மொத்தப் பக்கக்காட்சிகள்

12/13/2013

அழகான நிஜங்கள் .




மணமான பெண்ணிற்கு
 

மாமியார் கொடுமை .....!!!
 

மணமாகாத பெண்ணிற்கு
 

வரதட்சனை கொடுமை ....!!!
 

விதவைப் பெண்ணிற்கு
 

விதியின் கொடுமை.... !!!
 

காதலிக்கும் பெண்ணிற்கு
 

காத்திருப்பது கொடுமை.....!!!
 

அழகான பெண்ணிற்கு
 

ஆயிரம் கொடுமை ....!!!
 

அழகில்லாத பெண்ணிற்கு
 

அத்தனையும் கொடுமை.....!!!

















Thanks to Saidevi

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?






1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.

2.
மனது புண்படும்படி பேசக்கூடாது.

3.
கோபப்படக்கூடாது.

4.
சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.

5.
பலர் முன் திட்டக்கூடாது.

6.
எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.

7.
முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

 8.
மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

 9.
சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.

10.
மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

11.
வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.

12.
பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

13.
வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.

14.
மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

15.
ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

16.
பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

17.
ஒளிவு, மறைவு கூடாது.

18.
மனைவியை நம்ப வேண்டும்.

19.
முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

20.
மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.



21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.

22.
தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

23.
உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.

24.
சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

25.
சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

26.
குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால்இது உன் குழந்தைஎன்று ஒதுங்கக்கூடாது.

27.
அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி

11/21/2013

காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்தியாசம்


காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்தியாசம்








* உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.


* அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்

-----------------


* காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.
 

* டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.
 

------------------------------

* எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.
 

* நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.
 

--------------------------------
 

* உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.
 

* ஆறிப்போன பார்சல் உணவு தான் கல்யாணம்
 

---------------------------

* நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.

* கல்யாணம் என்பது பழைய வண்டியில் கரடுமுரடு சாலைப் பயணம்

------------------------------------------


* உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள்.
 

* ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள்.

------------------------------

* காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள்.
 

* திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரேப் பேசும்.

 -----------------------


* குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல்.
 

* அவர்களின் முரட்டுப் பிடிவாதம் கல்யாணம்.

 --------------------------

* ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்வது காதல்
 

* செய்துவிட்டு தெரிவிப்பது கல்யாணம்.
--------------------------------
 

* எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதலி.
 

* எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவி.

---------------------------------

 
* அவர் இல்லாத இடம் நரகமாக இருக்கும்.
 

* கல்யாணத்திற்குப் பின் அவர் இல்லாத இடமே சொர்க்கம் என்றிருக்கும்.

--------------------------------


* பல மணி நேர தொலைபேசி உரையாடல்
 

* திருமணத்திற்குப் பின்பும்தான், அவரவர் நண்பர்களுடன்.

----------------------

 
* போட்டி போட்டுக்கொண்டு விட்டுக் கொடுப்பார்கள்.
 

* போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள்.
-----------------------------------------------------------