மொத்தப் பக்கக்காட்சிகள்

12/24/2011

எம்.ஜி.ஆர். சொன்ன பொன்மொழிகள்


நல்ல நண்பர்களை பெற வேண்டும். எவ்வளவு சொத்து   இருக்கிறது அவருக்கு என்று பார்த்து நண்பனைத் தேடினால் அது நட்பைத் தேடுவதாக அமையாது. 

எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை. பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை. பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒருவகை. அப்படிச் சிந்திக்க மறுப்பபவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒருவகை.

மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குமோ, அது போல மக்கள்தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்கு கேடு உண்டாக்கக் கூடியவை.

சீர்திருத்தக்காரன் என்றால் கடவுளை நம்பாதவன், பண்பில்லாதவன், அடக்கமில்லாதவன், அகந்தையுடையவன் என்றெல்லாம் பொருள் கொள்ளுதல் கூடாது.

சாதி, மத, இன,  மொழி முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட தேசியக் கண்ணோட்டமும், ஒற்றுமை மனப்பான்மையும்தான் நம் நாட்டை வளமிக்கதாக உருவாக்க வழி வகுக்கும்.

ஒரு மனிதன் இறந்தபிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால்தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான்.

எல்லோரும் நமக்கு வேண்டியவர்கள்தான்; ஆனால் எங்கே யாரை வைக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் கலகம் விளைவிப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. 

ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. செயலும், பண்பாட்டுடன் இருக்க வேண்டும் இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கும்.

உழைக்கும் மக்களே ஒன்று சேர்ந்திடுங்கள். பேதப்படுத்தும் சக்திகளை ஒதுக்கித் தள்ளிடுவீர். உழைப்பவரே உயர்ந்தோர் என்னும் தத்துதவத்தை நிலைநாட்டுவீர்.

நம்மைப் பெற்ற தாய் தந்தையரிடம் மட்டும் எந்தப் பொய்யும் சொல்லக் கூடாது. மற்றவர்களிடம் சொல்லலாமா என்றால் சில சமயங்களில் அந்த நிலை ஏற்படும்.

விதை செத்துத்தான் பயிர் முளைக்கும். விதை சாகாமல் பயிர் முளைப்பதில்லை. விதையை அப்படியே நாம் உண்டுவிட்டோமானால் பயிர் கிடையாது. அதைப் போல உற்பத்தியாகிற செல்வம் அவ்வளவையும் இந்தத் தலைமுறையில் தின்று தீர்த்து விடுவதென்றால் அடுத்த தலைமுறைக்கு மிச்சம் எதுவும் இராது.

வாழ்வின் சுவை எதையும் அறியாதிருக்கிற, லட்சக்கணக்கான நலிந்தோருக்காக, வருங்காலத் தலைமுறைக்காக இப்போதே இன்றே ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற துடிப்பு எல்லோரிடமும் இருக்க வேண்டும்.

முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைகளாக விளங்கும் சக்திகளை நமது ஒற்றுமையாலும், உழைப்பாலும் முறியடிக்க அனைத்துப் பிரிவினரையும் அழைக்கிறேன். வறுமைக்கும், அறியாமைக்கும், சமூகத் தீமைகளுக்கும், பிளவு மனப்பான்மைகளுக்கும் எதிராக நாம் தொடங்கியுள்ள ஆக்கவழி, அறவழி புனிதப் போரின் வெற்றிக்கு நம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ள உத்வேகம் பெறுவோம்.

இன்றைக்கு ஆண்களின் பெயருக்குப் பின்னால் ஜாதிப்பட்டம் இருக்கிறது. ஆனால் பெண்களின் பெயருக்கு பின்னால் இல்லை. பெண்கள் தான் ஜாதி ஒழிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

சரித்திரத்தில் திருப்பு முனைகளை முன் கூட்டியே ஊகித்துச் சொல்வது எல்லோராலும் இயலாத காரியம். தீர்க்க தரிசனம் படைத்தவர்கள் என்று யாரைக் கூறுகிறோம்? வருங்காலத் தலைமுறைகளுக்கும் பயன்படுகிற நெறிமுறைகளை வாழ்வாலும், வாக்காலும் உணர்த்திவிட்டுச் செல்கிறவர்களைத்தான் அப்படிக் குறிப்பிடுகிறோம்.

மற்றவர்களின் கூகுள் பிளஸ் Page வசதியை உபயோகப்படுத்துவதற்கு

கூகுள் பிளஸ் தளத்தில் Page வசதியை கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இதன் மூலம் பெரும்பாலானவர்கள் தங்கள் நிறுவனங்களுக்கும், வலைப்பூக்களுக்கும் தனியாக Page உருவாக்கலாம்.
தற்பொழுது இந்த கூகுள் பிளஸ் பக்கத்தில் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளனர். உங்கள் கூகுள் பிளஸ் பக்கத்தில் நீங்கள் மட்டுமின்றி உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உங்கள் நிறுவனத்தின் மேலாளர்களுக்கோ அட்மின் வசதியை அளிக்கலாம்.
இதன்மூலம் குழு உறுப்பினர்களுக்கு அட்மின் வசதியை கொடுக்கலாம். எப்படி அட்மின் வசதி அளிப்பது என கீழே பார்ப்போம்.

அட்மின் வசதியை வழங்குபவருக்கு:

முதலில் கூகுள் பிளசில் நுழைந்து உங்களின் Page திறந்து கொள்ளுங்கள். அடுத்து Setting பகுதிக்கு சென்று Google Settings என்பதை கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் உள்ள Managers என்பதை கிளிக் செய்யுங்கள்.

அதில் அட்மின் வசதி அளிக்க நினைக்கும் நபரின் மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும்.

நீங்கள் அவரின் மின்னஞ்சல் முகவரி கொடுத்து Invite பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு ஒரு Pop-up விண்டோ வரும், அதில் Continue என்ற பட்டனை அழுத்தவும்.

உங்களின் அழைப்பு அந்த மின்னஞ்சலுக்கு செல்லும். அவ்வளவு தான் உங்களின் வேலைமுடிந்தது, இனி நீங்கள் Invite செய்த நபர் என்ன செய்யவேண்டும் என பார்க்கலாம்.

அட்மின் வசதியை பெறுபவர்களுக்கு:

அதில் உள்ள Accept என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு இன்னொரு பகுதி ஓபன் ஆகும், அதில் இதே முகவரியில் தொடரவேண்டுமா இல்லை வேறு ஏதேனும் மின்னஞ்சல் முகவரியில் அட்மின் வசதி வேண்டுமா என கேட்கும். உங்கள் விருப்பப்படி தெரிவு செய்து கொண்டு கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும்.

Continue கொடுத்தவுடன் உங்களுக்கு அடுத்த பக்கம் ஓபன் ஆகும், அதில் உங்கள் User Id, Password கொடுத்து லொகின் செய்தால் போதும் அட்மின் வசதியை நீங்கள் பெற்று கொள்ளலாம்.

Note1: கூகுள் பிளஸ் பக்கத்தின் உரிமையாளர்(Owner) நினைத்தால் எந்த நேரத்திலும் இந்த அட்மின் வசதியை நீக்க முடியும்.

Note2: இந்த முறையில் அதிகபட்சமாக 50 நபர்கள் வரை அட்மின் வசதியை வழங்கலாம்.

மாரடைப்பு ஏற்பட காரணமாகும் மரபணுக்கள்


சரியான உணவு முறைகளை பின்பற்றாமல் கண்டபடி, அதிக உப்பு கொழுப்பு பண்டங்களை சாப்பிடும் குழந்தைகள் இன்று அதிகம்.

குழந்தைப்பருவ உடற்பருமன் தற்போது 40 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதுமட்டுமல்லாமல் குழந்தைகளின் வாழ்வில் தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்து கழிக்கும் நேரம் அதிகரித்து, பெற்றோருடன் பழகும் நிலைமை மாறி, தனிமை அதிகரித்து அதனால் Steroids உடலில் உற்பத்தியாகி "சின்ட்ரோம் X '' என்ற உடல் பருமன் நோய் உருவாகுகிறது.
இதனால் 30 வயதிற்குள்ளாகவே உடற்பருமன், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், ரத்தத்தில் நல்ல கொழுப்பு குறைந்து கெட்ட கொழுப்பு அதிகரித்து இருதய ரத்தக் குழாய்கள் தடித்துப்போய், அடைத்துப்போய் மாரடைப்பு ஏற்படுகிறது.

கெட்ட புரதச்சத்து ரத்தத்தில் அதிகரித்தல், நேரம் கெட்ட நேரத்தில் இரவு பகல் பாராமல் உட்கார்ந்து வேலை செய்தல், தூக்கமின்மை, தொலைக்காட்சி, கைபேசி மற்றும் கைபேசி டவரில் இருந்து வெளிப்படும் EMR என்ற மின்காந்த அலைகள் மற்றும் காற்று மற்றும் உணவு மாசுபடுதல் போன்றவைகளாலும் நோய்கள் ஏற்படுகிறது.

இதில் வியப்பான விஷயம் சீனர்களும், ஜப்பானியரும் கொழுப்பு உள்ள உணவு சாப்பிட்டாலும் அவர்களுக்கு மிகக்குறைந்த அளவே இருதய நோய் வருகிறது.

இதற்கு காரணம் அவர்கள் உடலில் உள்ள Geneகள் நல்ல கொழுப்பை ரத்தத்தில் அதிகரித்து அதிக கொழுப்பினால் வரும் ஆபத்தை தடுக்கிறது.

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கவழக்கங்கள் இன்றியமையாத ஒன்று



1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும்.

2. சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.

3. அதேபால் சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது, அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை(Bloated with air) உருவாக்குகிறது.

எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

4. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி(Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

5. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள்(Don’t Loosen Your Belt). ஏனெனில் அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

6. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.

7. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய்(டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.

சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது.

8. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும். மருத்துவத் துறையில் நவீன மூட நம்பிக்கைகள் பலவும் இதுபோல உண்டு.

பென்டிரைவில் உள்ள சிக்கல்களை சரிசெய்வதற்கு



நாம் அன்றாடம் பல கணணிகளில் பலதரப்பட்ட காரணங்களுக்காக பென்டிரைவ்களை பயன்படுத்துகின்றோம்.

இதனால் வைரஸ், மால்வேர்கள் உங்களது பென்டிரைவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். உங்களது முக்கியமான கோப்புக்களை அழித்து விடுவதுடன், கோப்புறை குறுக்குவழிகளை(folder shortcuts) உருவாக்கிவிடும்.

சில சமயங்களில் எப்படி உங்களது கோப்புக்களை மீள பெறுவது என தெரியாமல் இருக்கும். பின்வரும் வழிமுறையை பின்பற்றி இந்த பிரச்சனையை சரிசெய்து கொள்ளுங்கள்.

முதலில் Command Prompt யை திறப்பதற்க்கு Run–> சென்று அங்கே “cmd” என டைப் செய்யுங்கள்.

பின்னர் திறக்கும் திரையில் attrib -h -r -s /s /d h:*.* என டைப் செய்யுங்கள்.

மேலே காணப்படும் h என்பதற்கு பதிலாக உங்களது சரியான பென்டிரைவின் Drive Letter-ஐ கொடுங்கள்(இதை உங்களது My Computer யில் கிளிக் செய்து பார்க்கலாம்).

இனி உங்களது பென்டிரைவில் சென்று அங்கு உள்ள தேவையற்ற shortcutsகளை அழித்து விடுங்கள்.

இவ்வாறு செய்தால் உங்களது  பென்டிரைவின் கோப்புறை குறுக்குவழி(Folder Shortcut) சிக்கலை சரிசெய்து விடலாம்.

Thanks to Lankasri.com