மொத்தப் பக்கக்காட்சிகள்

8/23/2016

முகம் பொலிவாக இருக்க வேண்டுமா?

 
உடல் அழகு பெற,

சில வித்தியாசமான டிப்ஸ்கள்
======================

கண்கள் அழகாக இருக்க வேண்டுமா?
சுற்றியுள்ளோரின் நல்லவற்றை மட்டுமே
காணப் பழகுங்கள்.

முகம் பொலிவாக இருக்க வேண்டுமா?

புன்னகையோடு மனிதர்களுக்கு தினமும்
முகமன் கூறிப் பாருங்கள்.

மெல்லிய உடல் வேண்டுமா?
உங்களது உணவை, பசித்த ஏழைகளுடன்
பகிர்ந்துண்டு பாருங்கள்.

உடை அலங்காரம் பெற வேண்டுமா?
அரை நிர்வாணிகளுக்கும் உடை உடுத்த
உதவி செய்து பாருங்கள்.

அழகான கூந்தல் வேண்டுமா?
அனாதைக் குழந்தைகளின் தலையை
இரக்கமுடன் தடவிப் பாருங்கள்.

கைகள் அழகு பெற வேண்டுமா?
இல்லாத எளிய மக்களுக்கு ஈந்துதவி
செய்து பாருங்கள்.

கால்கள் உறுதி பெற வேண்டுமா?
அன்றாடம்
நடந்து பழகிப் பாருங்கள்.

● வெறும் ஒப்பனைகளால் உங்கள் முகம் மட்டுமே அழகு பெறும். ஆனால், இவற்றைக் கடை பிடித்துப் பாருங்கள். உங்கள் அகமும் அழகு பெறும்.

● படைத்த இறைவன் நமக்கு இரண்டு கைகளை வழங்கியுள்ளான். அதில் ஒன்று, நமக்கு. இன்னொன்று, இன்னொருவருக்கு உதவுவதற்கு என்பதை மறந்து விட வேண்டாம்.

8/19/2016

மதிப்பு !

 
 
1. உடலை மதிப்பாக உணர்ந்தால், சாப்பிடுவதில் கவனம் செலுத்துவோம்.

2. நண்பனை மதிப்பாக உணர்ந்தால், மரியாதை கொடுப்போம்.

3. பணத்தை மதிப்பாக உணர்ந்தால், அவசிய செலவுகள் செய்வோம்.

4. உறவுகளை மதிப்பாக உணர்ந்தால், முறிக்க மாட்டோம்.

5. வியாபாரத்தை மதிப்பாக உணர்ந்தால், அர்ப்பணிப்புடன் செய்வோம்.

6. வாழ்க்கையை மதிப்பாக உணர்ந்தால், உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம்.

மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை.

8/12/2016

"வாழ்க்கை வாழ்வதற்கே" "அன்பே சிவம் !

"உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது?"

தஞ்சையை ஆண்ட "மன்னர் இராஜராஜ சோழனுக்கு" ஒரு சந்தேகம் எழுந்தது

"உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய பொருள் எது"

என்பதே அவர் கேள்வி.??

மன்னரின் கேள்விக்கான சரியான விளக்கத்தை அறிஞர்கள் மட்டுமல்லாமல் மக்களும் அளிக்கலாம்.

அனைவரையும் மகிழ்விக்கும் பொருளை" அரண்மனையில் இருக்கும் கொலு மண்டபத்தில் வைத்து விடுங்கள்,

யாருடைய "பொருள்" அரசருடைய சந்தேகத்திற்கு சரியான விடை தருகிறதோ அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு.
என அறிவிக்கப்பட்டது.

மக்களும் யோசித்து,

அவர்களுக்கு தெரிந்து "மகிழ்ச்சியை தரும் பொருட்கள்" எவையோ அவற்றை கொண்டு வந்து அரண்மனை கொலு மண்டபத்தில் வைத்துவிட்டு ஆயிரம் பொற்காசுகள் பரிசுக்காக காத்திருந்தார்கள்.

மறுநாள், "மன்னர் ராஜராஜ சோழர்" கொலு மண்டபத்திற்கு வந்து பார்த்தார்.

மக்கள் வைத்த பொருட்கள் மண்டபத்தில் நிரம்பி இருந்தது.

ஒவ்வொரு பொருட்களாக அரசர் பார்த்துக் கொண்டே வந்தார்.

👇

* முதலில், சிறிய அளவு பொன் இருந்தது.

அதன் கீழே,

“செல்வமே மகிழ்ச்சி தரக்கூடியது” என எழுதப்பட்டிருந்தது.

ஆனால்,

செல்வந்தர்களுக்கும், நோயாளிகளுக்கும் ,

செல்வம் எப்படி மகிழ்ச்சியை தரும்?”

அதனால் இது சரியான விளக்கம் அல்ல.”

என அதை நிராகரித்தார் மன்னர்.

👇

** அடுத்ததாக, இசை கருவி இருந்தது.

அதன் கீழே, “இசையே மகிழ்ச்சி தரக்கூடியது” என எழுதப்பட்டிருந்தது.

ஆனால்,

காது கேட்காதவர்களுக்கு இந்த இசை எப்படி மகிழ்ச்சியை தர முடியும்?

இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என நிராகரித்தார்.

👇

* அடுத்து, அழகான மலர்கள் இருந்தன.
இவை,
கண் தெரியாதவர்களுக்கு எப்படி மகிழ்ச்சியை தர முடியும்?.

அதனால் இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது”

👇

** அடுத்து, இனிப்பான பலகாரங்கள் இருந்தது.

“நோயாளிகளுக்கு எப்படி இனிப்பு மகிழ்ச்சியை தரும்?” என்று கூறி அதனையும் நிராகரித்த "மன்னர் இராஜராஜ சோழர்"

👇

அடுத்தாக ஒரு பெரிய "சிவலிங்கத்தின்" அருகில் வந்தார்.

அந்த "சிவலிங்கத்தின்" கீழே ஒரு சிற்பம்.

அதில் ஒரு தாய், பசியில் இருக்கும் ஒரு சிறுவனுக்கு உணவு தருவது போல அந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

அந்த சிற்பத்தின் கீழே "அன்பே சிவம்” என்று எழுதப்பட்டிருந்தது.

இந்த சிலையை வைத்த சிற்பியை அழைத்து வாருங்கள் என்றார்
மன்னர்.

வறுமை தின்ற உடலுடன் ஒரு ஏழை சிற்பி, மன்னரின் முன் அழைத்து வரப்பட்டார்.

“நீங்கள்தான் இந்த சிலையை இங்கு வைத்தீரா?

இதன் பொருள் என்ன என்பதை விளக்கமாக சொல்லுங்கள்.”
என்றார் மன்னர் அந்த சிற்பியிடம்.

“அரசே நான் ஒரு சிற்பி, இந்த சிலையை வடிவமைத்தது அடியேன்தான்.

"சிவலிங்கத்தின்" கீழே ஒரு பெண்மணி "அன்போடு" ஒரு சிறுவனுக்கு உணவு தருகிறாள்.

இந்த உலகில் ,
"அன்பை" மட்டும்தான்,

"கண் தெரியாதவர்ளும்,
காது கேட்காதவர்களும்,
வாய் பேச முடியாதவர்களும், உணர முடியும்"

அதேபோல் உடல்நலம் இல்லாதவர்களும் "அன்பைதான்" எதிர்பார்க்கிறார்கள்.

"அன்பு" மட்டுமே உலகில் சிறந்தது.

"அன்பிருந்தால்" எதிரியையும் நண்பனாக்கும்.

"அன்பு" இல்லையெனில் நண்பனையும் எதிரியாக்கும். உலகில் சிறந்ததும்,

அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியதும் "அன்பு ",

"அன்புதான் இறைவன்"

அதனால்தான் சிவலிங்கத்தின் கீழே தாயன்பு கொண்ட ஒரு பெண்மணியை வடிவமைத்து,

🙏 ”அன்பே சிவம்” 🙏

என்று எழுதி வைத்தேன்.”
என விளக்கினார் சிற்பி.

இதை கேட்ட அரசர் மிகவும் மகிழ்ந்தார்.

உலகத்திலேயே அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது எது என்ற என் சந்தேகத்திற்கு அற்புதமான விளக்கம்.

நீங்கள் ஒரு சிற்பி என்பதால் நான் கட்டும் தஞ்சை கோவிலுக்கு நீங்களே சிற்ப வேலையை செய்யுங்கள் என்று கூறி , ஆயிரம் பொன்னையும் பரிசாக சிற்பிக்கு தந்து,

ஏழை சிற்பியின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினார் அரசர்.

அன்புக்கு கட்டுப்படாதவர்கள் இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள்?.

"அன்புதான் அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது"

🙏 "அன்பே சிவம்" 🙏

"வாழ்க்கை வாழ்வதற்கே"

7/18/2016

ஆசைக்கு அளவேது?

 
கடவுள் ஒரு நாள் ஓர் ஏழையைக் காண பூலோகம் வந்தார். அந்த ஏழையைச் சந்தித்து, 


உனக்கு என்ன வேண்டும்?என்று கேட்டார்.

ஏழையோ மிகுந்த ஆசையுடன், ��எனக்கு பணம், தங்கம், வைரம் எல்லாம் வேண்டும் என்றார்.

கடவுள் ஒரு விரலை நீட்டி அங்கிருந்த குடத்தை தங்கமாக்கினார். ஆனால், ஏழை பேசாமல் இருந்தான். கடவுள் மறுபடியும் விரலை நீட்டி அந்த வீட்டிலிருந்த எல்லாப் பொருட்களையும் தங்கமாக்கினார். 
 
அப்போதும் அவன் பேசாமல் இருந்தான். மீண்டும் கடவுள் விரலை நீட்டி அந்த வீட்டிலிருந்த பாத்திரங்களை எல்லாம் தங்க மாக்கினார். 
 
அப்போதும் அவன் சிரிக்கவே இல்லை. கடவுள் ஏழையிடம்

இன்னும் உனக்கு என்னதான் வேண்டும்?என்றார்.

ஏழையோ, அந்த விரல் வேண்டும்! என்றான்.

ஆசைக்கு அளவுண்டு. ஆனால், பேராசைக்கு அளவேது?

7/08/2016

குமரிக்கண்டம் !.ஏழுதெங்க நாடு !ஏழுமதுரை நாடு !


கன்னியாகுமரி

மூழ்கிப் போன உண்மைகள் வெளி வர தொடங்கியுள்ளது .  (((இதை படிக்க 5து நிமிடம் ஒதுக்குங்கள்))) நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்க ு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்" நாவலன் தீவு"என்றுழைக்கப்பட்ட"குமரிக்கண்டம்.
 
கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கி கொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!.

இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்  "குமரிக்கண்டம்" .ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலைநாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! 
 
பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!.

தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்ட மான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர்"இறையனார்
அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.

தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449 புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன்  39 மன்னர்களும் இணைந்து, "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .
 
இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம்
தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களடன்" அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம்,மாபுராணம்"ஆகிய நூல்களை இயற்றப் பட்டது .

இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில"கி.மு1850இல்449 புலவர்கள் களுடன் "அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது. இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!
 
இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........!!தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !

இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம்!

தோழர்களே !முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் !நம் பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில் குறைந்தப்பட்சம் ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்