரை செய்த மோசமான தவறு என்ன என்பதெல்லாம் இந்த ஆழ்மனத்திற்கே தெரியும். வெளி மனசானது அந்த நிமிடத்திற்கு நிமிடம் யோசிக்கும். பல சிந்தனைகளை அசைபோடும். இறந்தகால மற்றும் எதிர்கால சிந்தனைகள், தற்சமயம், அந்த நொடியில் நடப்பது நமது மனத்திற்கு தெரியாது அல்லது புரியாது. நிகழ்வு நடந்தவுடன் அது இறந்த காலமாகிறது. அதாவது பிரசண்ட், பாஸ்ட் ஆகிறது. பிறகுதான் அது மனதின் ஆளுமைக்கு வருகிறது. எனவே மனத்தைப் பொருத்தவரை இறந்த காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள், கவலைகள், கொண்டாட்டங்கள் ஆகியவையே.
நிகழ்காலம் அதாவது இந்த நொடி
நமது கையில் உள்ளது. நாம் அதை செவ்வனே வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். நமது ஆழ்மனது
என்ன சொல்கிறதோ அதன்படி செய்ய வேண்டும்.
அந்த நொடியில் நடக்கும்
தவறான வழிகாட்டு.இதை வழிகாட்டுபவர் வெளிமனது. பின்னர் அதை எண்ணி வருந்துகிறோம்.
அதைக் கற்று த்தருவது ஆழ்மனம்.
ஆழ்மனச் சிந்தனைகளை வளர்த்தெடுப்பது எப்படி? இந்த ஆள் மனத்தையே சில மதங்களில் நம்முள் இருக்கும் கடவுள் என்கின்றனர். இதை வளர்த்தெடுப்பது எனப்தைவிட இதை உனருதல் அவசியம். ஒவ்வொரு சமயமும், ஒவ்வொரு முடிவையும் நாம் ஆழ்மனத்தைக் கேட்டே செய்ய வேண்டும். அது நிச்சயம் நம்மைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லாது. வெளிமனது சொல்லும் ஆசை, கவலை போன்றவற்றை ஆழ்மனது கொண்டு உதறித் தள்ளிவிட முடியும். இதற்கு ஆன்மீக வழி முயற்சி தேவை.
நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அது சொல்லும் செய்தியை உற்று கவனியுங்கள். அதன்படி நடங்கள். எந்த மதமும் தீமையை போதிக்க வில்லை. நன்மையையும் உலக அமைதியையுமே போதிக்கின்றன. நீங்கள் மத நம்பிக்கையற்றவராக இருந்தால் நாம் இதுவரை சொன்னபடி நீங்கள் ஏற்று, பிராக்டிகல் சைக்காலஜி படி நடக்கலாம். உங்களுக்கு நீங்கள் தான் கடவுள். உங்கள் ஆழ்மனம் சொல்லும் செய்தியே உங்கள் மதம். எனவே மதம், கடவுள் எல்லாம் நமது ஆழ்மனத்தின்படியே புரிதல் வேண்டும்.
ஆழ்மனச் சிந்தனைகளை வளர்த்தெடுப்பது எப்படி? இந்த ஆள் மனத்தையே சில மதங்களில் நம்முள் இருக்கும் கடவுள் என்கின்றனர். இதை வளர்த்தெடுப்பது எனப்தைவிட இதை உனருதல் அவசியம். ஒவ்வொரு சமயமும், ஒவ்வொரு முடிவையும் நாம் ஆழ்மனத்தைக் கேட்டே செய்ய வேண்டும். அது நிச்சயம் நம்மைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லாது. வெளிமனது சொல்லும் ஆசை, கவலை போன்றவற்றை ஆழ்மனது கொண்டு உதறித் தள்ளிவிட முடியும். இதற்கு ஆன்மீக வழி முயற்சி தேவை.
நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அது சொல்லும் செய்தியை உற்று கவனியுங்கள். அதன்படி நடங்கள். எந்த மதமும் தீமையை போதிக்க வில்லை. நன்மையையும் உலக அமைதியையுமே போதிக்கின்றன. நீங்கள் மத நம்பிக்கையற்றவராக இருந்தால் நாம் இதுவரை சொன்னபடி நீங்கள் ஏற்று, பிராக்டிகல் சைக்காலஜி படி நடக்கலாம். உங்களுக்கு நீங்கள் தான் கடவுள். உங்கள் ஆழ்மனம் சொல்லும் செய்தியே உங்கள் மதம். எனவே மதம், கடவுள் எல்லாம் நமது ஆழ்மனத்தின்படியே புரிதல் வேண்டும்.
3/01/2012
குமரகம்
இயற்கை அன்னை தன் செல்வங்களை எல்லாம் வாரி, வாரி இந்த குமரகத்திற்கு
தானமாக கொடுத்து விட்டாளோ! என்ற எண்ணம் அங்கு சென்றதும் நிச்சயம் ஏற்படும்.
திரும்பிய இடமெல்லாம், நிலமங்கை பசுமை போர்வை போர்த்தி இருக்கிறாள். ஒரு
புறம் செழித்து வளர்ந்த நெற்கதிர்களுடன் காணப்படும் வயல்கள்… மறுபுறம்,
குலைகுலையாக இளநீர்களை சுமந்து நிற்கும் தென்னை மரங்களை கொண்ட தோப்புகள்…
இவைகளுக்கு இடையே, மழை வளத்தால் தேங்கி நிற்கும் குட்டைகளில்
பூத்திருக்கும் அல்லி மலர்கள்… உல்லங்கழிகள், அதில் மிதந்து செல்லும்
கட்டுமரங்கள்…என்று பூலோக சொர்க்கமாக காண்போரின் கண்களையும், கருத்தையும்
கவர்கிறது குமரகம். இதனால் தானோ என்னவோ, நேஷனல் ஜியோகிராபிக் குழுவை
சேர்ந்த பயணி ஒருவர் இந்த குமரகத்தினை, உலகின் பத்து அழகிய இடங்களில்
ஒன்றாக கணித்திருக்கிறார்.
கொச்சியில் இருந்து கார் மூலமாக பயணித்தால் 90 கி.மீ. தூரம். அதுவே
கோட்டயத்தில் இருந்து என்றால் 16 கி.மீ. பயணம் தான். சில நூற்றாண்டுகளுக்கு
முன்பு, இந்த இடம் கொடியூர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில்
இங்கு குமரக் கடவுளின் கோவில் ஒன்றை கட்டியிருக்கிறார்கள். இந்து,
முஸ்லிம், கிறிஸ்துவர் என்ற மத பேதம் இன்றி அனைவரும் வழிபடும் குமரன் வாசம்
செய்யும் இடமானதால் குமரகம் என்ற பெயர் பெற்றிருக்கிறது இவ்விடம்
.
குமரகத்தை தன்னுள் அரவணைத்து வைத்திருக்கிறது வேம்பநாடு ஏரி.
இந்தியாவிலேயே நல்ல தண்ணீரை கொண்ட மிகப்பெரிய ஏரி இது தானாம். இதன்
பரப்பளவு 205 சதுர மீட்டர். பம்பா, மீனசில், மணிமாலா. அச்சன்கோவில்,
பெரியார், மூவாட்டு புழா எனும் ஆறு ஆறுகளின் சங்கமமே இந்த வேம்பநாடு ஏரி
என்ற செய்தி மலைக்க வைக்கிறது. பல திசைகளிலிருந்து ஓடிவரும் இந்த தண்ணீர்,
அழகிய கால்வாய்களாக உருவெடுத்து பின் இந்த ஏரியில் கலக்கிறது. இந்த
கால்வாய்களில் படகு சவாரி செய்து மகிழலாம். கால்வாயில் கரைகளில் குமரகத்தை
சேர்ந்த விவசாயிகள் வீடு கட்டி வாழ்கிறார்கள். வீடுகளில் இருந்து படி
இறங்கினாலே தண்ணீர் தான். வாழ்நாளில் மறக்க முடியாத சுக அனுபவம் இது.
மீன்கள் நிறைந்து காணப்படும் இந்த ஏரியில்… மழைக்காலமான ஜூன் மாதம்
முதல் நவம்பர் மாதம் வரை தண்ணீர் உப்பு தன்னையில்லாமல் இருக்குமாம். இந்த
ஏரியை சுற்றியுள்ள சதுப்பு நில மரங்களில், பல நாடுகளில் இருந்து வந்த
பறவைகள் கூடு கட்டி வாழ் கின்றன. இந்த பறவைகள் சரணாலயத்தை கேரள
சுற்றுலாத்துறை பராமரிக்கிறது. குமரகத்தில் வாழ்பவர்கள், ஓரிடத்திலிருந்து
இன்னொரு இடம் செல்ல படகுகளை உபயோகிக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டில் முன்னும்
கார், ஸ்கூட்டர் நிறுத்துவது போல அவர்களுடைய சொந்தப் படகுகளை நிறுத்தி
வைக்கின்றனர். இதை பார்த்தால் நமக்கு வெனீஸ் நாடு நினைவுக்கு வரும்.
குமரகத்தை தென்னிந்தியாவின் வெனீஸ் என்று அழைத்தால் கூட அது மிகையாகாது.
அரபிக்கடவுள் உருவாகியிருக்கும் உப்பங்கழிகளின் கரைகளின் பல சொகுசு
ஹோட்டல்கள் உள்ளன. இந்த ஹோட்டல்களின் உணவு வகைகள் அற்புதமானவை. சுவை
நிறைந்தவை. இங்கு பல விதமான ஆயுர்வேத மசாஜ்களும் செய்கிறார்கள். மாலை
நேரத்தில் ஹோட்டல்களில் இருந்து, படகுகளில் நம்மை அழைத்து சென்று சூரிய
அஸ்தமானத்தை காட்டுகிறார்கள். சிலுசிலு காற்று முகத்தில் அறைய… அந்த மாலை
நேர வானத்தில் , சிறகு பூரித்து கூடு திரும்பும் பறவைகளின் காட்சியை
பார்க்கும் பொழுது, இனம் புரியாத இன்பத்தில் மனம் நிறைகிறது.
படகு வீடுகளில் தங்கி மகிழ நாம் காஷ்மீர் செல்ல வேண்டியதில்லை. இங்குள்ள
ஹோட்டல்களுக்கு சொந்தமான கெட்டுவலம் என்றழைக்கப்படும் சொகுசு படகுகளில்
தங்கினாலே போதும். பழமையும் புதுமையும் கலந்து உருவாக்கப்பட்டிருக்கும்
இந்த படகுகளில் ஒரு 5 நட்சத்திர ஹோட்டல்களில் கிடைக்க கூடிய எல்லா
வசதிகளுகளும் இருக்கின்றன.
இறைவழிபாட்டிற்கு அன்பும், ஆச்சாரமும் வேண்டும்.
ஒரு
பறவை வானில் பறக்க வேண்டுமானால் அதற்கு இரண்டு இறக்கைகள் வேண்டும். அதுபோல
இறைவழிபாட்டிற்கு அன்பும், ஆச்சாரமும் வேண்டும். அன்பில்லாத ஒழுக்கமோ
அல்லது ஒழுக்கமில்லாத அன்போ பயனற்றதாகும்.
ஆகவே, கடவுள் உயிர்கள் தோறும் உறைகின்றார். எவ்வுயிரும் இறைவன் சன்னிதியே. அதனால், எல்லா உயிர்களுக்கும் நாம் நன்மையே செய்ய வேண்டும். உயிர்களுக்குச் செய்யும் நன்மை கடவுளுக்குச் செய்யும் நன்மையாகும்.
கொடுத்த கடனைத்திருப்பிக் கொடுக்காதது எவ்வளவு பெரிய பாவமோ, அத்தனை பெரிய பாவம் இறைவனை நாள்தோறும் வணங்காததும் ஆகும். அதனால் தான் “என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றார் அப்பர். இறைவன் தந்த உடம்பினால் அவனை வழிபடுவதை ” அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்கிறார் மாணிக்கவாசகர்.
* பல இழைகள் ஒன்றுபட்டுத் திரித்த வடக்கயிற்றைக் கொண்டு பெரிய தேரை இழுத்து விடலாம். ஆனால், தனி இழையான துரும்பினைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. ஒரே சிந்தனையுடன் பல அன்பர்கள் கோவிலில் கூட்டு வழிபாடு செய்யும் போது இறைவனின் திருவருளை உறுதியாகப் பெற முடியும். பல காலமாக கணக்கு வழக்கில்லாமல் பிறவிகளை எடுத்து வருகின்ற நாம் இறைவனை உள்ளத்தூய்மையுடன் உருகி வழிபட்டு நாளும் அர்ச்சித்து வந்தால் நம் பிறவிநோய் தீரும். நம் வீட்டில் அனைவரும் இயன்ற வரையில் நாள்வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும் இல்லங்களில் குடும்ப ஒற்றுமை சிறந்து விளங்கும். தெய்வஅருளும், லட்சுமி கடாட்சமும் நிறைந்து இருக்கும். நீராடி தூய ஆடை அணிந்து நல்ல சிந்தனையுடன் ஒழுக்கநெறியில் கோவில்களுக்குச் செல்ல வேண்டும். கோவிலில் இருக்கும் நேரத்தில் மனம் ஒருமுகப்பட்ட நிலையில் இறைசிந்தனையுடன் இருப்பது மிக அவசியம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)