மொத்தப் பக்கக்காட்சிகள்

1/28/2012

நிலத்திலும், நீரிலும் செல்லும் அதிசய பேட்டரி கார்

திர்காலத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேட்டரியில் இயங்கும் கார்களின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் பல முன்னணி கார் நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், தஞ்சாவூரில் உள்ள பிரிஸ்ட் பல்கலைகழகத்தில் பயிலும் இறுதியாண்டு எஞ்சினியரிங் மாணவர்கள் 7பேர் கொண்ட குழு புதிய பேட்டரி காரை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த புதிய பேட்டரி கார் நிலத்திலும்,நீரிலும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தரங்கம்பாடியிலுள்ள ஹைடெக் புராஜெக்ட் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் முரளி மற்றும் ஜெயராஜ் ஆகியோரின் வழிகாட்டுதல்களின்படி இந்த புதிய காரை பிரிஸ்ட் பல்கலைகழக மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

-கார்போ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய கார் நிலத்தில் 30 கிமீ வேகத்திலும்,நீரில் 15கிமீ வேகத்திலும் செல்லும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.இரண்டு பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட இந்த கார் சூரிய சக்தி மின்சாரத்தை சேமித்து இயங்கும் என்பதால் இரவில் கூட இதில் பயணம் செய்ய முடியும் என்கின்றனர் இந்த காரை வடிவமைத்த மாணவர்கள்.

மேலும்,சுற்றுச்சூழலுக்கு துளி கூட மாசு ஏற்படுத்தாது என்று கூறிய அவர்கள் உள்ளூரில் கிடைத்த பொருட்களை கொண்டு இந்த காரை வடிவ மைத்ததாக தெரிவித்தனர். வெறும் ரூ.35,000 செலவில் இந்த காரை உருவாக்கியுள்ளதாக மாணவர்கள் கூறினர்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் முனுசாமி முன்னிலையில் இந்த காரை புகழ்பெற்ற தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருகே மாணவர்கள் சமீபத்தில் சோதனை ஓட்டம் நடத்தி காண்பித்தனர். அப்போது, பல்வேறு துறை அரசு அதிகாரிகள் உள்பட ஏராளமான பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அங்கு குழுமியிருந்தனர்.

நிலத்தில் சிறிது தூரம் சென்ற அந்த கார் திடீரென நீரிலும் இறங்கி படகு போன்று மிதந்து சென்ற அந்த காரை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்தனர். இந்த காரை வடிவமைத்த மாணவர்களை ஆட்சியர் முனுசாமி, மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

கோடியாய் கோடியாய் பணத்தை கொட்டி தொழில்நுட்பத்தை உருவாக்கி நீர், நிலம் இரண்டிலும் செல்லும் ஹோவர் கிராப்ட்டுகளை பல முன்னணி நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

ஆனால், உள்ளூரில் கிடைக்கும் உதிரிபாகங்களை கொண்டு வெறும் 35,000 ரூபாயில் இந்த காரை வடிவமைத்து சாதனை புரிந்துள்ள இந்த மாணவர்களின் சாதனை தொடர எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவிக்கிறோம்.

இதுதொடர்பான மேலும் விபரங்களுக்கு hitech.engineeringproject@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
 
 
 
 
 

தத்துவம்…!



1.நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்ஆனால் BLOOD  TEST ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே THANK YOU  தேங்க் யூ சொல்ல முடியாது

2. . டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.

3, என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும் அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.

4.அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.

5.என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும்.

6.நீ என்னதான் வீரனா இருந்தாலும் குளிர் அடிச்சா திரும்ப அடிக்க முடியாது.

7.காசு இருந்தா கால் டாக்சி!!  காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!

8.பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா?

9.இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியை முடியாது.

10.பாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா?

11.இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

12.பஸ்சுல கலெக்டரே ஏறினாலும்  முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.

13.சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது

14.ஆயிரம் தான் இருந்தாலும் 1001 ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு

ஒரு தப்புக்கு இரண்டு தண்டனை வழக்கத்தில் இல்லை



1. முட்டாள் கணவன்,

மனைவியிடம் வாயை மூடு என்பான், புத்திசாலிக் கணவனோ கண்ணே உன் உதடுகள் சேர்ந்திருந்தால் நீ தேவதையாய் தெரிகிறாய் என்பான்.
 
2.மதுவை நிறுத்துவதற்கு எளிய வழி இது தான். 

திருமணத்துக்கு முன் எப்போதெல்லாம் சோகமாய் இருக்கிறாயோ அப்போது மது அருந்து. திருமணத்துக்குப் பின் எப்போ தெல்லாம் ஆனந்தமாய் இருக்கிறாயோ அப்போதெல்லாம் மது அருந்து.


3. விரைவான தகவல் தொடர்புக்கு

செய்தியை பெண்ணிடம் சொல்.

அதி விரைவு சேவைக்கு இதை யாரிடமும் சொல்லாதேஎன்னும் அடைமொழியுடன் சொல்.
4. திருமணம்

    ஒரு மாபெரும் தவறு செய்கையில் உலகமே வாழ்த்துமெனில்
    அதை திருமணம் என்க.

5. ஏன் அரசு ஆண்கள் இரண்டு பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது    என்கிறது ?

 அடப்போப்பாஒரு தப்புக்கு இரண்டு தண்டனை வழக்கத்தில் இல்லை !

1/27/2012

சூரியப் புயல்



நமது புவியை ஒளிரச் செய்துக்கொண்டிருக்கும் சூரியனில் மேற்பரப்பில் இருந்து வெளியான சூரியப் புயல் கடும் வேகத்தில் பயணித்து இரண்டு நாட்களுக்குப் பிறகு புவியின் வெளிப்பரப்பைத் தாக்கியுள்ளது.சூரியனில் இருந்து இப்படிப்பட்ட புயல் (Solar Storm) புதியது அல்ல. ஆனால் அது புவியின் வெளிப்பரப்பைத் தாக்கியது அரிதான செய்தியாகும்.

சூரியனின் மேல் பரப்பில் இருந்து வெளியாகும் இந்த புயல் கதிர் வீச்சுடனும், காந்த சக்தியுடனுமான வாயுப் பிழம்பாகும். சூரியனில் இருந்து காந்த சக்தியாக வெளிப்படும் இது பிறகு ஒளிரும் வாயுவாக மாறுகிறது என்று கூறுகின்றனர். கடந்த 24 ஆம் தேதி சூரியனின் மேற்பரப்பின் ஒரு பகுதியில் இருந்து வெளிப்பட்ட சூரியப் புயல் மணிக்கு 50 இலட்சம் மைல் வேகத்தில் பயணித்து இரண்டே நாட்களில் புவியின் வெளிப்பரப்பை தொட்டுள்ளது. புவியை தொடும்போது அது மிகவும் வலிமை குறைந்த மத்திய தரமான சூரியப் புயலாக (Medium - size solar storm) ஆனது என்று இதனை ஆய்வு செய்து, தகவலை வெளியிட்ட யு.எஸ். தேச கடல் மற்றும் வாயு மண்டல நிர்வாகத்தின் (National Oceanic and Atmospheric Administration - NOAA) விண் வானிலை கணிப்பு மையம் (space Weather Prediction Centre - SWPC) தெரிவித்துள்ளது. அதன் கணக்குப்படி, இந்த சூரியப் புயல் தாக்கம் 5 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாம்.
 நாம் வாழும் புவியின் வெளிப்பரப்பை சூரியப் புயல் தாக்கியது நாம் சற்றும் உணரவில்லை என்றாலும், அது வந்த வழியில் இருந்த செயற்கைக் கோள்களுக்கும், இருப்பிடம் அறிய பயன்படுத்தும் கருவிகளுக்கும் (Global Positioning System - GPS) பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.ஆனால் இதே சூரியப் புயல் இன்னும் வலிமையானதாக இருந்திருந்தால் அது நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் கைபேசிகளில் இருந்து மின்சார கட்டமைப்புகள் வரை பாதித்திருக்கும் என்று கூறுகின்றனர் அறிவியலாளர்கள். இதில் விமான சேவை, செயற்கைக்கோள்கள் ஆகியன பெரும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் என்றும் கூறுகின்றனர். பொதுவாக சூரியனில் ஏற்படும் இப்படிப்பட்ட புயல்கள் புவிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு உருவானதில்லை என்று நாசா கூறுகிறது. சூரியனில் ஏற்படும் புயலை கண்காணிக்க இரண்டு செயற்கைக் கோள்கை எதிரும் புதிருமாக நிறுத்தி ஆய்வு செய்து வருகிறது. பல படங்களையும் எடுத்துள்ளது.ஆம் ஆண்டில்தான் பலமான சூரியப் புயல் புவியைத் தாக்கியது என்று கூறுகின்றனர். அப்போது அதனை டேவிட் காரிங்க்டன் என்பவர் பதிவு செய்தார். சில நேரங்களில் சூரியனில் இருந்து வரும் இந்தப் புயலால் புவியின் வளி மண்டலம் ஒளிருவதையும் பதிவு செய்துள்ளார்கள். பச்சை நிறத்தில் அந்த வாயுப் படலம் ஒளிரும் காட்சியின் விடியோ பதிவுகளை இங்கிலாந்தின் டெலிகிராஃப் தொலைக்காட்சி தனது இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளது.அறிவிலாளர்களில் சிலர் - இதுபற்றி ஆழமாக ஆராய்ந்து வருபவர்கள், சூரியனின் மேல் பரப்பில் இருந்து உருவாகும் இப்படிப்பட்ட புயலிற்கு காரணமாக கொதிப்புகள் அதிகரித்து வருவதாகவும், அது எதிர்காலத்தில் பூமிக்கு பெரும் நாசத்தை ஏற்படுத்தலாம் என்றும் கூறுகின்றனர். இவர்களை ஹீலியோ அணுவியலாளர்கள் (Helio-Physicist) என்று கூறுகின்றனர்.சூரியப் புயல்களால் உலகிற்கு பயனும் உள்ளது. அதுதான் ஹீலியம் எனும் வாயுப் பொருள். சூரியப் புயலை புவியின் வளி மண்டலம் அப்படியே தடுத்து அமுக்கி விடுகிறது. ஆனால் அப்படிப்பட்ட வளி மண்டல தடுப்பு சந்திரனுக்கு இல்லாததால், அவைகள் சந்திரனில் மோதி அதன் தரைக்குள் ஊடுறுவுகின்றன. அதுவே அங்கு ஏராளமான அளவிற்கு ஹீலியம் இருப்பதற்குக் காரணம் என்கிறார்கள். ஒரு கிலோ ஹீலியத்தை பயன்படுத்தி ஒரு மில்லியன் டன் யுரேனியத்தை பயன்படுத்திப் பெறும் மின்சாரத்தை அணு உலைகளின் மூலம் உருவாக்கலாம் என்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
1859
 
 
 
 

ரஜினிகாந்த் ஆலோசனைப்படி “ராகவேந்திரா கோவிலை கட்டினேன்” -நடிகர் லாரன்ஸ்




நடிகர் லாரன்ஸ் நடிகர் ராகவ லாரன்ஸ் தீவிர ராகவேந்திரர் பக்தர். அம்பத்தூர் அருகே உள்ள திருமுல்லைவாயலில் ராகவேந்திரருக்கு கோவிலும் கட்டியுள்ளார். கடவுள் நம்பிக்கை பற்றி லாரன்ஸ் அளித்த பேட்டி வருமாறு:-
கடவுள் இமயமலையில் இல்லை. கஷ்டப்படுவோருக்கு உதவி செய்வதில் இருக்கிறார். நான் ஆறு வயதில் இறைவனை உணர்ந்தேன். எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடவுள் அருளாலும், என் அம்மாவின் பிரார்த்தனையாலும் பிழைத்தேன்.
நான் ராகவேந்திரரின் பக்தன். அவருக்கு கோவில் கட்ட முயன்றபோது ரஜினிகாந்த் ஆலோசனைகள் வழங்கினார். அவர் தந்த ராகவேந்திரரின் மாதிரி போட்டோவை வைத்துதான் சிலையை உருவாக்கினேன்.
குழந்தைகள் விளையாட்டு பொம்மைகள் மேல் அதிக பிரியம் காட்டுவார்கள். அதுபோல்தான் நான் கடவுளை பார்க்கிறேன். மனிதன்தான் முதல் கடவுள். குடும்பத்தை தவிக்கவிட்டு சன்னியாசம் போவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. நான் மதிய உணவு இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கிறேன்.

இப்போது நிறைய பேருக்கு மதிய உணவு போடுகிறேன். கடவுள்தான் இதற்கெல்லாம் காரணம். வாழ்க்கையை நல்வழிபடுத்த தியானம், யோகா அவசியம். நான் தியானம் செய்ய ஆரம்பித்த பிறகு அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன்.
இவ்வாறு லாரன்ஸ் கூறினார்