மொத்தப் பக்கக்காட்சிகள்

4/26/2012

3. வைத்தீஸ்வரன் கோயில் "செவ்வாய்"


  
ஸ்ரீ வைத்தியநாத பெருமாளாக வீற்றிருக்கும் சிவபெருமானையும் . தாயாராக காட்சி தரும் தையல் நாயகியையும் தரிசிக்.
நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகிய வைத்தீஸ்வரன் கோயிலில் "செவ்வாய்" என்ற பெயரில் அறியப்படும் அங்காரக பெருமாள் பக்தர்களுக்கு தோஷ விமோசனம் அருளுகிறார். குஷ்ட நோயினால் அவதிப்பட்ட அங்காரகருக்கு சிவபெருமான் வைத்தியராக வந்து நோய் நீக்கிய திருக்கோயில் என்பதால் இக்கோயிலை வைத்தீஸ்வரன் கோயில் என்றே அழைக்கின்றனர்.
அங்காரக பகவானுக்கு உரிய நிறம், உலோகம், தானியம் போன்றவை வருமாறு:-
நிறம்: சிவப்பு
தானியம்: துவரை
வாகனம்: ஆடு
மலர்: செண்பகம்
உலோகம்: செம்பு
கிழமை: செவ்வாய்
இரத்தினம்: பவழம்
பலன்கள்: பகைவர்களை ஜெயித்தல், சகல சாஸ்திரம், ஞானம்
 

நாடி ஜோதிடர்கள் மிக அதிகமாக காணப்படும் இந்த ஊரில் சமீப காலத்தில் ஓரிரு நல்ல உணவு விடுதிகளும் உள்ளன என்பதை இம்முறை நேரில் கண்டறிந்தோம். சிதம்பரத்திலிருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த ஊர் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.


இக்கோயிலிலுள்ள சித்தாமிருதம் என்ற கோயில் குளத்தில் மூழ்கியவர்களுக்கு நோய் நொடிகள் யாவும் கரைந்து போகும் என நம்பப்படுகிறது.


"திருபுள்ளிருக்கு வேலூர்" (புள், இருக்கு, வேல் ஆகியவையுடன் கூடிய ஊர்)என்ற திருநாமத்தில் அறியப்படும் இந்த கோயில், ஸ்தல விருட்ஷமாக வேப்ப மரத்தையே கொண்டுள்ளது. கோயிலில் நடராஜர், துர்கா, சிவகாமி, சூரிய பகவான், சப்த கன்னிகைகள், 63 நாயன்மார்கள் ஆகியோரின் சன்னதிகளும் உள்ளன. இங்கு எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானை செல்வமுத்துக் குமாரனாக பக்தர்கள் வழிபடுகின்றனர்.


இராமாயணத்தில் வரும் ஜடாயுவின் விருப்பப்படி ஸ்ரீ ராமர் ஜடாயுவுக்கு இறுதி சடங்குகளை இந்த இடத்தில் செய்ததாக கருதப்படுகிறது. ஜடாயு குண்டம் என அறியப்படும் இவ்விடத்தையும் பக்தர்கள் தரிசிக்கலாம்.


செவ்வாயை வழிபடுவதற்கு செவ்வாயின் கவசம், காயத்திரி, அர்ச்சனை நாமாக்களைக் கூறி செப்புத் தகடுகளில் வரையப்பட்ட யந்திரத்தை  பூசித்து வந்தால் செவ்வாய் விருப்பங்களை நிறைவேற்றுவது உறுதி. இதற்குத் தேவையானது பக்தியும் சிரத்தையும் மட்டுமே. ஒரு இடத்தில் அமர்ந்தவாறு பத்து நிமிடம் வணங்கினால் போதும். 
கன்னிப்பெண்களும் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் நீராடி தூயாடையணிந்து நெற்றியில் திலகம் தரித்து கீழ் கண்ட செய்யாத் துதியையும் பக்தியுடன் ஓதினால் அளவற்ற நன்மைகள் உண்டாகும