மொத்தப் பக்கக்காட்சிகள்

12/15/2011

ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்

ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் கிளாஸ்பைட்ஸ் தளத்தை விஷேசமானது என சொல்லலாம்.காரணம் மிகவும் எளிமையான அதே நேரத்தில் சுவாரஸ்யமான முறையில் பாடங்களை கற்று கொள்ள கிளாஸ்பைட்ஸ் வழி செய்வது தான். என்ன தான் ஆங்கிலம் கற்க வேண்டும்,ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும்,ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் மணிக்கணக்கில் பாடங்களை கேட்கவே ,இலக்கணத்தை அறிந்து கொள்ளவோ பலருக்கும் பொறுமை இருக்காது. முதல் பாடத்தை புரிந்து கொண்டு மனதில் பதிய வைப்பதற்குள் அடுத்த பாடம் ஆரம்பமாகிவிட்டால் மிரண்டு போய் விடுவார்கள்.ஆசிரியர் எளிதாக சொல்லி கொடுத்தாலும் கூட கவனிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.


ஆர்வம் இருந்தும் கூட பலர் இந்த தடைகளை தாண்டி ஆங்கில மொழியை கற்பதற்கு தேவையான உத்வேகத்தை பெற முடியாமல் போய்விடுகிறது. இந்த பிரச்சனைக்கு தான் கிளாஸ்பைட்ஸ் குறும்பாடங்கள் மூலம் அழகாக தீர்வு காண்கிறது.விடியோ வடிவிலான குறும்பாடங்கள். கல்வி உலகில் இப்போது குறும்பாடங்களை தான் நிபுணர்கள் கற்பதற்கான எளிய வழியாக முன்வைக்கின்றனர்.குறும்பாடங்கள் என்றால் பாடங்களை சின்ன சின்னதாக பிரிதது ஒரே நேரத்தில் ஒரு அம்சத்தை மட்டும் கற்றுத்தருதல் என புரிந்து கொள்ளலாம்.அதிக நேரம் தேவைப்படாமல் குறிகிய கால அளவில் பயிற்றுவிப்பதை இந்த பாடங்கள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன.
குறுங்கல்வி (மைக்ரோ லேர்னிங்)என்று சொல்லப்படும் இந்த வகை பயிற்றுவிக்கும் முறை இணையம் வழி கல்வி கற்பிப்பதிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கிளாஸ்பைட்ஸ் தளத்தில் காணகூடிய குறும்பாட வீடியோக்கள்ள எல்லாமே 2 நிமிடம் முதல் அதிக பட்சமாக 10 நிமிடம் வரை மட்டுமே ஓட்டக்கூடியவை .சராசரியாக பார்த்தால் 5 நிமிடங்கள் ஒடக்கூடியவை.எதையுமே

 வீடியோ கிளிப்பாக சிக நிமிடஙக்ள் பார்த்து ரசித்து பகிர்ந்து கொள்ளும் யூடியூப் தலைமுறைக்கு இந்த குறும் வீடியோக்கள் ஏற்றவை தான் இல்லையா?
மாணவர்கள் யூடியூப் வீடியாவை பார்த்து ரசிக்குமஉணர்விலேயே இந்த பாடங்களையும் பார்த்து மனதில் நிறுத்தி கொள்ளலாம். ஒவ்வொரு பாடத்திலும் ஏதாவது ஒரு அம்சத்தில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டிருக்கும்.வார்த்தை உச்சரிப்பு ,இலக்கண பயன்பாடு,கேள்வி கேட்கும் போது பயன்படுத்த வேண்டிய சொற்கள் என ஏதாவது ஒரு அம்சம் மட்டமே ரத்தின சுருக்கமாக கற்றுத்தரப்படும். மாணவர்களுக்கு நிச்சயம் இந்த கிளிப்கள் சுமையாக இருக்காது.ஆனால் சுவையாக இருக்கும். அதோடு குறிப்பிட்ட நேரத்தில் தான் பாடம் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.எப்போது விருப்பமோ அப்போது படித்து கொள்ளலாம்.எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம்.ஒரு பாடம் முடிந்த பின் அடுத்த குறும்பாடத்துக்கு போகலாம்.
உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் ஆங்கிலத்தில் சின்னதாக ஒரு தேர்வில் பங்கேற்க வேண்டும்.இது கூட மாணவர்களுக்கு எந்த நிலையிலான பாடஙக்ள் தேவை என்று பரிந்துறைப்பதற்காக தான்.அதன் பிறகு மாணவர்கள எந்த நிபந்தனையும் இல்லாமல் இஷ்டம் போல கற்கலாம். கிளாஸ்பைட்சின் சிறப்பு இத்தோடு முடிந்துவிடவில்லை.ஒரு விதத்தில் இது இணைய வகுப்பறை போல தான்.அதாவது இங்கு மாணவர்கள் நண்பர்களை தேடி கொள்ளலாம்.அவர்களோடு தொடர்பு கொண்டு பாடம் தொடர்பான குறிப்பு மறறும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
அந்த வகையில் இதனை கற்பதற்கான பேஸ்புக் என்றும் சொல்லலாம். உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் தங்களை பற்றிய விவரங்களை சமர்பித்து தங்களுக்கான பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம்.பேஸ்புக்கில் உள்ளது போலவே இந்த பக்கத்திலும் சுவர் உண்டு.இதில் மாணவர்கள் தங்கள் மனதில் உள்ளவரை பகிர்ந்து கொள்ளலாம்.இதை பார்த்து சக மாணவர்கள் கருத்து தெரிவிக்கலாம்.இவர்களும் மற்ற மாணவர்களின் சுவரில் உள்ளவரை படித்து உறையாடலாம்.
பாடங்கள் தொடர்பான கருத்து பரிமாற்றம் என்பதால் படிப்பதிலும் ஒரு ஈடுபாடு ஏற்படும்.சநதேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.கொஞ்சம் சோர்ந்து போனால் கூட மற்றவர்கள் ஊக்கபடுத்தலாம்.புதிய பாடங்களை சுட்டிக்காட்டலாம். பாடம் படிக்கும் உணர்வே இல்லாமல் ஏதோ இணைய நண்பர்களோடு உறையாடும் மகிழ்ச்சியான சூழலில் ஆங்கில அறிவை வளர்த்து கொள்ளலாம்.
கூரும்பாடஙகளை படிக்க துவங்கிய பின் மானவர்கள் தங்கள் முன்னேற்றத்தை தெரிந்து கொள்லவும் சுவையான வழிகள் இருக்கின்றன்.உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் பேசி வீடியோவில் பதிவு செய்து அதனை இங்கு சமர்பித்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் அதை பார்த்து திருத்தங்களை சொல்வார்கள்.இலக்கண ிழை உச்சரிப்பு போன்ற்வற்றை இப்படி பட்டை தீட்டி கொள்ளலாம்.வாசிப்பு திறனை வளர்த்து கொள்ள வலைபதிவு பக்கங்களை படித்து கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.வலைப்பதிவு எழுதியும் சமர்பிக்கலாம்.தேர்வு எழுதியும் சோதித்து பார்க்கலாம்.
இதைவிட இனிய வழி ஆங்கிலம் கறக இருக முடியுமா என்ன
இந்த தளத்தில் இன்னுமொரு சிறப்பம்சம் நம்மவர்கள் இதில் அதிக பேர் உறுப்பினராக உள்ளனர்.
இணையதள முகவரி;
http://classbites.com/



12/14/2011

உலக தினங்களின் பட்டியல்

காதலர் தினம், அன்னையர் தினம், நட்பு தினம் என ஒரு சில தினங்கள்தான் தற்போது இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது.
இவற்றுக்கே இதென்ன அன்னையர் தினம், நட்பு தினம் என்று தனித்தனியாக ஒரு தினம் என்று சலித்துக் கொள்பவர்கள் ஏராளம்.
இவர்கள் எல்லாம் இந்த பட்டியலைப் படித்துவிட்டு என்னத்தான் சொல்வார்களோத் தெரியவில்லை.
உலக தினங்களின் பட்டியல்

பிப்ரவரி 14, காதலர் தினம்
பிப்ரவரி 28, உலக றிவியல் தினம்
மார்ச் 2, உலக புத்தக தினம்
மார்ச் 8, உலக மகளிர் தினம்
மார்ச் 22, உலக தண்ணீர் தினம்

ஏப்ரல் 1, முட்டாள்கள் தினம்
ஏப்ரல் 7, உலக சுகாதார தினம்
ஏப்ரல் 22, உலக பூமி தினம்
ஏப்ரல் 25, உலக இறைச்சல் விழிப்புணர்வு தினம்

மே 1, உழைப்பாளர் தினம்
மே 8, உலக விலங்குகள் பாதுகாப்பு தினம்
மே 11, உலக ன்னையர் தினம்
மே 15, உலக குடும்பங்கள் தினம்
மே 18, உலக அருங்காட்சியக தினம்
மே 31, உலக புகையிலை எதிர்ப்பு தினம

ஜுன் 5, உலக சுற்றுச்சூழல் தினம்
ஜுன் 12, உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

ஜுலை 1, உலக நகைச்சுவை தினம்
ஜுலை 11, உலக மக்கள் தொகை தினம்

ஆகஸ்ட் 5, உலக நட்பு தினம்
ஆகஸ்ட் 12, உலக இளைஞர் தினம்

செப்டம்பர் 21, உலக அமைதி தினம்
செப்டம்பர் 26, உலக சுற்றுலா தினம்
அக்டோபர் 1, உலக முதியோர் தினம்
அக்டோபர் 5, உலக ஆசிரியர் தினம்
அக்டோபர் 10, உலக மனவளர்ச்சி குன்றியோருக்கான தினம்
அக்டோபர் 16, உலக உணவு தினம்
நவம்பர் 11, உலக நினைவூட்டல் தினம்
நவம்பர் 16, உலக பொறுமை தினம்
நவம்பர் 20, உலக குழந்தைகள் தினம்
நவம்பர் 21, உலக தொலைக்காட்சி தினம்
டிசம்பர் 1, உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர் 3, உலக உடல் ஊனமுற்றோர் தினம்
டிசம்பர் 10, உலக உரிமைகள் தினம்

FLYING FISH

12/12/2011

புங்க மர விதையில் பயோ டீசல்

பள்ளி மாணவியர் சாதனை


மயிலாடுதுறை அருகே, பள்ளி மாணவியர், புங்க மர விதையில் இருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை கொண்டு, கார் இன்ஜினை இயக்கிக் காண்பித்தனர்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த வடகரையில் உள்ள ஹாஜா சாரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியர், பள்ளி நிர்வாகி ஜியாவுதீன் மற்றும் முதல்வர் குணசேகரன் ஆகியோர் உதவியுடன், புங்க மர விதையிலிருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை கொண்டு, வாகன இன்ஜின்களை இயக்க முடியும் என கண்டுபிடித்துள்ளனர். ஹாஜா சாரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், நாகை கலெக்டர் முனுசாமி முன்னிலையில், மாணவியர் செயல் முறை விளக்கம் காண்பித்தனர். முதலில், டீசலை கொண்டும், பின் தாங்கள் கண்டுபிடித்துள்ள புங்க மர விதையிலிருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை கொண்டும், தொடர்ந்து கார் இன்ஜினை இயக்கிக் காண்பித்தனர். நிகழ்ச்சியில், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் திருவளர்ச்செல்வி, மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலர் சக்திவேல், தரங்கம்பாடி தாசில்தார் சூரியமூர்த்தி, தனி தாசில்தார் பாலச்சந்திரன், செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, மாணவியரினகண்டுபிடிப்பை பாராட்டினர்.