மொத்தப் பக்கக்காட்சிகள்

10/21/2016

ஒரு நாள் இந்த முதுமை நமக்கும் வரும் !

ஒரு தாயின் புலம்பல் கவிதை*
 



எனதருமை மகனே !
எனதருமை மகனே !
நான்
உன்னை
மிகவும் நேசிக்கிறேன்..
முதுமையின் வாசலில் – நான்
முதலடி வைக்கையில்
தள்ளாட்டம்
என்மீது வெள்ளோட்டம் பார்க்கும்…
கொஞ்சம் பொறுமை கொள்க !
அதிகம் புரிந்து கொள்க !
என்முதுமை பார்த்து
முகம் சுளிக்காதே !
நான்
சாப்பிடுகையில் கைநடுங்கி சாதம் சிந்தி விட்டேனா?
சத்தம் போடாதே…..
உனக்கு நான்
நிலாச்சோறு ஊட்டிய நாட்களை நினைவு
கூர்க !
ஆடை மாற்றுகையில்
அவதிப் படுகிறேனா?
அசுத்தம் செய்து விட்டேனா?
ஆத்திரப்படாதே…..
படுக்கை முழுதும்
நீ பண்ணிய ஈரங்களின்
ஈர நினைவுகளை
இதயம் கொள்க !
ஒரே பேச்சை, தேய்ந்த
ஒலிநாடா போல்
ஓயாமல் சொல்கிறேனா?
சலித்துக் கொள்ளாதே….
ஒரே
மாயாவி கதையை
ஒரு நூறு முறை
எனை படிக்கச் சொல்லி
நீ
உறங்கிய
இரவுகளை ஞாபகம்
கொள்க !
நான் குளிக்க மறுக்கிறேனா?
சோம்பேறித்தனம் என்று
சுடுசொல் வீசாதே….
உன்னை
குளிக்க வைக்க
நான் செய்த யுக்திகளை
எனக்காக புதுப்பித்துத் தருக!
புதிய தொழில்நுட்பம்,
புதிய பயன்பாடுகள் – உன்
புயல் வேகப் புரிந்துகொளல்
சத்தியமாய் எனக்குச்
சாத்தியமில்லை !
கேவலப் படுத்தாதே….
கற்றுத் தருக ! கவனித்துப்
பழக அவகாசம் தருக !
இனி,
சில நேரங்களில் –
என்
நினைவுப் பிரழ்ச்சியால்
ஞாபங்கள் அறுந்து போகலாம்,
உரையாடல் உடைந்து போகலாம்!
நிறைய வேலை இருக்கிறதென்று
நேரம் பார்க்காதே…..
என் அருகிருந்து
ஆற்றாமை தேற்றுக!
ஆசுவாசப் படுத்துக!
என் கால்கள்
என்னை ஏமாற்றுகையில்
நீ
முதல் நடை பழக
என் விரல்
நீண்டது போல்
கைகொடுத்து
எனக்கு உதவி செய்க !
ஒரு நாள் சொல்வேன் நான்,
வாழ்ந்தது
போதுமென்று !
வருத்தப் படாதே…..
சில
வயது வரை வாழ்க்கைக்கு அர்த்தமில்லை…
சில
வயதுக்கு மேல்
வாழ்வதில் அர்த்தமில்லை…
காலம்
வரும்போது – இதை
நீயும்
புரிந்து கொள்வாய் !
இனி நான் வேண்டுவதெல்லாம்
நீ எனை
புரிந்து கொண்ட
புன்னகை !
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் !
எனதருமை மகனே !
நான் உன்னை
மிகவம் நேசிக்கிறேன்…..
என் வாழ்வு
அமைதியோடும் – உன்
அரவணைப்போடும்
முற்று பெற
முயற்சியேனும் செய்வாயா..????
(ஓர் தாய் முதுமையில்
மகனிடம் சொல்லும் கண்ணீர் கவிதை)
இது ஏதோ ஒருவர் அனுப்பியது அல்ல நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அடுத்தடுத்து நடக்கப்போவது..!!
*நமது தாய், தந்தையை பேனி காப்பது நமது தலையாய கடமை*
*நமது உயிர் இருக்கும் வரை நாம் அவர்களை பேனிக்காப்போம்*
நமக்கும் ஒரு நாள் இந்த முதுமை வரும் அதற்குள் நமது பணியை சிறப்பாக செய்து நமது பெற்றோரையும் சிறப்பாக வாழ வைப்போம்.

 

9/26/2016

கேவலமான உண்மைகள் !!!

கேவலமான உண்மைகள் !!!

1. அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 40
லிருந்து 50 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக்
கிடைக்கிறது..!!

2. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின்
விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால்
பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5
சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12
சதவிகிதம்..!!

4. Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு
வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட ஆம்புலன்சும்,
தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

5. ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக்
கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய
செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில்
பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச்
செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள்
மட்டும் இல்லை..!!

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட
கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும்
காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில்
விற்கப்படுகின்றன..!!

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc
இவையெல்லாம் செயற்கையான
ரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகி
ன்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை
இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்)
தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

8. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும்
நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம்
விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்று
கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து
வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9. கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை
மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை
சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே
மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து
விற்றால் வரி உண்டு..!!

10. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.!

11. வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு,
சிலருக்கு படிக்கட்டாகவும்,
சிலருக்கு எஸ்கலேட்டராகவும்,
சிலருக்கு லிஃப்டகாவும் அமைகிறது..

12. பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும்
ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.!

13. தோற்றுப்போய் வீடு திரும்புகையில்,
தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும்,
வாழ்க்கையை ஜெயித்துவிடலாம்.

14. முதியோர் இல்லத்திற்கு
பணம் கொடுங்க,
பொருள் கொடுங்க,
உணவு கொடுங்க,
உடை கொடுங்க..
ஆனா உங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்க..

15. 20 வயசு வரைக்கும்தான் வேளா வேளைக்கு சோறு..
அதுக்கு மேல வேலைக்கு போனால் தான் சோறு..

16. டாக்டரை மறந்து விட்டு
நர்சுகளை ஞாபகம் வைத்திருக்கும்
விசித்திரமான உலகம் இது.!

17. ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட,
ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான்
பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.!

18. கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள்,
பணத்தை 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை.

19. அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்..
இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கிறார்கள்...

20 .கடவுளாக வாழ கல்லாயிருந்தால் போதும்..
மனிதனாக வாழத்தான் அதிகம் மெனக்கிட வேண்டியிருக்கிறது.!

21. மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டு யுக்திகளைக் கையாளுகிறார்கள்..
ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள்..
மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள்..

21. மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் ஒருபோதும் மழை பெய்வது இல்லை..
அவை குழந்தைகள் மீதான கடவுளின் மனிதாபிமானம்..

22. ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான்,
சாலையோரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம்.

23. ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுறீங்க
சரிதான்.. 

ஆள் இருக்கிற பல கிராமப்புற ஊருக்கு எப்ப
பஸ் விடுவீங்க?

இன்னிக்கு இதுபோதும் மீண்டும் பார்போம்...
வணக்கமுடன் -King பாரதி.....

9/12/2016

நதிகள் இணைப்பு அவசியம்:

நதிகள் இணைப்பு அவசியம்: தண்ணீருக்காக போர் மூளும்-கலாம் எச்சரிக்கை.

கோவை: நதிகளை இணைக்க வேண்டியது அவசியம், அவசரம். எதிர்காலத்தில் தண்ணீருக்காக உலக அளவில் போரே மூளும் வாய்ப்பு உள்ளது. தமிழகமும், இந்தியாவும் தண்ணீர்ப் பற்றாக்குறையிலிருந்து விடபட நதிகளை இணைக்க வேண்டியது அவசியமாகும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

எனக்கு ஒரு கனவு உள்ளது. தமிழகத்தில் உள்ள காவிரி, வைகை, பாலாறு, தாமிரபரணி போன்ற நதிகளை பிற நதிகளுடன் இணைத்து அதை ஏரிகள், நீர்நிலைகள், கண்மாய்களை இணைக்க வேண்டும். இது முடியுமா? என்றால் முடியும். கரிகாலன் முடியாது என்று நினைத்து இருந்தால் தமிழகத்தில் கல்லணை அமைந்திருக்காது.

இஸ்ரோ போன்ற தொழில்நுட்ப அமைப்புகள், பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இதுகுறித்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தின் நீராதாரங்களை இணைக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும். தாமிரபரணி, காவிரி, பாலாறு, வைகை போன்றவற்றை இணைத்தால் தமிழகத்தின் நீர்த் தேவைகளை தாராளமாக நிறைவேற்ற முடியும். சோழர் காலத்து நொய்யல் ஆறு இன்று எந்த நிலையில் இருக்கிறது?. பாழ்பட்டு, மாசுபட்டு வீணாகிக் கிடக்கிறது. தேம்ஸ் நதியை சீர்படுத்தியது போல இதையும் சீர் செய்ய வேண்டியது அவசியம். உத்தரபிரதேசம், கேரளா, ஆந்திராவில் நதிகள் இணைக்கப்பட்டு உள்ளன.

3-வது உலகப்போர் என்று ஒன்று நிகழ்ந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று ஒரு கருத்து உண்டு. அது நிஜம்தான். இந்தியாவை சுற்றி உள்ள சீனா, நேபாளம், மியான்மர், வங்காள தேசம், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகள் எல்லாம் மக்கள் தொகை அதிகம் கொண்ட, தண்ணீர் பிரச்சினைகள் அதிகம் உள்ள நாடுகள். இவற்றில் பல ஆயுத பலங்களையும் கொண்டவை. நாளை இவை தண்ணீருக்காக இந்தியாவுக்கு தொல்லை கொடுக்காது என்பது நிச்சயம் இல்லை.

ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீரை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளிலும், பாட்டில்களிலும் எதிர்காலத்தில் அடைத்து வைப்பார்கள். அதை காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கும் என்பதை நாம் கற்பனை கூட செய்திருக்கமாட்டோம். ஆனால் அது இன்று நடைமுறை ஆகிவிட்டது.

இந்தியாவில் மட்டும் ஒரு ஆண்டுக்கு பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குடிநீர் விற்பனை 10 ஆயிரம் கோடிகளை தாண்டும் என்கிறார்கள். மிகப்பெரும் கம்பெனிகள் எல்லாம் இந்த தண்ணீர் விற்பனையில் குதித்திருக்கின்றன. வெளிநாட்டு கம்பெனிகளும் இந்தியாவில் குடிநீரை பாட்டிலில் அடைக்கும் தொழிற்சாலை தொடங்கி தண்ணீர் விற்பனைகளை ஆரம்பித்து இருக்கின்றன.

இது பெரும் ஆபத்து. தண்ணீருக்காக அடிதடியும், கலவரமும், யுத்தமும் ஏற்படக் கூடாது என்றால் அதற்கு தேவை தீர்க்க தரிசனம் கொண்ட ஒரு தலைமை. இளைஞர்களில் இருந்துதான் தண்ணீருக்கான அந்த இயக்கத்துக்கு தலைமை தாங்கும் ஒருவர் வரவேண்டும். எதிர்கால தண்ணீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய உடனடியாக செய்யவேண்டியது நதிநீர் இணைப்பு திட்டம்தான், என்பதை புரிந்து கொண்டு அந்த இயக்கம் அதற்கான முன்முயற்சிகளை ஆரம்பித்தாக வேண்டிய கால கட்டம்தான் இது.

நமது நாடு தண்ணீர்ப் பற்றாக்குறையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் நதி நீர் இணைப்பு மிக மிக அவசியம். மாணவர்கள் ஒரு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரைப் பாதுகாப்போம், சேமிப்போம், அதன் நீராதாரங்களை பாதுகாப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் கலாம்.

கடந்த தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது நதி நீர் இணைப்பு குறித்து திட்டமிடப்பட்டது. பின்னர் ஆட்சி போன பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி வந்தது. ஆனால் இந்த ஆட்சியில் நதி நீர் இணைப்பு குறித்து கவலையே படவில்லை. மாறாக இதெல்லாம் சரிப்படாது, நடைமுறைக்கு சாத்தியமற்றது, அறிவுப்பூர்மானதல்ல என்று ராகுல் காந்தி சொன்னார். அதைத் தொடர்ந்து அரசும் கூட இது சரிவராது என்று கூறி கிடப்பில் போட்டு விட்டது நினைவிருக்கலாம்.

கிணறு !


ஒரு கிராமத்தில் குடி தண்ணீருக்காக ஒரு கிணறு வெட்ட அந்த ஊர் மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

கிராம அதிகாரியும் செய்யலாம் என்று அவர்கள் கோரிக்கையை கிடப்பில் போட்டுவிட்டார்.

மக்களும் அதை மறந்து போய்விட்டனர்.
ஒரு சமயம் அந்த கிராம அதிகாரிக்கு கொஞ்சம் பணம் தேவைப்பட்டது,அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

கிராம மக்கள் கோரிக்கையான கிணறு நியாபகம் வந்தது.

உடனே அந்த கிராமத்தில் கிணறு வெட்டியதாகவும் அதற்கு இரண்டு லெட்சம் ரூபாய் ஆனதாகவும் ஆவணங்கள் சரிசெய்து.

அந்த இரண்டு லெட்சம் ரூபாயை அவர் சொந்த தேவைக்காக எடுத்துக் கொண்டார்.

கொஞ்சம் காலம் கழித்து அவருக்கு பணி மாறுதல் அறிவிக்கப்பட்டிருந்தது.

அவர் இடத்தில் பணிசெய்ய புதிய கிராம அலுவலரும் வந்தார்.

முதலாமவர்,தன் பொறுப்புகளை புதியவரிடம் ஒப்படைக்கையில் தனியாக அழைத்து, கிணறு வெட்டாமலேயே தான் இரண்டு லெட்சம் எடுத்துக் கொண்டதை சொல்லி, தான் செய்த தவறு வெளிவராமல் பார்த்துக்கொள்ளுமாறும் வேண்டினார்.

அப்பொழுது புதியவர் அவரை ஆறுதல் படுத்தி, நான் கவனித்துக் கொள்கிறேன்.

நீங்கள் தைரியமாகப் போங்கள் என அவரை வழியனுப்பி வைத்தார்.

ஓரிரு வருடங்கள் சென்ற பின் இந்த இரு அதிகாரிகளும் ஓரிடத்தில் சந்திக்க நேர்ந்தது, அப்பொழுது பழைய அதிகாரி, புதியவரிடம் கேட்டார், சார் நமது கிணறு சமாசாரம் என்னவாயிற்று?

பிரச்சனை ஒன்றும் இல்லையே என்றார்.
அதற்கு புதியவர் சொன்னார்.
அந்த பிரச்சனை முடிந்து விட்டது, அதை சுமூகமாக முடித்துவிட்டேன் என்றார்.

முதலாமவருக்கு விளங்கவில்லை, ஆர்வம் தாங்காமல்,
எப்படி சார் என்றார் ?

அதற்கு இரண்டாமவர் சொன்னார், நீங்கள் வெட்டிய கிணற்று தண்ணீர் விஷத்தன்மை கொண்டது என்று Lab அறிக்கை வைத்து.

அதை மூடுவதற்கு 3 லெட்சம் செலவு என்று சொல்லி,
நான் 3 லெட்சம் எடுத்தேன் என்றார்.

இது தான் நம் நாட்டின் அரசியல் நிலை.
வருபவர்கள் யாராவது நல்லது செய்ய மாட்டார்களா என்று மக்கள் ஏங்கி நிற்க நமது அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் மிஞ்சிவிடுவர்,

பிறகு நாடு எப்படி முன்னேறும்?

8/29/2016

மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ?



இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது!

கரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது....
 
சலவைக்காரர் - வெளுத்துக்கட்டுதுங்க !
 
நர்ஸ் - நார்மலாதான் பெய்யுது !
 
பஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது !
 
போலீஸ்காரர் - மாமூலா பெய்யுது !
 
வேலைக்காரி - பிசு பிசுன்னு பெய்யுது !
 
ஜூஸ் கடைக்கார்: புழிஞ்சி எடுக்குது !
 
டீ கடைக்காரர்: ஆத்து ஆத்துன்னு ஆத்துது  !
 
டாஸ்மாக் கடைக்காரர்: சும்மா கும்முன்னு பெய்யுது !
 
கோவில் பூசாரி: திவ்யமா பெய்யுது !
 
செருப்பு கடைக்காரர்: செம்ம அடி அடிக்கிது !
 
மசாஜ் பார்லர்க்காரர்- சும்மா புடிபுடின்னு புடிக்குது !
 
பேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்னு கொட்டுது!
 
மனைவி : செம அடி அடிக்குது !

கணவன் :  வாங்கு வாங்குன்னு வாங்குது !