மொத்தப் பக்கக்காட்சிகள்

11/24/2012

பசி வந்தால் பத்தும் பறந்து போய் விடும்.


1.மானம்
2 குலம்
3. கல்வி
4.வன்மை
5.அறிவுடமை
6. தவம்
7. முயற்சி
8. தாளாமை
9. காமம்
10. தானம்
ஆகிய பத்தும் பறந்து போய் விடும்.


இளமையில் வந்த வறுமையும், முதுமையில் வந்த செல்வமும்,துன்பத்தை விளைவிப்பனவாகும். -ஒளவையார் 

மனிதாபிமானம் , மனித நேயம். பணம் உள்ளவர்கள் நினைத்தால் இவ்வுலகில் வறுமையை நொடியில் ஒழித்து விடலாம் . சிந்திப்பார்களா , பணம் படைத்தவர்கள் !! 

11/20/2012

மனம் விட்டு பேசுங்கள்...! ஆறுதலாக நாலு வார்த்தை


 
ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வரத்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதல், அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளும், அணுசரனையான அக்கறையும்தான்.


குறிப்பாக உங்களது துணை வருத்தத்திலோ அல்லது கவலையிலோ இருக்கும்போது நீங்கள் அவருக்கு தோள் கொடுத்து நின்று ஆறுதல் அளிக்கும்போது அவருக்குக் கிடைக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் சொல்லில் வடிக்க முடியாதது.

அன்பாலும், பாசத்தாலும், அக்கறையாலும், பரிவாலும் உங்களது வார்த்தைகளால் அவரது புண்ணுக்கு நீங்கள் போடும் மருந்து மிகப் பெரிய நிவாரணமாக அமைகிறது. நமக்கென்று ஒரு தோள் இருக்கிறது, நமக்காக ஒரு உயிர் இருக்கிறது, நம்மை தூக்கிச் சுமக்க ஒரு சுமை தாங்கி இருக்கிறது என்ற நினைப்பே பலருக்கு சோர்வையும், சோகத்தையும் தூக்கிப் போட்டு விட உதவுகிறது.

உங்களது துணைக்கு உடல் நலம் சரியில்லையா, மன வருத்தத்தி்ல இருக்கிறாரா அல்லது ஏதாவது பயத்தில் இருக்கிறாரா.. கவலையேபடாதீர்கள், ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள். அப்படிய பறந்து போய் விடும் அவரது கவலைகள்.

கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லலாம்...

இது ஒரு உபாயம்.சிலருக்கு கட்டி அணைத்து தோளோடு தோள் சேர்த்து, தலையை வருடிக் கொடுத்து, முதுகைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறும்போது அதை அவர்கள் விரும்புவார்கள். இது எல்லோருக்குமே பிடித்தமான விஷயமும் கூட. இது ஒருவகையான பாசம் பரிவு கலந்த அரவணைப்பு. எத்தகைய துன்பத்தில் இருந்தாலும் இந்த கட்டிப்பிடிக்கு முன்பு அது கால் தூசுதான். எனவே வருத்தமெல்லாம் அப்படியே கரைந்து போய் விடும்.

உனக்காக நான் இருக்கிறேன் கண்ணம்மா, கண்களில் ஏன் இந்தக் கவலை. எல்லாவற்றையும் மறந்து விடு, நிம்மதியாக இரு. உனக்கான தோள் நான். என் மீது உன் பாரத்தை ஏற்றிவிட்டு, நிம்மதியாக இரு என்று சொல்லும்போது அவர்களுக்கு்க கிடைக்கும் அந்த பாதுகாப்பு உணர்வுக்கு ஈடு இணையே கிடையாது.

கவனத்தைத் திருப்புங்கள்

சிலருக்கு தேவையில்லாத பயம், கவலை வந்து மனதை வருத்தும். அதுபோன்ற சமயங்களில் அவர்களை அந்தப் பிரச்சினையிலிருந்து திசை திருப்ப முயற்சியுங்கள். ஜாலியாக ஏதாவது பேசுங்கள், வேறு டாப்பிக் குறித்து அவர்களது சிந்தனையை திருப்புங்கள். அதையே நினைத்துக் கொண்டு பயப்படாதே என்று தட்டிக்கொடுங்கள். அவர்களுக்கு ஊக்கமாக, பக்கபலமாக இருந்து, அவர்களின் பயத்தைப் போக்குங்கள். அவரது மனதுக்கு இதமாக ஏதாவது பேசிக் கொண்டிருங்கள்.

மனம் விட்டு பேசச் சொல்லுங்கள்

சிலருக்கு பிரச்சினையை யாரிடம் சொல்லி அழுவது என்ற குழப்பம் இருக்கும். அப்போது அவரிடம் உங்களைப் புரிய வையுங்கள். என்னிடம் கொட்டி விடு, எல்லாவற்றையும் வெளியில் போட்டு விடு, பிரச்சினையை சொல் நான் தீர்வு சொல்கிறேன் என்று நம்பிக்கை அளியுங்கள். அவர் சொல்லும்போது அக்கறையுடன் கேட்டு அவருக்குப் பொருத்தமான தீர்வை சொல்லுங்கள். நிச்சயம் அவருக்கு ஆறுதல் கிடைக்கும்.

உங்கள் துணையின் கண்களிலிருந்து நீர் வழியும்போது அதை வேடிக்கைப் பார்க்காமல், அதைப் பரிகாசம் செய்யாமல், உண்மையான பாசத்தோடும், நேசத்தோடும், காதலோடும், அன்போடும் நீங்கள் அணுகும்போது தானாகவே அந்தக் கண்ணீர் நின்று போகும். அன்பைக் கொட்டி நீங்கள் தரும் ஆதரவு அவருக்கு ஒரு தாயின் மடியைப் போலவே காட்சி தரும்.

எனவே உங்கள் துணை சோரந்திருக்கும்போது நீங்கள் தாயாக மாறி அவருக்கு இளைப்பாறுதலைக் கொடுங்கள்...!

Thanks to One india.com

10/17/2012

உலக தினங்களின் பட்டியல்



காதலர் தினம், அன்னையர் தினம், நட்பு தினம் என ஒரு சில தினங்கள்தான் தற்போது இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது.

இவற்றுக்கே இதென்ன அன்னையர் தினம், நட்பு தினம் என்று தனித்தனியாக ஒரு தினம் என்று சலித்துக் கொள்பவர்கள் ஏராளம்.

இவர்கள் எல்லாம் இந்த பட்டியலைப் படித்துவிட்டு என்னத்தான் சொல்வார்களோத் தெரியவில்லை.

உலக தினங்களின் பட்டியல்


பிப்ரவரி 14, காதலர் தினம்

பிப்ரவரி 28, உலக றிவியல் தினம்
மார்ச் 2, உலக புத்தக தினம்
மார்ச் 8, உலக மகளிர் தினம்
மார்ச் 22, உலக தண்ணீர் தினம்
ஏப்ரல் 1, முட்டாள்கள் தினம்
ஏப்ரல் 7, உலக சுகாதார தினம்
ஏப்ரல் 22, உலக பூமி தினம்
ஏப்ரல் 25, உலக இறைச்சல் விழிப்புணர்வு தினம்
மே 1, உழைப்பாளர் தினம்
மே 8, உலக விலங்குகள் பாதுகாப்பு தினம்
மே 11, உலக ன்னையர் தினம்
மே 15, உலக குடும்பங்கள் தினம்
மே 18, உலக அருங்காட்சியக தினம்
மே 31, உலக புகையிலை எதிர்ப்பு தினம்

ஜுன் 5, உலக சுற்றுச்சூழல் தினம்
ஜுன் 12, உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

 

 
ஜுலை 1, உலக நகைச்சுவை தினம்
ஜுலை 11, உலக மக்கள் தொகை தினம்

ஆகஸ்ட் 5, உலக நட்பு தினம்
ஆகஸ்ட் 12, உலக இளைஞர் தினம்

செப்டம்பர் 21, உலக அமைதி தினம்
செப்டம்பர் 26, உலக சுற்றுலா தினம்
அக்டோபர் 1, உலக முதியோர் தினம்
அக்டோபர் 5, உலக ஆசிரியர் தினம்
அக்டோபர் 10, உலக மனவளர்ச்சி குன்றியோருக்கான தினம்
அக்டோபர் 16, உலக உணவு தினம்

நவம்பர் 11, உலக நினைவூட்டல் தினம்
நவம்பர் 16, உலக பொறுமை தினம்
நவம்பர் 20, உலக குழந்தைகள் தினம்
நவம்பர் 21, உலக தொலைக்காட்சி தினம்

டிசம்பர் 1, உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர் 3, உலக உடல் ஊனமுற்றோர் தினம்
டிசம்பர் 10, உலக உரிமைகள் தினம்

வெற்றி பெற வேண்டும்



வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்ல¨ என்று வேதனைப் படுவார்கள்.
அப்படி தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று அவர்கள் நினைப்பதுதான் முதல் தவறு. காந்தியடிகளும், திருவள்ளுவரும், விவேகானந்தரும், புத்தரும் என பலரும் தங்களது ஆலோசனைகளை நமக்கு அள்ளித் தந்துள்ளனர்.
அவரவர்க்கு ஏற்ற வழிகளையும், தலைவர்களையும் நாம்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
வெற்றி வேண்டுமா உங்களுக்கு? அப்படியானால் இப்படி செய்யுங்கள் என்று விவேகானந்தர் இங்கு நமக்கு கூறியுள்ள ஆலோசனைகளைப் பார்ப்போமா...

அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம்.

அதிக நேரம் தூங்காதீர்கள். அதற்காக மிகக் குறைவாகவும் தூங்க வேண்டாம்.

பொறாமை குணம் இருந்தால் விரட்டி விடுங்கள்.

சந்தேகமும், சஞ்சலபமும்தான் உங்கள் முதல் எதிரிகள். அவற்றை துரத்தியடியுங்கள்.

சோம்பல் உங்களிடம் இருந்தால் முதலில் அதை ஒழித்துக் கட்டுங்கள்.

எந்த சூழ்நிலையிலும் பேராசை கொள்ளாதீர்கள்.

உடல் தூய்மை முக்கியமானது. அதனால் தினமும் குளியுங்கள்.

எப்போதும் நல்லதை மட்டுமே மனதால் நினையுங்கள். அப்போது நல்லவை மாத்திரமே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடமே இருக்கிறது.

எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். தைரியமாகவும் இருக்க பழகிடுங்கள்.

பொறுமையும், விடா முயற்சியும் நமது நல்ல நண்பர்கள். எப்போதும் இவற்றுடனேயே இணைந்திருக்கப் பழகுங்கள்.

இதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி என்கிறார் சுவாமி விவேகானந்தர
 

உ‌யி‌ரின‌ங்க‌ளி‌‌ல் ‌சில வினோதம்


பறவையின் இறகுகளின் எடை அதன் எலும்புக் கூட்டின் எடையை விட அதிகம்.
சுண்டெலிக்கு வியர்க்கவே வியர்க்காது.
ஆப்ரிக்க யானைகளுக்கு உணவை மெல்ல இருக்கும் பற்களின் எண்ணிக்கை நான்கே நான்குதான்.
மிகவும் சிறிய இதயம் கொண்ட மிருகம் சிங்கம்.
பாம்புகளுக்க ஒரு நுரையீரல் மட்டுமே உள்ளது.
ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள் உள்ளன.
கட்டுல் என்ற வகை மீனுக்கு மூன்று இதயங்கள் உண்டு.
மின்னல்தாக்கி இறந்து போன மிருகங்களை மற்ற மிருகங்கள் உண்ணாது.
முள்ளம் பன்றி எலி இனத்தைச் சேர்ந்தது.
நாம் தூங்குவதை விட 50 விழுக்காடு அதிக கலோரிகள் தொலைக்காட்சி பார்க்கும் போது நம் உடல் செலவழிக்கிறது