மொத்தப் பக்கக்காட்சிகள்

11/30/2011

நாலு டம்ளர் தண்ணீர் நோய்களை விரட்டும

மனித உடலில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீர் செல்களுக்கு ஆக்ஸிஜனை கடத்தும் ஆக்ஸிகரனியாக செயல்படுகிறது. நுரையீரலுக்கு சுத்தமான காற்றை அனுப்ப உதவுகிறது. உடல் வெப்ப நிலையை சீராக தக்கவைக்கிறது. மூட்டுக்களின் வழவழப்புத்தன்மையை பாதுகாக்கிறது.
தலை முதல் கால் வரை ஒவ்வொரு செல்லும் தண்ணீரின் தேவையை உணர்ந்துள்ளன. மனித மூளையின் செயல்பாட்டிற்கு 90 சதவிகிதம் தண்ணீர் தேவையுள்ளது. எனவே உடலில் நீர்ச்சத்து குறைய குறைய மூளையின் செயல்பாடு குறையும். இதனையடுத்து தலைவலி உள்ளிட்ட நோய்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கும். எனவே தண்ணீரை நாம் நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.
கலையில் கண்விழித்ததும் பல் துலக்கும் முன்பே 4 டம்ளர் தண்ணீர் அருந்தவேண்டும். பின்னர் பல் துலக்கி வாய் சுத்தம் செய்த பின்னர் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவுமே உட்கொள்ளக் கூடாது. 45 நிமிடங்களுக்குப் பின் வழக்கமான உணவை உட்கொள்ளலாம்.
தண்ணீர் மருத்துவம்
எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற ண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்:
உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள், வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள் சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி - 30 நாட்கள், மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) - 10 நாட்கள், புற்றுநோய் - 180 நாட்கள், காச நோய் - 90 நாட்கள். ஆத்திரட்டிஸ் யாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும். இந்த வழியில் பின்பற்றினால் அனைத்துநோய்களும் முற்றிலும் குணமாகும் அல்லது நோயானது மேலும் கடுமையாகாமல் கட்டுப்படும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 


பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும். நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள்.

முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம். மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது நோய் நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழலாம்.

தண்ணீர் குடித்தால் மட்டுமே 'பக்க விளைவு' வராது -மாறாக 'தண்ணி' அடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு 'பக்கா'வான விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே நிறைய தண்ணீர் குடிங்க, அந்தத் 'தண்ணி'யை மறந்துடுங்க...!
 


புனிதன்


புனிதன்

ருவன் வாழ் நாளில் பெரும் பகுதியை முறை தவறி கழித்து விட்டு திடிரென புனிதனாகி விட முடியுமா? அப்படி புனிதன் ஆனால் செய்த பாவத்திலிருந்து விடுதலை பெற முடியுமா?

முறையானது என்பதையும் முறைதவறியது என்பதையும் நாம் உடலை வைத்தே கணக்கு போடுகிறாம்.

ஒரு மனிதன் செய்யும் செயல்களுக்கு உடலும் ஒரு காரணம் என்றாலும் உடல் மட்டுமே முழு பொறுப்பாளி ஆகாதுமனதிற்கும், புத்திக்கும் நிறைய சம்பந்தம் உண்டு.

இயற்கையாகவே நல்ல சுபாவம் உள்ள ஒரு குழந்தை திருடர்கள் மத்தியில் வாழ்ந்தாலும் அதன் சுய தன்மை என்றாவது ஒரு நாள் வெளிப்படும்.

அப்படி ளிப்படுவதற்கு சற்று கால தாமதம் ஆனாலும் கூட அது நடந்தே தீரும்.

சுபாவத்திலேயே கெட்ட தன்மை இருந்தால் அவன் மகாத்மாக்களோடு வாழ்ந்தால் கூட ஒரு நாள் நிஜ சொரூபம் வெளிப்பட்டு விடும்.

ஒரு மனிதனின் குணாதிசயம் அவனது சுற்று புறத்தை மட்டுமே மையமாக கொண்டு அமைவதில்லை.

இது தான் இப்படி தான் என கூற முடியாத இயற்கை சுபாவத்தை பொறுத்தே அமைகிறது.

நல்ல பெற்றோருக்கு பிறந்த குழந்தை காமூகனாக திரிவதும் உண்டு.
கொலைக்காரனுக்கு பிறந்தவன் அகிம்சா மூர்த்தியாக அமைவதும் உண்டு.
எனவே ஒருவனை பிறப்பை வைத்தும், குலத்தை வைத்தும் எடை போட கூடாது.

ஒரு குப்பை மேட்டில் திடிரென தீப்பிடித்து கொண்டது என சொல்லலாம்.
ஆனால் அந்த தீ திடிரென பிடிப்பது இல்லைகுப்பையின் கனன்று கொண்டியிருக்கும் சிறு நெருப்பு பொறி பெரு நெருப்பாக மாறிவிடும்
அதே போல தான் ஒரு மனிதனின் குணம் மாறுதல்.

ஒரு நாள் இரவு விடிந்தவுடன் எவனுமஉத்தமனாகி விட முடியாது.
உத்தமன் ஆவதற்கான அறிகுறிகள் அவனிடம் ஆரம்ப காலம் முதலே இருந்திருக்கும்.

உள்ளுக்குள் இருந்த நெருப்பை திடிரென வீசும் காற்று பெரிதாக்கி விடுவது போல் சில சம்பவங்கள் மனித தன்மையை மாற்றுகின்றன.
அதனால் எழுபது வயது வரை திருடனாக இருந்தவன் எழுபத்தியோராவது வயதில் திருந்தி விடுவது அதிசயம் இல்லை.
அதற்காக அவன் அதற்கு முன்னால் செய்த தவறுதலுக்கு விதி தத்துவப்படி தண்டனை பெறாமல் தப்பிக்க இயலாது

அதற்காக  அப்படி திருந்துபவனை ஏற்றுக் கொள்ளாமல் சந்தேகப்படுவதும் புறக்கணிப்பதும் மனித தர்மம் அல்ல.