மொத்தப் பக்கக்காட்சிகள்

4/18/2016

பேய் இருக்கா ! இல்லையா !

பேய், ஆவி குறித்த தகவல்கள்...!!

1.பேய்கள் உறங்குவதில்லை..தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும்.
.
2 பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே விரும்பும்..எனவே தான் அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.
.
3 பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும்.. உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம்.
.
4 பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல.. தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே முயற்சி செய்யும்.
.
5 விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்.
.
6 பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள்தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்கள்.
.
7 பேய்கள் அல்லது ஆவிகள் குளிர்மையானவை. அதனால் தான் அவைகளை நீங்கள் சந்திக்கின்ற பொழுது மிக குளிர்மையை உணர்வீர்கள்.
8 பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும்.. சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்ப்படுத்த முயற்சி செய்யும்.
.
9 நல்ல பேய்கள் அல்லது ஆவிகள் பயங்கரமான தோற்றம் அற்றவை. கெட்ட பேய்கள் அல்லது ஆவிகள் தோற்றம் மிக கொடூரமானதாக இருக்கும்.
.
10 பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது..எப்பவுமே கோவில்கள்/சர்ச்சுகளை வழிபாடு தலங்களை அண்டியே சுற்றியபடி இருக்கும்.
.
11 பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings)உண்டு..ஆனால் உணர (sense) முடியாது.
.
12 பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக்கொள்ள முயற்சிக்கும்.
.
13 பேய்கள் அல்லது ஆவிகளால் [கெட்ட] கொலைசெய்ய முடியாது.. ஆனால் ஒருவன் தன்னை தானே கொலைசெய்யும் அளவுக்கு தூண்டிவிடும் சக்தி உண்டு.
.
14 பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல..எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும்.
15 பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்.
.
16 பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும்.
.
17 பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு.
.
18 பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக் காணக்கூடியவர்களின் இரத்த பிரிவு (Blood Group) 'O' + or - ஆக இருக்கும்..

மற்றவகை இரத்த பிரிவு உள்ளவர்களின் கண்களுக்கு தெரிவது அபூர்வம்..

ஒரு பய தூங்க கூடாது.......😉😁

4/15/2016

ஜெனரேஷன் கேப்!



கும்பிடும் வரை கடவுள்;
திருட்டுப் போனால் சிலை !
அப்பா 50 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம்
நடந்ததுக்கும், நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50
ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் பேரு தான்
ஜெனரேஷன் கேப்!
எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி
ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!!!
தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும்
அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை
கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை என்
நாடு சுத்தம் ஆகாது!!!
'ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும்
குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம் !!
வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை
கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள்
கொடூரமானவை. !
அவசரத்துக்கு ஒரு கொத்தனார தேடுனா
ஊர்ல ஒரு பய இல்ல,
தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும்
இருக்கானுங்க !!
இவன் என்ன நினைப்பான் அவன் என்ன
நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா
உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி
நினைக்கிறதேயில்ல!....நிதர்சனம்
இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து
அது சாப்புடு இது சாப்புடுனு
சொல்லுவான். வசதி இருக்கவன பாத்து
எதையும் சாப்புடகூடாதுனு
சொல்லுவான்.!
இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே
என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்துவிடுமோ என்ற
கவலை சிலருக்கு!!
250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு
சுமாராகவும் இலவச தரிசனத்திற்கு
படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்...!!
மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள்
ஆச்சர்யப்படுத்தினார்கள். இப்போது
வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்த
ுகிறார்கள்...!!!
தூக்கம் வராமல்
முதலாளி...
தூங்கி வழியும்
வாட்ச்மேன.........முரண்.
கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம்
கொடுத்து விட்ட படியால்..கடவுள் உங்கள்
எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை!

4/13/2016

சர்க்கரை

ஒருமுறை கோவிலுக்குப் போன ராமகிருஷ்ண பரமஹம்சரிடம்,

"ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம் எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன.

கடவுளுக்கும் படைக்க முடியவில்லை, பக்தர்களுக்கும்கொடுக்க முடியவில்லை" என்று முறையிட்டனர்.

இதைக்கேட்ட பரமஹம்சர் சொன்னார்: "இன்றைக்குக் கோவில் வாசலிலே ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள்.

அப்புறம் எறும்புகள் உள்ளே வராது"

அதேபோல கோவில் வாசலிலே சர்க்கரையைப் போட்டதும், எறும்புகளெல்லாம் அந்த சர்க்கரையை மொய்த்து விட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன. "

உள்ளே விதவிதமாக பிரசாதங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த எறும்புகள் வாசலில் இருக்கிற சர்க்கரையை மட்டும் மொய்த்துவிட்டு திரும்பிப் போய்விட்டனவே" என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டபோது,

பரமஹம்சர் சொன்னார்:

" எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதான். 

மனிதர்களும் வாழ்க்கையில் உயரிய லட்சியமெல்லாம் வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

ஆனால், நடுவிலே கிடைக்கிற அற்ப சந்தோஷத்துக்கு மயங்கி முன்னேறாமலேயே இருந்து விடுவார்கள்".

3/14/2016

ॐ ஓம் சிவாய வசி ॐ மாலிக்கபூரின் மதுரை மீனாட்சி கோவில் படையெடுப்பு!



மாலிக்கபூரின் மதுரை மீனாட்சி கோவில் படையெடுப்பு! மதுரைக்கு வந்து கொண்டிருந்தான் கொடுங்கோலன் மாலிக்கபூர். 

அவன் வரும் வழியெங்கும் இரத்தம், கொலை, கொள்ளை, பலாத்காரம், பெண்களை சிறைப்படுத்துதல்.நிறுத்தாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. கோவில்களை இடித்தான். முடியாதவற்றில் விக்கிரக மூர்த்தியை மட்டுமாவது இடிப்பான். பல கோவில்களில் மூர்த்தியை எப்படியாவது காப்பாற்றி விடுவார்கள் நம் மக்கள். இப்படியாக துவங்கியது தான் படையெடுப்பு.* 

இவன் மதுரை நோக்கி படையெடுத்து வருவதை கேள்விப்பட்டனர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சேர்ந்த 5 சிவாச்சாரியார்கள், எப்படியாவது நமது கோவிலை காப்பாற்ற வேண்டும், சுவாமி மீது ஒரு அயோக்கியன் கை வைத்து விடக் கூடாது என்று தங்களுக்குள் சபதம் செய்து கொண்டார்கள். தாம் செய்யும் காரியத்தை நேரம் வரும் வரை யாருக்கும் சொல்வதில்லை என்று சத்தியம் செய்தார்கள்.* சுவாமிக்கு அபிஷேகமெல்லாம் செய்து முடித்து, கண்ணில் நீருடன் மீண்டும் உன்னை எப்போது காண்போம் சர்வேசா, சுந்தரேசா என்று கதறிய படியே கர்ப்பகிரக்கத்திற்குள்ளேயே ஒரு கல் திரை எழுப்பினார்கள். வெளியே இன்னொரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்கள். அசலைப் போலவே நகை, விளக்கு,மாலை, எல்லாம் ஏற்பாடுசெய்தார்கள்.* 

மதுரை வந்தான் மாலிக்கபூர்.ஆயிரக்கணக்கான பேரை கொன்றான். போலி விக்ரகத்தை உண்மையென்று நினைத்து இடித்தான். செல்வங்களை எல்லாம் கொள்ளை அடித்துக் கொண்டு போனான்.* அதன் பின் 48 ஆண்டுகள் கோவிலில் பூஜை இல்லை. தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 48 ஆண்டுகள் பூஜை கிடையாது. கோவிலே பாழாக இருந்தது.*

 அதன் பின் விஜயநகர சாம்ராஜ்யம் துவங்கியது. முகலாயர்களை துவம்சம் செய்தார்கள். எல்லா கோவில்களையும் மறுசீரமைப்பு செய்தார்கள். 

அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் வேலையை ஆரம்பித்தார்கள். அங்கே இடிந்து கிடந்தது சிவலிங்கம். சரி வேறு ஒரு சிலையை செய்ய சொல்லி உத்தரவு கொடுப்போம் என்று சொன்னார்கள்.* 

அப்போது தள்ளாத வயதான ஒரு சிவாச்சாரியார் வந்தார். புது விக்கிரகமெல்லாம் வேண்டாம். சுவாமி பத்திரமாக இருக்கிறார் என்றார். என்ன சொல்கிறீர்கள்! இதோ இடித்து விட்டு போயிருக்கிறார்களே என்றனர். இல்லை, இல்லை, இது மூல விக்கிரகமில்லை என்று சொல்லி நடந்ததை சொன்னார்.சத்தியம் செய்த 5 பேரில் 4 பேர் இறந்து விட்டார்கள். காலம் வரும் வரை எப்படியாவது நான் இதை சொல்லி விட்டு சாக வேண்டும் என்று உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கிறேன் என்று சொல்லி தாளாத துக்கத்துடனும் மனதில் இருந்த பாரம் இறங்கியதில், நல்லது நடக்கிறதே என்று மகிழ்ச்சியுடனும் அழுதுகொண்டே சொன்னார். 

உடனடியாக அந்த மூர்த்தி இருந்த இடத்தின் பின்னே உள்ள சுவற்றை இடிக்க ஆரம்பித்தார்கள். முழுவதும் இடித்து உள்ளே சென்று பார்த்தால்.......


--- உள்ளே 48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாமல், விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுவாமியின் மீது சாற்றிய சந்தன கலபம் ஈரமாக இருந்தது. பூக்கள் வாடாமல் இருந்தன. கர்ப்பகிரகத்தில் உள்ளே இருந்து வரும் அந்த வாசம் அப்படியே இருந்தது!!!! * 48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாத நிலையில் உள்ளே அனைத்தும் மூடும் போது இருந்த படியே இருந்தது. திளைத்தனர் பக்தியில் அனைவரும். அனைத்து சோக நிழல்களும் பறந்தன. ஊரே திருவிழா கோலம் பூண்டது இந்த அதிசயத்தை காண. மீதும் புதுபொலிவுடன் கோவில் திறக்கப்பட்டது.* இன்றும் மதுரை மீனாட்சி கோவிலுக்கு போனால் உடைக்கப்பட்ட சிவலிங்கம் ஒரு ஓரமாக பொற்றாமரை குளம் சுவரருகில் வைக்கப்பட்டுள்ளது.


இந்த விவரம் ஒரு பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. யாரும் பார்ப்பதில்லை, அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மதுரை கோவிலுக்கு வந்தார். அருங்காட்சியகத்திற்கு வந்து பார்த்தார். இதை படித்து விட்டு, எப்பேர்ப்பட்ட நடப்பு இது, இதை எதற்கு அருங்காட்சியகத்தில் வைத்தீர்கள்? வெளியே கோவிலில் வையுங்கள். விவரமாக எழுதி போடுங்கள். அனைவரும் படிக்கட்டும் என்றார்.*

 ॐ ஓம் சிவாய வசி ॐ

3/07/2016

தூ‌‌க்க‌ம்


பலரு‌ம் ‌நி‌ம்ம‌தியான தூ‌‌க்க‌ம் இ‌ன்‌றி அவ‌தி‌ப்படு‌கிறா‌ர்க‌ள். அத‌ற்கு அவ‌ர்களது நடைமுறை பழ‌க்க வழ‌க்க‌ங்க‌ள்தா‌ன் காரண‌ம் எ‌ன்பதை முத‌லி‌ல் உணர வே‌ண்டு‌ம்.

எந்தக் காரணம் கொண்டும் இரவு 8 அ‌ல்லது 9 மணிக்கு மேல் கம்ப்யூட்டரின் முன் உட்காராதீர்கள். 8 மணிக்கு கம்ப்யூட்டர் முன்பிருந்து எழுந்தால் தான் 10.30 மணிக்கு ஆழ்ந்து தூங்கமுடியும். 9 ம‌ணி‌க்கு‌ள் தொலை‌க்கா‌ட்‌சியை அணை‌த்து ‌வி‌ட்டா‌ல்தா‌ன் 1 ம‌ணி நேர‌த்‌தி‌ல் தூ‌க்க‌ம் உ‌ங்களை‌த் தழுவு‌ம்.

குறைந்த வெளிச்சத்தில் தூங்குவது ந‌ல்லது. வெ‌ளி‌ச்சமே இ‌ல்லாம‌ல் இருளாக இரு‌ப்பது‌ம் ச‌ரிய‌ல்‌ல. படு‌க்கை அறை கா‌ற்றோ‌ட்டமான, சு‌த்தமான அறையாக இரு‌க்க வே‌ண்டு‌ம்.

தூ‌ங்குவத‌ற்காக தூக்க மாத்திரைகளை பயன்படுத்துவதை முழுவதுமாகத் தவிர்த்து விடுங்கள்.

படுப்பதற்கு இரண்டரை மணிநேர‌த்‌தி‌ற்கு முன்பு இரவு உணவை முடித்துவிடுங்கள். தூ‌ங்குவத‌ற்கு மு‌ன்பு எ‌ளிய நடை‌ப்ப‌யி‌ற்‌சி அ‌ல்லது உட‌ற்ப‌யி‌ற்‌சி செ‌ய்வது ‌மிகவு‌ம் ந‌ல்லது